அவசரம் உதவுங்கள்

அறுசுவை தோழிகளே !
வணக்கம் எனக்கு முதல் குழந்தை 45days தினமும் வாந்தி குமட்டல் இதானால் ஏப்பம் பெரும் ப்ரோப்லேம இருக்கிறது இரவெலாம் தூங்க இயலவில்லை . ஏப்பம் சிரம பட்டு விடுகிறேன் உடனே வர மாட்டேன்குது , மருத்துவரிடம் சென்றதுக்கு காஸ் என்று ஜெலுசில் கொடுத்தார்கள், அப்படியும் சரியாக வில்லை , தினமும் பெப்சி koke என்று பானங்களை அருந்துகிறேன் , ஏப்பம் ப்ரோப்ளேதினால் மூச்சு விட முடியாமல் திணறுகிறேன் தொண்டையில் எதோ அடிப்பது போன்றே உள்ளது , எனக்கு கை வைத்தியம் சொல்லுங்கள் அவசரம் தோழிகளே நான் தனியாக சவுதியில் இருக்கிறேன் , ஆலோசனை சொல்ல நீங்கள் மட்டுமே , என் kulanthaiku இதனால் மூச்சு திணறல் வந்துடுமோ என்று பயமா இருக்கிறேன் .

sara sure

நீங்கள் முதலில் பயப்படவேண்டாம். டாக்டரிடம் காட்டிட்டீங்கல்ல. காரணம் சொல்லிட்டாங்கல்ல. கவலைவேணாம்ப்பா.....

தோழி நீங்கள் கூறியது புரியவில்லை, குழந்தை பிறந்து 45நாட்களா?இல்லை கருவுற்று 45நாட்களா?
குழந்தை பிறந்து 45நாட்கள் என்றால் நான் கூறியதுபோல இஞ்சி,பூண்டு சேர்த்து சாப்பிடலாம்.
இல்லை கருவுற்று 45 நாட்கள் என்றால் இஞ்சி,பூண்டு எப்பவும் போல சிறிதாக சேர்ப்பது நல்லது.....அதிகம் சேர்க்கக்கூடாது....பெருங்காயம் சேர்த்துக்கலாம்.
கருவுற்ற காலத்தில் இது சகஜம்தான்.
கவலைப்படாதீர்கள்........சந்தேகமிருந்தால் கேளுங்கள்.......

தயிர் சாப்பிடுவீங்கன்னா அதனுடன் இஞ்சி இரண்டுவில்லை வைத்து அரைத்து சேர்த்து சாப்பிடுங்கள்.ரசம்,சாம்பார் போன்றவற்றில் பெருங்காயம் சேர்த்துக்கொள்ளுங்கள்....பூண்டு சேர்த்துக்கொள்ளுங்கள்......வாயு பறந்துவிடும்.....பிள்ளைக்கு வருமென கவலைவேணாம்ப்பா.......
குமட்டல் உங்களுக்கா?இல்லை குழந்தைக்கா?

பெப்ஸி,கோக் போன்றவை வேண்டாம்.உடலுக்கும்,குழந்தைக்கும் நல்லதல்ல.

சாப்பாட்டில் இஞ்சி,பூண்டு,சீரகம்,சோம்பு,பெருங்காயம்,போன்றவை உங்களின் ஜீரணம் வாயுக்கும் பலனலிக்கும். குழந்தையின் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.....

ஏப்பம் விட ரொம்ப சிரமப்படும் வேலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு சிட்டிகை தூளுப்பு சேர்த்து குடித்து பாருங்கள் ஏப்பம் வந்துவிடும்.

அல்லது எலுமிச்சை சாறில் ஒரு டம்ளர் தண்ணீர் உப்பு சேர்த்து அருந்துங்கள் ஏப்பம் வந்துவிடும்.....முயற்சியுங்கள் தோழி.......

