"மனம்(மணம்) பறக்கும் அரட்டை......."

வாருங்கள் தோழிகளே,
கவலைகளைப் பகிர்ந்து மனம் மகிழ்வோம், சமையல் கற்று மணம் பறப்புவோம்.....
கொஞ்சம் புதுசா முயற்சி செய்தேன்,ஆனால் கரு ஒன்றுதான் பேசிப்பேசி சந்தோஷப்பட்டு கவலை மறப்போம்,கவலை துறப்போம்.....
அனைவரும் தயவு செய்து கீழே உள்ள தமிழ் எழுத்துதவியை உபயோகித்து தமிழில் பதிவுகளிடவும்......சரியா........:))
வாங்க வாங்க அனைவரும் மனம் திறந்து மணம் பறப்புவோம்........

ஹாய் நசீம் எப்டி இருக்கிங்க. சாப்டாச்சா?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஆமால பர்சனலும் இருக்கும்ல? ரேணு இதுவும் நல்லா ஐடியா தான் ஓபன் பண்ணுங்க...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் மீனு என்னப்பா அதுக்குள்ள சாப்பாடு. இப்ப தான் 12 மணி. நீங்க சாப்ட்டாச்சா?

என்ன பண்றது வீட்ல இருந்தா சாப்ட 3 ஆய்டும் ஆபிச் ஆச்சே. அதான் அதுக்குன்னு குடுத்த டைம் கு போய் சாப்டு அமைதியா இருந்திட வேண்டி தான்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஆமாம்பா. நல்லது தான். டைம் கிடைச்சா சாப்பிடவேண்டியது தான்.

இன்னைக்கு எங்க வீட்ல ஒரு பிரச்சனைபா. எங்க கூடதான் அத்தை மாமா இருந்தாங்க. இப்ப ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் சென்னைல கொண்டு விட்டு வந்தோம். அவங்க இருக்குறப்ப என்ன சமைக்கவே விட மாட்டாங்க. இது தான் அவங்களோட டிரிக். இப்ப நான் சமைக்குறேன்ல. என்ன செஞ்சாலும் எங்க வீட்டுக்காரர் அம்மா மாதிரி வல்ல அப்டின்னு சொல்டு இருக்கார். அதான் இன்னைக்கு ஒரே சண்டை. சண்டைல நான் நாளைல இருந்து சமைச்சா கேளுங்கன்னு சொல்டு வந்துட்டேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

விடுங்கப்பா. போக போக சரியாயிடும். நீங்க எதாவது வெரைட்டியா செய்யுங்க. அப்புறம் அவங்களுக்கு பழகிடும். என்னவரும் இப்படித்தான் என் மாமியார் இங்க இருந்து போனவுடன் அப்படி பேசினாங்க. அப்புறம் நல்லா இருக்கு நு சொல்லி சொல்லி சாப்பிடுறங்க. இதுக்கு எல்லாம் டென்ஷன் ஆகி உங்க உடம்ப கெடுத்துக்காதீங்க.

இப்படி சொன்னாலே சமைச்சு கொடுக்கவே இன்ட்ரஸ்ட் வரமாட்டேங்குதுபா.. சரி விடுங்க அவர்கள் அப்படித்தானு விட்டுற வேண்டியதுதான். நீங்க என்ன சாப்பாடு செய்றிங்க.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மீனு இப்போ பருப்பானம் , , காலிப்ளவர் ப்ரை, எனக்கு உருளைக்கிழங்கு வறுவல், . அப்பளம் வெண்டை வத்தல் அவ்ளோதான்பா.

தோழிஸ் நலமா சாப்டாச்சா பா மீனு கவலையவிடுங்க டிபரண்டா செஞ்சி குடுங்க அவருக்கு பிடிச்சமாரி அப்றம் பாருங்க இங்கயும் செம சண்டை நைட் சமாதானப்படுதிட்டு தூங்கறதுக்கு 1மணி ஆகிடுச்சு அவங்க அம்மாவ தா கூட்டிட்டு போக சொல்றார் நானும் சரி சொல்டேன் சில கண்டிஷனோட தா பா இப்ப நா ஹாஸ்பிட்டல் போய் என்னனு சொல்றது கொஞ்சம் சொல்லுங்கப்பா எனக்கு என்ன சொல்றதுனு புரில ப்ளீஸ் ஹெல்ப் மீ

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்