சன்னா-பாலக் கிரேவி

தேதி: October 8, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

 

சன்னா - அரை கப்
பாலக் - ஒரு கப்
சீரகம் - கால் தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - இரண்டு (அரைத்துக் கொள்ளவும்)
இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
கசூரி மேத்தி - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப


 

பாலக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும். சன்னாவை 6-8 மணி நேரம் ஊற வைத்து, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
கீரையில் சிறிது தண்ணீர் ஊற்றி 2-3 நிமிடம் மைக்ரோவேவ் அவனில் வேக வைத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். பின் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் அரைத்த தக்காளி விழுது சேர்த்து சுருள வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் சேர்த்து கிளறவும்.
இப்போது வேக வைத்துள்ள சன்னாவை சேர்த்து கிளறவும்.
இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
உப்பு, காரம் சன்னாவில் இறங்கியதும் அரைத்து வைத்துள்ள கீரை விழுது சேர்த்து ஒரு கொதி விடவும். உப்பு,காரம் சரிப்பார்க்கவும்.
பின்னர் கசூரி மேத்தியை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
சத்தான, சுவையான சன்னா-பாலக் கிரேவி தயார். பரிமாறும் போது சிறிது வெண்ணெய் சேர்த்து பரிமாறலாம். இது பூரி மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன்.

விரும்பினால் கரம் மசாலா சேர்த்து கொள்ளலாம். பாலக் கீரையை அரைக்காமல், பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம். அப்படி செய்யும் போது, சிறிது சன்னாவை மிக்சியில் அரைத்து சேர்த்தால் கிரேவி திக்காக வரும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சம சூப்பர் கலர்... சம சூப்பர் சைட் டிஷ்... :) பார்ட்டிக்கு ட்ரை பண்ண வேண்டிய மெனு. ரொம்ப நல்லா இருக்கு ஹர்ஷா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரெட் கிரீன் காம்பினேஷன் ஆள சுண்டி இழுக்குதுபா.. நீங்க கடைசில கொடுத்த குறிப்பு படி கீரையை கட் பண்ணியும் செஞ்சு பாக்கறேன் கலர் காம்பினேஷனுக்காகவே;)

Don't Worry Be Happy.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

அன்பு சன்னா என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும் அதும் உங்க கடைசி படம் அருமையா இருக்கு,வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வனிதா,
முதலாவதாக வந்து பதிவிட்டதற்கு மிக்க நன்றி.பார்ட்டிக்கும் இந்த டிஷ் நல்லா இருக்கும்.செய்வதும் ஈசி.கண்டிப்பா செய்து பாருங்க.

ஜெய்,
சுவையும் ஆளை சுண்டி இழுக்கும்.கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

குமாரி,
சன்னா பிடிக்குமா?அப்படினா கண்டிப்பா செய்து பாருங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

குறிப்பு போட்டோ பாத்துட்டு நான்-வெஜ் ன்னு நினைச்சுட்டேன், கலர் சூப்பர். கண்டிப்பா டேஸ்ட் சொல்லவே வேண்டாம். வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி,
கண்டிப்பா செய்து பாருங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.