"மனம்(மணம்) பறக்கும் அரட்டை......."

வாருங்கள் தோழிகளே,
கவலைகளைப் பகிர்ந்து மனம் மகிழ்வோம், சமையல் கற்று மணம் பறப்புவோம்.....
கொஞ்சம் புதுசா முயற்சி செய்தேன்,ஆனால் கரு ஒன்றுதான் பேசிப்பேசி சந்தோஷப்பட்டு கவலை மறப்போம்,கவலை துறப்போம்.....
அனைவரும் தயவு செய்து கீழே உள்ள தமிழ் எழுத்துதவியை உபயோகித்து தமிழில் பதிவுகளிடவும்......சரியா........:))
வாங்க வாங்க அனைவரும் மனம் திறந்து மணம் பறப்புவோம்........

வாங்க ரேணு கவலைய விடுங்க. குழந்தைக்கு வெயிட் பண்றோம்னு சொல்லி உங்களுக்கு இதுக்கு முன்னாடிஎப்பவாவது நாள் தள்ளி இருந்து வந்திருந்தா அதையும் சொல்லுங்க. எதையும் மறைக்காதீங்க. நீங்க உள்ளபோறப்போ டாக்டர்கிட்ட எதும் தனியா பேசனும்னா உங்கள தனியா செக் பன்னுவாங்க. அப்போ உங்க அத்தையை வெலியில் இருக்க டாக்டர்கிட்ட நீங்கசொன்னீங்க்ன்னா டாக்டரே அவங்கள வெளில போக சொல்லுவாங்க. நீங்க டாக்டர்கிட்ட பேசுறதுக்கு ப்ரீயா இருக்கும். எத்தனை நாட்களில் பீரியட் வருது, வருவதற்கு முன் என்ன செய்யுது, பைன் எதும் இருக்கா, என்ன மாதிரி உண்வு சாப்பிடனும், எந்த நட்களில் இருந்து ரெஸ்ட்ல இருக்கணும். எல்லா டவுட்டும் கேளுங்க. டாக்டர்கிட்ட பேசுறப்போ ப்ரீயா சொல்லுங்க. அப்ப தான் அவங்களால நமக்கு எந்த மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுக்கணும்னு அவங்க புரிஞ்சிப்பாங்க. ஓகேவா. மனச எப்போதும் ரிலாக்ஸா வைங்க.

ஹாய் ரேணு...சாப்பிட்டாச்சா? கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகறதுக்குள்ள எதுக்கு உன் மாமியார் குழந்தைக்கு அவசரப் பட்றாங்க?இது சரியில்ல...அவங்ககிட்ட உன் ஹஸ்பண்டை விட்டு சொல்ல சொல்லு, "குழந்தை பிறக்கும், கவலைப் படாதே"ன்னு...உனக்கு பீரியட்ஸ்ல எதுவும் ப்ராப்ளம் இல்லயே?அப்பறம் என்ன கவலை? கொஞ்ச நாள் லைஃபை எஞ்சாய் பண்ணலாமே? உங்க மாமியார் நிறய சீரியல்லாம் பார்ப்பங்களா? கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு...

எப்பலாம் போனதடவை பீரியட்ஸ் வந்தது. இன்டர் கோர்ஸ் எப்ப நடந்தது. என்ன டேபிளட் எதா யூஸ் பண்ணிருக்கிங்களா? தள்ளி வந்ததுல அப்ப வந்த பெயின், ஃபீளிங்ஸ் எல்லாம் பொறுமையா சொல்லுங்க ரேணுராஜ், நசீம் சொன்ன எல்லாமும் சேர்த்து.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

இதுக்கு முன்னால உனக்கு நாள் தள்ளிப் போய் மிஸ்கேரேஜ் ஆகியிருக்கா? நீ எதுக்கு டாக்டரைப் பார்க்க போகிறாய்?

தாங்ஸ்பா அப்டியே செய்றேன் ஆன்ட்டி அவங்க வேலேயே அதான் சீரியல் சீரியல் சீரியல் அது மட்டும் தா தெரியும் அவங்களுக்கு இத்தனைக்கு அவங்க அக்காக்கு 10 வருடம் குழந்தையில்ல அப்பறம் தா பிறந்தது இதகூட புரிஞ்சிக்கமாட்டறாங்க என்மேல எப்பவும் அதிகார தொனில தா பேசுவாங்க திட்டுவாங்க எதும் பண்ண முடில இப்ப எக்ஸாம் வரபோது எனக்கு இந்த டைம்ல ஹாஸ்பிட்டல் போகணுமா சொல்லுங்க ப்ரெண்ட்ஸ் அப்டி போன அங்க என்னலாம் சொல்வாங்க டெஸ்ட்லா எடுப்பாங்களா பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு நீங்க ஹாஸ்பிடல் போறது நல்லது தான். ஏன்னா கல்யாணம் ஆகி நான் ஒரு மாசத்திலேயே என்னை என் மாமியார் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாங்க. நீங்க தைரியமா போங்க. எந்த டெஸ்டும் ஸ்டார்ட்டிங் எடுக்க சொல்ல மாட்டாங்க. ப்ராப்ளம் இருந்தாதான் சொல்லுவாங்க.

ராதாம்மா எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. அதும் குழந்தை தள்ளி போச்சு அவளோதான் போச்சு... ஆனா அவங்க பொண்ணுனா சும்மா எதும் பேசாம தையிரியம் சொல்வாங்க.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

உன்னிடம் ஏதாவது ப்ராப்ளம் இருந்தாதான் ட்ரீட்மெண்ட் சொல்லுவாங்க...எல்லாம் நார்மல்னா கொஞ்ச நாள் பார்க்க சொல்வாங்க...நீ இப்போ போறது வேஸ்டுன்னு எனக்கு தோணுது...

ரேணு நீங்க ஹாஸ்பிடல் போனதே இல்லயா இதான் ஃப்ர்ஸ்ட் டைமா? போனதும் சும்மா எல்லாம் கேட்டு என்ன என்ன டெஸ்ட் பண்ணனும்னு ஒரு ஸீட்ல எழுதி குடுப்பாங்க. ஆனா எல்லா டெஸ்ட் உடனே கிடையாது. சிலது பீரியட் வந்த 3வது நாள், 6 வது நாள் அப்டின்னு இருக்கு யூரின் டெஸ்ட் பிள்ட் டெஸ்ட் இருக்கும். மறக்காம ரெண்டு பேரும் டெஸ்ட் பண்ணுங்க. அவங்களுக்கும் சில டெஸ்ட் இருக்கும். கவலை படாம போங்க எல்லாம் நல்லதுக்குதான்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஆனா நாம்லே இப்ப வேணாம் வேணாம் ஹாஸ்பிடல் இப்ப வேணாம்னு சொன்னோம்னா முடிவே கட்டிடுவாங்கமா குறைதான் போல அப்டின்னு

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்