தோழி sara முதலில் ஜெலுசில் கோக் பெப்ஸி போன்றவைகள் குடிப்பதை நிறுத்துங்கள் அது குழந்தயை பாதிக்கும் சில சமயம் கரு சிதைவு கூட நேரிடும் இளம் சுடு தண்ணீர் அதிகமாக குடித்தாலே வாயு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்

Sara, உங்களுக்கு ரேணுகா பதில் சொல்லி இருக்காங்க, பாருங்க. அவங்க சொன்னது போல கேள்வி இன்னும் தெளிவாகக் கொடுத்து இருக்கலாம்.

//kulanthaiku இதனால் மூச்சு திணறல் வந்துடுமோ என்று// அப்படி ஒன்றும் ஆகாது, யோசிக்காதீங்க.

எந்த உணவு வாயுத்தொல்லைக்குக் காரணம் என்று தோன்றுகிறதோ அதை இனிமேல் தவிர்க்கலாம்.

டாக்டர் ஜெலுசில் கொடுத்தால் எடுத்துக் கொள்ளுங்கள், நிறுத்த வேண்டாம். அதனால் பாதிப்பு எதுவுமே வராது. கோக், பெப்சி எல்லாம் அளவோடு இருக்கட்டும். அவை மருந்துகள் அல்ல. ஆனால் இவற்றால் நிச்சயம் பயப்படும்படியான பாதிப்புகள் இராது, யோசிக்காதீங்க.

‍- இமா க்றிஸ்

renuka, nafi, imma ...
தோழிகளே மிக்க நன்றி ...

உங்களுடைய உண்மையான அக்கறையான பதிலுக்கு மிக்க நன்றி ,மன்னிக்கவும் . நான் கருவுற்று 45 நாட்கள் ஆகின்றது . மருத்துவர் பூண்டு பெருங்காயம் அதிகம் வேண்டாம் என்றார்கள் , நான் இருபது சவுதி என்பதால் இங்கு மருத்துவர்கள் நம்ம உரு மாதிரி மருந்துகளை கடைபிடிகிரர்கல என்று தெரிய வில்லை . இதாலம் எந்த டைம் ல் குடிக்கணும் , தொண்டையை இறுக்குவது போன்ற உணர்வே உள்ளது, உங்களுடைய மருந்து குறிப்புகளை எடுத்து கொள்கிறேன் . நான் எலுமிச்சை சாறு அருந்தலாம ?

renuka, nafi, imma ...
தோழிகளே மிக்க நன்றி ...

உங்களுடைய உண்மையான அக்கறையான பதிலுக்கு மிக்க நன்றி ,மன்னிக்கவும் . நான் கருவுற்று 45 நாட்கள் ஆகின்றது . மருத்துவர் பூண்டு பெருங்காயம் அதிகம் வேண்டாம் என்றார்கள் , நான் இருபது சவுதி என்பதால் இங்கு மருத்துவர்கள் நம்ம உரு மாதிரி மருந்துகளை கடைபிடிகிரர்கல என்று தெரிய வில்லை . இதாலம் எந்த டைம் ல் குடிக்கணும் , தொண்டையை இறுக்குவது போன்ற உணர்வே உள்ளது, உங்களுடைய மருந்து குறிப்புகளை எடுத்து கொள்கிறேன் . நான் எலுமிச்சை சாறு அருந்தலாம ?

