மிக்ஸ்டு வெஜிடபுள் சட்னி

தேதி: October 7, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (8 votes)

 

கேரட் - 3
கோவக்காய் - 10
கத்தரிக்காய் - 3
தக்காளி - 3
எள் - 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 8
தேங்காய் துண்டுகள் - சிறிது
புளி - சிறு எலுமிச்சைபழ அளவு
சீரகம் - 2 தேக்கரண்டி
பூண்டு - 8 பல்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கடலைபருப்பு - அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காய தூள் - சிறிது


 

காய்கறிகளை கழுவி சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் பச்சை மிளகாயை வதக்கி வைத்து கொள்ளவும்.
அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி தக்காளியை தவிர மற்ற காய்கறிகளை வதக்கவும்.
காய்கறிகள் பாதி வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். சிம்மில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
அனைத்தும் நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து விடவும். நன்கு ஆற விடவும்.
மிக்ஸியில் முதலில் பச்சை மிளகாய், எள், பூண்டு, தேங்காய் துண்டுகள், புளி, உப்பு, சீரகம் இவை அனைத்தையும் நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். (தேவையானால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளவும்.)
அரைத்த விழுதுடன் வதக்கி வைத்திருக்கும் காய்கறிகளையும் சேர்த்து அரைத்து கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதில் அரைத்து வைத்திருக்கும் சட்னியை போட்டு கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான வெஜிடபுள் சட்னி ரெடி. இந்த சட்னி கோஸ், பீர்க்கங்காய், சுரைக்காய், புடலங்காய், முள்ளங்கி மேலும் அனைத்து காய்கறிகளிலும் செய்யலாம். சூடான சாதத்தில் நெய் போட்டு சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கும் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இப்படிக் கூட ஒரு சட்னி செய்ய முடியுமா? சூப்பரா இருக்கும் போல இருக்கே.

‍- இமா க்றிஸ்

I like this very much.. This is very healthiest chutney. Your recipe and photo are nice

ரொம்ப வித்தியாசமான அதே சமயம் ஆரோக்கியமான சட்னி குறிப்பு கொடுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள். மிகவும் பிடித்திருக்கிறது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அனைத்து காயும் போட்டு சட்னியா வித்யாசமா இருக்கே சூப்பராவும் இருக்கு,நான் பீர்க்கங்காயில் மட்டுமே செய்வேன் இதுவும் புதுமையா இருக்கு கண்டிப்பா ட்ரை பன்னனும் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நல்ல ஆரோக்கியமான குறிப்பு விருப்பபட்டியில் சேர்த்துட்டேன் வாழ்த்துக்கள்

சூப்பரான குறிப்பு. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். பார்க்கவே ஆசையை தூண்டுது. வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சுந்தரி,
வெஜிடபிள் சட்னி ரொம்ப நல்லாயிருக்கு! நல்ல ஹெல்தியான சட்னியாவும் இருக்கு! வாழ்த்துக்கள்!
நான், பீன்ஸ், கேரட், குடைமிளகாய் எல்லாம் ப்ளைனாக வதக்கி வைத்து செய்வது கேள்விப்பட்டு இருக்கேன். ஆனால், கோவக்காய், கத்திரிக்காய், தேங்காய், எள், எல்லாம் சேர்த்து நீங்க செய்திருப்பது சூப்பரா இருக்கு!! கட்டாயம் ட்ரை பண்ணி பார்க்கிறேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ரொம்ப நல்லாயிருக்கும் இம்மா.இங்கு ஆந்திராவில் எல்லா காய்கறிகளிலும் சட்னி பண்ணுவாங்க.நான் கொஞ்சம் வித்தியாசமா எல்லாம் கலந்து செய்வேன்.காய்கறிகள் விரும்பாத என் பசங்களுக்கு இந்த சட்னின்னா ரொம்பா பிடிக்கும்.கட்டாயம் செய்து பார்த்து சொல்லுங்க நல்லாயிருந்ததான்னு.

மிக்க நன்றி கெளதமி, செய்து பார்த்துட்டு சொல்லுங்க நல்லாயிருந்ததான்னு.

ரொம்ப நன்றி வனிதா.இந்த சட்னி ரொம்ப ருசியா இருக்கும் அதே சமயம் சத்தானதும் கூட.

வாழ்த்துக்களுக்கு நன்றி சுவர்ணா.புதுமையா மட்டுமில்லாம சத்தான சுவையான சட்னியும் கூட கட்டாயம் செய்து பாருங்க

ரொம்ப நன்றி பாத்திமா.

நன்றி லாவண்யா,கட்டாயம் செய்து பாருங்க

கட்டாயம் செய்து பாருங்க ஸ்ரீ.எல்லா காய்கறிகளிலும் இந்த முறையில் சட்னி செய்யலாம் வாழ்த்துக்களுக்கு நன்றி.

இபப்டியும் சட்னி செய்யலாமா.சூப்பரா இருக்கு சுந்தரி வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வாழ்த்துக்களுக்கு நன்றி குமாரி

நேத்து தான் உங்க சட்னி பண்ணினேன், நல்ல சுவை, சத்தானதும் கூட, மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

செய்து பார்த்து நல்லாயிருக்குன்னு சொன்னதற்க்கு மிக்க நன்றி சுகா.