"மனம்(மணம்) பறக்கும் அரட்டை......."

வாருங்கள் தோழிகளே,
கவலைகளைப் பகிர்ந்து மனம் மகிழ்வோம், சமையல் கற்று மணம் பறப்புவோம்.....
கொஞ்சம் புதுசா முயற்சி செய்தேன்,ஆனால் கரு ஒன்றுதான் பேசிப்பேசி சந்தோஷப்பட்டு கவலை மறப்போம்,கவலை துறப்போம்.....
அனைவரும் தயவு செய்து கீழே உள்ள தமிழ் எழுத்துதவியை உபயோகித்து தமிழில் பதிவுகளிடவும்......சரியா........:))
வாங்க வாங்க அனைவரும் மனம் திறந்து மணம் பறப்புவோம்........

நீங்க ரெண்டு பேர் மட்டுமில்ல இப்போ நிரைய பேர் இப்படித்தான் இருக்காங்க எனக்கு என் மாமியர்ருக்கும் ஒரு வாரமா பேச்சு வார்த்தையில்ல என்ன பண்ரது பொண்ணா பிறந்துட்டோம்

இப்படிக்கு ராணிநிக்சன்

divine noni juce nallatha or kettath

ஹாய் ரேணு எனக்கு சூப் சிக்கன் சூப் லாம் இல்லயா ஒன்லி வெஜிடெபிள்ஸ் தானா? பக்கோடா கூட எல்லாம் வெஜ்ஜா?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாஸ்பிடல் மட்டும் மாமியார் கூட போகாதிங்க ஹஸ்பெண்ட் இல்ல தனியா போங்க..ஏன்னா ஒண்ண ஒன்பதாக்கி எல்லார்டயும் பேசிடுவாங்க.. இது என் கருத்து ரேணு

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ரேணு. கவலைபடாதீங்க. நீங்க தைரியமா போங்க. ஹாஸ்பிடல்ல உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லனு சொல்ல போறாங்க. அப்ப அவங்களுக்கு புரியும். தப்பா சொல்லிடோமேன்னு. நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. அப்பயும் அவங்க டாக்டர் சரியா பார்க்கலயோன்னு தான் டாக்டரை குறை சொல்லுவாங்க. நீங்க உங்களவரை கூட்டிட்டு போங்க. எல்லாம் நல்லபடியாவே இருக்கும். மனசு அமைதியா இருந்தா தான்பா பிபி செக் பண்றப்போ எல்லாம் நார்மலா இருக்கும். இல்லன்ன அது பாட்டுக்கும் எகுறிடும். அவங்க கூட போனா என்னால ரிலாக்ஸா இருக்க முடியாது. நமக்கு குழந்தை முக்கியம். நீங்கலே கூட்டிட்டு போங்கனு சொல்லுங்க. புரிஞ்சிப்பாங்கப்பா.அத்தை கூட போனாலும் மனசு ரிலாக்சா வச்சிக்கங்க. பார்த்துபா. தைரியமா இருங்க.

எங்க மாமியார் அதிகமா பேச மாட்டாங்க ஆனா அதிகமா அழுதுடுவாங்க... எதுக்கு அழுவுறாங்கன்னே தெரியாது.. நான் எதும் கேக்க மாட்டேன்.ஏன்னா கேட்டா நம்ம பக்கம் திரும்பிடும் இதுக்கே நான் இவங்க கிட்ட திட்டு வாங்குவேன். அவங்களுக்கு அவங்க அம்மா அழறாங்க அது மட்டும்தான் வேற எதும் புரியாது..ஒரு தடவை என்னால அழுததுக்கு நான் போய் அவங்கிட்ட மன்னிப்பு கேட்டாதான் உண்டு நு சொல்டாங்க வேற என்ன பண்ண மன்னிப்பு கேட்டேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மீனு அங்கயுமா அப்படி. நான் காலை புடிச்சாலும் சமாதானம் ஆகமாட்டாங்கப்பா.தேவை இல்லாம அழுது சீன் போடுவாங்க. இது தெரியாம என் மாமனார் என்னை கோச்சுக்குவார். அப்புறம் புரிஞ்சி கொஞ்சம் அட்ஜஸ் பண்ணுனு சொல்வார். ஆனா ஒன்னுபா அம்மா அழுதா இவங்களுக்கெல்லாம் ஏந்தான் இப்படி கோவம் வருதோ தெரியலப்பா
ராணி வீட்டுக்கு வீடு வாசப்படினு இதத்தான் சொல்றாங்களோ

எந்த காரணத்துக்காகவும் மாமியாரை கூட்டிட்டு போகாதீங்க நம்மை அழைவச்சிடுவாங்க அம்மாவை கூட்டிட்டு போங்க இல்லன்னா ஹஸ்பண்ட கூட்டிட்டு போங்க அதான் பெஸ்ட் நான் நிரய தடவ அனுபவப்பட்டிருக்கேன். குழந்தைக்காக வெயிட் பண்ற எல்லாருக்கும் ஒன்னு சொல்ரென் பிரச்சனை யாருக்கு வேணும்னாலும் இருக்கலாம் அதனால ரெண்டுபேரும் டெஸ்ட் ப்ண்ணிக்க்ங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

நீங்க சொன்னதும் சரிதா பா மீனு இவங்களும் அப்டி எப்ப பாத்தாலும் புலம்புவாங்க இல்லனா எல்லார்கிட்டயும் போய் உடம்பு முடிலனு சொல்லி புலம்புவாங்க பிள்ளை வந்ததும் அப்டியே ஒப்பாரி வைப்பாங்க மாமா கண்டுக்கவே மாட்டார் பா இதுல என்ன ஸ்பெஷல்னா தூங்கிட்டு இருந்தாலும் அவர் வந்ததும் அழுது அவர கஸ்டபடுத்திட்டு தா தூங்குவாங்க அப்டி ஒரு கேரக்டர் பா நைட் 12 மணிக்கு கூட ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்காங்கபா நா தப்பு செஞ்சா அமைதியா இருப்பேன் அடங்கிடுவேன் இல்லனா அடங்கி போகவே மாட்டேன்பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ராணி நான் ஊர்ல இருக்கிறப்போ மாமி தான் கூட வருவாங்க. டாக்டரே என்ன குறை குறைனு சொல்றீங்க. கொஞ்சம் சும்மா இருங்க இல்ல வெளில போங்கனு சொன்னாங்க. நார்மல் தான்பா ரெண்டு பேருக்குமே.ஆனா 2, டைம்ஸ் அபார்ஷன் ஆச்சு. அதான் திரிப்பி குறை இருக்குனு ஆரம்பிச்சிட்டாங்க.

மேலும் சில பதிவுகள்