Prunes என்றால் என்ன?

Prunes என்ற உலர் பழம் பற்றி சமீபத்தில் நிறைய கருத்துக்கள் கேள்விபடுகிறேன்.
Prunes என்றால் என்ன?
அது ஒரு வகை உலர் பழம், சமையலுக்கு பயன்படுத்தலாம் என்ற இரு விஷயங்கள் மட்டும்தான் இதுவரை எனக்கு தெரியவந்துள்ளது.

இதை எவ்வாறு சமையலுக்கு பயன்படுத்துவது?
மருத்துவ குணம் என்ன?

இதைப்பற்றி இன்னும் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.....

prunes - dried different types of plums
இரும்புச்சத்து மிகுந்தது.
இதை அப்படியே சாப்பிடலாம். சமையலில் என்றால் ஜாம் செய்யலாம். desert ல பயன் படுத்தலாம்.

ponni

மலச்சிக்கலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு ரெடிமேட் Prune Juice இங்கு கிடைக்கிறது. பெரியவர்கள் ஒன்று அல்லது இரண்டு பழங்கள் தினமும் இரவு சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. Even doctor refers prunes for constipation here.

99% Complete is 100% Incomplete.

நன்றி பொன்னி, கலாதேவி. இருவருக்கும் மிக்க நன்றி. இது இங்கு (இந்தியாவில்) கிடைக்குமா? இதைப்பற்றி இன்னும் ஏதேனும் தெரிந்தால் கூறுங்கள். சிறுபிள்ளைகளுக்கும் கொடுக்கலாமா? அவர்களுக்கு எப்படி பக்குவபடுத்துவது? அல்லது பச்சையாக கொடுக்கலாமா?

KEEP SMILING ALWAYS :-)

யாருக்கேனும் Prunes பற்றி தெரியுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.....

KEEP SMILING ALWAYS :-)

புரூண்ஸ் பழம் உடம்புக்கு நல்லது. முக்கியமா அதில் ஃபைபர் இருப்பதால் கான்ஸ்டிபேஷனுக்கு நல்லது. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஏற்றது. ஜூஸ், கேக், ஜாம், இனிப்புகள், என பல விஷயத்தில் பயன்படுத்தலாம். அதிகப்படியான இரும்புச்சத்து கொண்டது. அதிக ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். குழந்தைகளூக்கும் புரூன்ஸ் ஜூஸ் நீரில் கலந்தோ அல்லது ட்ரை புரூன்ஸ் நீரில் ஊற வைத்தோ பருக கொடுக்கலாம். கான்ஸ்டிபேஷனுக்கு நல்லது. வளர்ந்த குழந்தைகளூக்கு என்றால் பழுத்த பழமும் கூட உண்ண கொடுக்கலாம். - உங்களுக்காக நெட்டில் தேடி பிடிச்ச தகவல் இவ்வளவே!!! :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ப்ரூன்ஸ் விட்டமின் சி அதிகம் கொண்டது.தோழிகள் கூறியுள்ளது போல் நார்ச்சத்து அதிகம்.அதனால் மல சிக்கலை போக்கும்.6 மாத குழந்தை முதல் வயதானவர்கள் வரை சாப்பிடலாம்.

நம் நாட்டிலும் கிடைக்கும்னு நினைக்கிறேன்.சூப்பர் மார்க்கெட்களில் ட்ரை ஃப்ரூட்ஸ் செக்ஷனில் பாருங்க.

சுவையில் சிறிது புளிப்புத்தன்மை கொண்டது.சிறு குழந்தைகளுக்கு கொடுப்பதானால் ஃப்ரெஷ் பழங்களை வேக வைத்து,அரைத்து கொடுக்கலாம்.உலர் பழங்கள் என்றால் நீரில் ஊற வைத்து அரைத்தும் கொடுக்கலாம்.

உங்க பொன்னான நேரத்த செலவழிச்சு இத்தன விஷயம் சொன்னதுக்கு ரொம்ப நன்றி வனிதாக்கா

KEEP SMILING ALWAYS :-)

சூப்பர் மார்கெட்ல தேடி பாக்குறேன்.
///குழந்தைகளுக்கு கொடுப்பதானால் ஃப்ரெஷ் பழங்களை வேக வைத்து,அரைத்து கொடுக்கலாம்.உலர் பழங்கள் என்றால் நீரில் ஊற வைத்து அரைத்தும் கொடுக்கலாம்./// குழந்தைக்கு கொடுக்கும் பக்குவமும் சேர்த்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி அன்பு.

