"மனம்(மணம்) பறக்கும் அரட்டை......."

வாருங்கள் தோழிகளே,
கவலைகளைப் பகிர்ந்து மனம் மகிழ்வோம், சமையல் கற்று மணம் பறப்புவோம்.....
கொஞ்சம் புதுசா முயற்சி செய்தேன்,ஆனால் கரு ஒன்றுதான் பேசிப்பேசி சந்தோஷப்பட்டு கவலை மறப்போம்,கவலை துறப்போம்.....
அனைவரும் தயவு செய்து கீழே உள்ள தமிழ் எழுத்துதவியை உபயோகித்து தமிழில் பதிவுகளிடவும்......சரியா........:))
வாங்க வாங்க அனைவரும் மனம் திறந்து மணம் பறப்புவோம்........

ஆனா ராதாம்மா சொல்றது ரொம்ப கரெக்ட் உங்கள்ட குறைஇருந்தா தான் டிரீட்மெண்ட் இல்ல நமக்கு எந்த சத்து அத்யாவசியம்னு பார்த்து சத்து மாத்திரை போலிக் ஆசிட் மாத்திரை இது தான் தருவாங்க. எனக்குலாம் அதுதான் குடுத்தாங்க.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் தோழிகளே நான் வந்துட்டேன். யாரெல்லாம் இருக்கீங்க ஹாய் ரேணு, மீனு, ஆண்ட்டி, ஜெஸி

இது வரைக்கும் குழந்தையில்லை அப்பறம் வயிறுவலி இருக்கு அதான் ஹாஸ்பிட்டல் போறோம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் யாழினி எல்லாரும் இருந்தாங்க எங்க போனாங்க தெரில நான் மட்டும் தனியா உக்காந்து ஆளே இல்லாத கடைக்கு டீ ஆத்துறேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் மீனு நான் உங்களுக்கு கம்பெனி தரேன் வாங்க சேர்ந்து டீ ஆத்தலாம் எப்புடி எல்லாரும் திரும்ப வாங்க வாங்க

கண்டிப்பா குட்டி தூக்கம் போட்டு வருவாங்க. நகம் எனக்கு ஒரு சந்தேகம் தோழிகள் யாராவது தெரிஞ்சா சொல்லுங்க பிளீஸ் நகம் ஸ்டராங்க இருக்க என்ன பண்ணனும். எனக்கு எல்லா நகமும் ரொம்ப வீக்கா இருக்கும் டக்டக்னு உடைஞ்சு போகுது வேலை பார்க்கும்போது அதுக்கு என்ன பண்ண?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் தோழிகளே
மீனு நகம் உடையாம இருக்க தினமும் இரவு கைகளை சுடுதண்ணிரில் கழுவிவிட்டு நகத்திற்கு ஒலிவ் ஆயில் போடுங்க,
இதே போல இரவு நல்ல நெய் நகத்திற்கு போட்டாலும் நகம் சீக்கிரம் உடையாது. ஆனா கொஞ்ச நேரத்தில கைகளை கழுவிடுங்க. எனக்கு பார்ல்ர்ல சொல்லி கொடுத்தாங்க. try panni parunga, alla the best.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ஹாய் சுமிபாபு ரொம்ப நன்றிபா இன்னைக்கே ட்ரை பண்றேன். நீங்க புதிதா? எப்டி இருக்கிங்க அரட்டைக்கு வந்ததுக்கு நன்றி...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

என்னப்பா யாருமே இல்லயா ரேணு, யாழி, நசீம், ராதாம்மா, ரேணுராஜ் எல்லாரும் எங்க இருக்கிங்க. ஈவினிங் ஆய்டு ஆனா இன்னைக்கு புல்லா அரட்டைக்கு லீவா>

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மீனு நான் வந்துட்டேன். கொஞ்சம் வேலை வந்திருச்சு. சொல்லுங்க. டீ டைம் முடிஞ்சிருச்சா? டீ ல்லாம் குடிச்சாச்சா? உங்களுக்கு எத்தனை மணி வரை ஆபிஸ்.

மேலும் சில பதிவுகள்