உருளைக்கிழங்கு புட்டு

தேதி: June 29, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 7
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 4
துருவிய தேங்காய் - அரை கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். பின் தோலுரித்து கைகளால் லேசாக மசித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும் பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
பின் உருளைக்கிழங்கு, உப்பு, துருவிய தேங்காய் போட்டு கிளறி இறக்கவும்.


இதை சாம்பார் சாதத்தோடு பரிமாறவும்.

மேலும் சில குறிப்புகள்