தக்காளி குழம்பு

தேதி: October 11, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (7 votes)

 

தக்காளி - 2
பெரிய வெங்காயம் - ஒன்னு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
தாளிக்க :
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
கருவேப்பிலை,உப்பு- கொஞ்சம்


 

தக்காளி,வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.தேவையானதை எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து,கருவேப்பிலை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைவாக வந்ததும் மஞ்சள் தூள் சேர்த்து மிளகாய் தூள் சேர்க்கவும்.தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
மிளகாய் வாசம் போனதும் அடுப்பை நிறுத்தவும்,,(தேங்காய் சோம்பு சேர்த்து அரைத்தும் சேர்க்கலாம்)
மிகவும் ஈசியாக செய்யகூடிய தோசை மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட தக்காளி குழம்பு ரெடி.


விருப்பப்பட்டவர்கள் அடுப்பை நிறுத்து முன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி இரண்டு நிமிடத்துக்கு பின் அடுப்பை நிறுத்தவும் முட்டை குழம்பு ரெடி.

மேலும் சில குறிப்புகள்