KEEP SMILING ALWAYS :-)

ஹாய் நாகா ராம்,

ப்ரூன்ஸ் இந்தியாவில் கிடைக்குதுப்பா.. அரேபியன் டேட்ஸ் இருக்குமே அதே போலத்தான் பார்க்க இருக்கும்..

எங்க வீட்ல கூட ஒரு பாக்கெட் 5 மாதங்களா ஃப்ரிட்ஜ் ல தூங்கிட்டுதான் இருக்கு.. ;( கொட்டை நீக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு கலிஃபோர்னியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சரக்கு (பழம்) இது.. இதில வேற வெரைட்டிகளோ, ஃப்ரெஷ் பழமாவே கிடைக்குதான்னோ எனக்குத் தெரியலைப்பா.. இங்க ஹைதிராபாத்ல கராச்சி பேக்கரி ஃபேமஸ்னு அங்க போய் மனசுக்குப் பட்டதெல்லாம் என கணவர் ஒரு நாள் அள்ளிட்டு வந்தார்.. அதில ஒன்னாதான் இந்த ப்ருன்ஸ் பாக்கெட் இருந்தது..

தோழிகள் எல்லாம் சொன்னது போல் ஆண்டிஆக்சிடெண்ட்,நார்ச்சத்து இத்யாதி இத்யாதி சத்துக்கள் நிறைந்தது தான்.. பதப்படுத்தப் பட்ட உணவுப்பொருள்னு படிச்சதுமே எனக்கு சாப்பிடும் எண்ணம் போய் விட்டது.. நெட்டில் தேடிப் பார்த்தேன் டயட்டீசியன்கள் நன்றாக மார்கெட் செய்திருந்தார்கள். கர்ப்ப்பகால நார்ச்சத்து தேவைக்கு உகந்தது அப்படினுலாம் போட்டிருந்தாங்க...

ஆனா இது நம்ம நாட்டில ஏற்கனவே கிடைக்கிற பழங்களில் இருக்கிற சத்துக்கள் தான்.. புதுசா ஒன்னும் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியலை.. டேஸ்ட்டும் விரும்பி சாப்பிடுவது போல் பிரமாதமா இல்லை.. கொஞ்சம் ஜூசியா மைல்டா புளிப்பு சுவையோடதான் இருக்கு.. கர்ப்பிணிகளுக்குப் பிடிக்குமோனு என் அண்ணிக்குக் கொடுத்தேன்.. சாரி.. அவங்களுக்கும் பிடிக்கலை:( என்னென்ன உணவுவகைகளிலே பயன் படுத்தலாம்னு அந்த பாக்கெட்லயே போட்டிருக்கு.. ஆனா நான் உபயோகப் படுத்திப் பார்க்கலை...

340Gms pack 180 ரூபாய். பேக் செய்த நாளில் இருந்து 18 மாதங்கள் வரை வைத்து சாப்பிடலாம். வாங்கி வந்த அன்று பிரித்து கஷ்டப்பட்டு ரெண்டு நாள் சாப்பிட்டுப் பார்த்தது தான்..மெதுவா முடிந்தா சாப்பிட்டுக்கலாம்னு ஃப்ரிட்ஜ்ல வைத்துவிட்டேன்... ;)

நம் ஊரில் நம்மைச் சுற்றி விளையும் உணவுப் பயிர்களிலேயே எல்லா சத்துக்களும் இருக்கின்றன அதை சரி வர சாப்பிட்டல் போதும்.. நமக்குத் தேவையான சத்தும் கிடைக்கும் நம் விவசாயமும் அழியாமல் இருக்கும்.. ஆகவே இறக்குமதி செய்யப்பட்ட ப்ரிசர்வேட்டிவ் சேர்த்த உணவுப் பொருளை வாங்கி சாப்பிட வேண்டாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.. :)

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி :-)

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்