தோழி,
முதலில் வாழ்த்துக்கள்,பொதுவாக இந்த நேரத்தில் இதுபோன்ற சமிக்கைகள் இருப்பது சகஜம்தான். நீங்கள் தேங்காய் ,எண்ணையில் பொரித்த உணவுகள், உருளை,கருணை போன்ற கிழங்குகளை கொஞ்சநாள் ஒதுக்கி வையுங்கள்.
இஞ்சி,பூண்டு,பெருங்காயம் இவற்றை முதல்மூன்று மாதங்களுக்கு அதிகம் சேர்க்கவேண்டாம்னு சொல்வது சரிதான். அது உடல் சூட்டை அதிகரிக்க செய்யும் என்பதால்.
ஆனால் நாம் முன்பு எப்படி உபயோகித்தோமோ(அதாவது தினம் ரசத்தில் இரண்டு பூண்டு பல் சேர்த்திருந்தால்) அந்த அளவை குறைக்க வேண்டியது இல்லை. அதே அளவு எடுத்துக்கலாம். மேலும் இன்க்சியும் அப்படித்தான்.மிகவும் கடுப்பாக( இஞ்சிக்காபி போல) அருந்தாமல். ஒரு பூண்டு பல் அளவிற்கு தட்டி தயிரில் சேர்த்து சாப்பிடலாம். அதேபோல பெருங்காயம், இரண்டு சிட்டிகை ரசத்தில் சேர்த்து கொள்ளலாம். ஓம்பு,சீரகம் சேர்த்து கொள்ளலாம்.
இது எவ்விதத்திலும் (அளவோடு இருக்கும் பட்சத்தில்)உங்களையும் உங்கள் குழந்தையையும் பாதிக்காது.
சிறிது நாளில் இந்த நிலை மாறிடும். அதிக அடைக்கும் ஏப்பம்போல வரும்நேரங்களில் முன் சொன்னதுபோல வெறும் உப்பு தண்ணீரோ,அல்லது எலுமிச்சை உப்புநீரோ சேர்த்து குடிக்கலாம்.தவறில்லை.எலுமிச்சை குமட்டலையும் நிறுத்தும். ஆப்பிள் இப்போ வேண்டாம் அது குமட்டல் மற்றும் எதுக்கலிப்பு போன்றவற்றை அதிகரிக்கும்......... தெளிவாயாச்சா.....:))
இன்னும் சந்தேகம் இருந்தால் "தாய்மையடைந்த பெண்களுக்கான இழையில்" முதலிலிருந்து படித்து பாருங்கள்......உங்களுக்கு தெளிவாகலாம்....மேலும் சந்தேகம்னா அதே பகுதியில் கேளுங்கள்......:))

உங்களுக்கு வயிரு உணவுக்குழாய் நன்றாக புண்னாகி இருக்கிறது நீங்கள் சாப்பாட்டில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மிளகோ மிள்காயோ புளிப்போ காரமோ குண்டூசி முனையளவு கூட சேர்க்காமல் இருந்து பாருங்கள் இட்லி தயிர் அல்லது ஜீனி அல்லது தேங்காய் பொட்டுகடலை உப்பு வைத்து மிளகாய் வைக்காமல் துவையல் மதியம் தயிர் சாதம் அதே துவையல் அல்லது உரைப்பு சேர்காத கீரை இரவு இட்லி உரைப்பில்லாத துவையல் அல்லது நெய் ஜீனி அல்லது தயிர்
பால் அறவே குடிக்க கூடாது உள்ளே சென்றதும் அமிலமாகும் வேண்டாம் தயிர் காலையில் உரைஊற்றி மதியம் எடுத்துக்கனும் மதியம் உரைஊற்றி இரவு எடுத்துக்கனும் இரவு உரை ஊற்றி காலை எடுத்துக்கனும்
ஊறுகாய் அரவே கூடாது ஓரிரு நாளில் மாற்றம் தெரியும் தெரிந்தால் ஒரு வாரம் பத்து நாள் கடைபிடித்தால் புண் முற்றிலும் மாறிவிடும்
உப்பு கண்டம் உரைப்பு சேர்க்காத கருவாடு சேர்த்துகொள்ளலாம் மணத்தக்காளிகீரை மற்றகீரைகள் மிளகாய் சேர்க்காமல் சேர்க்கலாம்
கடையில் விற்கும் எந்த பானமும் கூடாது ஆசிட் உள்ள பழங்கள் கூடாது நெய் ஜீனி சேர்க்கலாம் பருப்பு செரிக்க சிரமப்படும் இடியாப்பம் சேர்க்கலாம்
இஞ்சி பூண்டு சீரகம் போன்ற எந்த பொருளும் சேர்க்க வேண்டாம் ஒரு இரண்டு நாள் நான் சொன்ன சாப்பாட்டு முறையில் இருந்து பார்தாலே தெரிந்து விடும்
எழுமிச்சை அறவே கூடாது

நீங்கள் சொன்னதை எல்லாம் செய்து பார்த்து சொல்ட்கிறேன்

நீங்கள் சொன்னதை எல்லாம் செய்து பார்த்து சொல்ட்கிறேன்

மேலும் சில பதிவுகள்