"மனம்(மணம்) பறக்கும் அரட்டை......."

வாருங்கள் தோழிகளே,
கவலைகளைப் பகிர்ந்து மனம் மகிழ்வோம், சமையல் கற்று மணம் பறப்புவோம்.....
கொஞ்சம் புதுசா முயற்சி செய்தேன்,ஆனால் கரு ஒன்றுதான் பேசிப்பேசி சந்தோஷப்பட்டு கவலை மறப்போம்,கவலை துறப்போம்.....
அனைவரும் தயவு செய்து கீழே உள்ள தமிழ் எழுத்துதவியை உபயோகித்து தமிழில் பதிவுகளிடவும்......சரியா........:))
வாங்க வாங்க அனைவரும் மனம் திறந்து மணம் பறப்புவோம்........

பேசாம இருக்குறது சண்டை போடுறதுலாம் ரொம்ப சகஜம் லைஃப்ல அத போய் பெருசா எடுத்துக்க கூடாது நாகா எப்டியாது சமாதானம் பண்ணிடனும்... ஒரு நாள் கு மேல விட கூடாது,

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

இல்ல இளையா இப்போ சென்னைல இருக்கேன் :-(

ம்ம்.. :-( அவர் இப்படி இருந்ததே இல்ல. 1 மாசமா அடிக்கடி சண்டபோட்டு சாப்பிடமாட்டேங்கறாங்க

KEEP SMILING ALWAYS :-)

நாகா கவலைபடாதீங்க அவங்களுக்கு வொர்க் டென்ஷன் இருக்கலாம் இல்ல வேறெதும் டென்சனா இருக்கலாம் அதனால அவர் எப்டி ரியாக்ட் பண்றதுனு தெரியாமா கூட அப்டி இருந்திருக்கலாம் அது என்னனு அவர்ட்ட பேசி சரி பண்ணுங்க பா கவலப்படாதீங்க சரீங்களா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ம்ம் இருக்கலாம் இப்போ அவர் சீனியர் வேற கம்பெனி போய்டதால நிறைய வேலை இருக்குனு சொன்னாங்க

KEEP SMILING ALWAYS :-)

நாகா ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன். ஆபிஸ்ல மட்டும் தான் அவங்களால தாங்க முடியாத டென்ஷன்லாம் தருவாங்க.... ஆனாலும் அத சில பேர் வீட்டுக்கு வந்தாலும் மறக்க முடியாம தவிப்பாங்க... ஏன்னா அவங்க தர பிரஷர் அப்டி... அதுனால அத நீக்குற மருந்து வீட்ல இருக்குற நாம மட்டும்தான்... அவங்க கூட கொஞ்சம் கொஞ்சமா பேசுங்க அவங்க பேசாட்டினா கூட பேசுறத பண்ற வேலைகள விடாதிங்க... எங்க வீட்டுக்காரங்க கூட அப்டிதான் சில நாள் இருப்பாங்க... நான் ஆனா பேசிட்டே இருப்பேன். சம் டைம் திட்டு கூட வாங்குவேன். பாவம் அவங்களுக்கு டென்ஷன் எப்டி சொல்ல தெரியாது. ஃப்ர்ஸ்ட்லாம் நானும் அழுவேன். பேசலேனா அப்புறம் நான் வேலைக்கு போகப்புறம்தான் அவங்கள புரிஞ்சுக்கிட்டேன். அப்புறம் எவ்ளோ திட்ட்னாலும் பொறுத்துப்பேன். அப்புறம் உக்காந்து அவங்க திட்ட திட்ட கால் அமுக்கி விட்டுட்டே இருப்பேன். (அவர் வேலை சிஸ்டம் எஞ்ஜினியர் ஓடணும் யார் கூப்டாலும் பில்டிங் பில்டிங்கா போகணும்)இத பார்த்தே... ஒரு நாள் சிரிச்சுட்டாங்க. நான் அவ்ளோ திட்றேன். எதுமே உணர்ச்சி இல்லாம கால அமுக்குற அப்டின்னு கேட்டாங்க.. இல்லங்க உங்களுக்கு கால் வலிக்கு நான் அமுக்குனா போய்டும் ஆனா யாரோ உங்க மனசுல வொர்க் குடுத்து பிரஷர் தராங்க அது எப்டி தீர்க்க தெரில அது என்ன திட்றதுனால குறையும்னா ஓகே நீங்க திட்டுங்க உங்க மனசுவலி குறையும்... நான் கால் அமுக்குறேன் உங்க கால் வலியும் குறையும் காலேல ஃப்ரீ அகிடுவிங்கள்ல அப்ப என் கூட நல்லா பேசுவிங்கள்ல...அப்டின்னு சொன்னேன். அதுல இருந்து என்ன பிரச்சனை நாலும் என் கிட்ட சொல்லிட்டு பேசாம இருந்துடுவாங்க. கோபப்படுறது இல்ல நானும் புரிஞ்சுப்பேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

அந்த மாதிரி அவங்க பிரச்சனை எதுன்னு புரிஞ்சுக்கிட்டு கெல்ப் பண்ணுங்க நாகா அப்புறம் நம்மல பத்தி நல்லா புரிஞ்சுப்பாங்க.. என் மனசுல பட்டத ஒரு சகோதரியா நினைத்து சொன்னேன். எதா ஹர்ட் பண்ணா சாரிபா...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

:-) ம்ம்ம்ம்.... nice couple.. கோபம்லாம் இல்ல ஹி..ஹி..ஹி..

KEEP SMILING ALWAYS :-)

இந்த உலகத்துல கல்யாணத்துல சேர்ற எல்லா ஜோடியுமே சூப்பர் ஜோடி தான் கடவுள் இல்லேனா சேர்பாரா சொல்லுங்க... அத நாம புரிஞ்சு நடந்துக்கிறதுல தான் இருக்கு நாகா...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஆமா மீனு என் ஹஸ் நா அழுதா கூடவே அழுவார் அதால நா அவர் முன்ன அழமாட்டேன் என் குரல் மாறினாலே புரிஞ்சி என்ன சாமாதானம் பண்ணிடுவார் நானும் தா பா டென்சன்ல பேசமாட்டாரு அப்ப நா போய் ஏதாவது கலாட்டா பண்ணி காமெடி பண்ண சிரிச்சார்னா அவ்வளோ தா டென்சன் வராது அதோட எங்களுக்குள்ள சண்டை பத்து நிமிசம் தா இருக்கும் அவங்க அம்மா பத்தி பேசனா மட்டும் தா ஒரு மணி நேரம் இருக்கும் அப்றம் சமாதானம் பண்ணிடுவேன் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அவங்களோட டென்சன புரிஞ்சிட்டு நாம அவங்க டென்சன குறைச்சி சந்தோஷமா வெச்சிடா அவங்களும் சந்தோஷமா இருப்பாங்க அவங்க டென்சன கம்மி பண்ண ட்ரைபண்ணுங்க எல்லாமே சரி ஆகும் பா சரீங்களா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்