தேங்காய்பால் கடல்பாசி

தேதி: October 11, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (10 votes)

 

கடல்பாசி - 3-ல் ஒரு பகுதி
சீனி - ஒரு குவளை
தேங்காய் பால் - ஒரு கோப்பை
ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை


 

தேவையானவற்றை அனைத்தையும் தயாராய் வைக்கவும். கடல்பாசி 3ல் ஒரு பங்கை வெட்டி வைக்கவும்.
ஒரு சட்டியில் பாதியளவு தண்ணீர் வைத்து கொதிக்க விடவும்.
கொதிக்கும் நீரில் கடல்பாசியை போட்டு கரையும் வரை கொதிக்க விடவும். அதில் உப்பு போடவும்.
கடல்பாசி நன்றாக கரைந்ததும் சீனி சேர்க்கவும்.
சீனி போட்டதும் ஒரு கரண்டியால் கலக்கி விடவும். சீனி கரைந்ததும் தேங்காய் பால் ஊற்றவும்.
பால் சேர்த்தவுடன் கொஞ்ச நேரத்தில் மேலே நுரை போல் வரும், பால் கொதிக்க ஆரம்பிக்குமுன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். தேங்காய் பால் ஊற்றிய பின் கொதிக்க விட கூடாது.
ஒரு தட்டில் உங்களுக்கு பிடித்த ஃபுட்கலர் கொஞ்சம் போட்டு வைக்கவும்.
கடல்பாசியை ஒரு வடிதட்டு மூலம் கலர் போட்டு வைத்த தட்டில் ஊற்றவும்.
உடனே கலரை கலக்கி விடவும். இல்லையென்றால் கலர் அடியில் இருக்கும்.
நன்றாக ஆறியபின் தேவையான வடிவில் வெட்டலாம் அல்லது அச்சில் வைத்தும் எடுக்கலாம். இப்போது டபுள் கலர் காட்டும், தேங்காய் பால் சேர்ந்து மேலேயும், தண்ணீர் சேர்ந்த கடல்பாசி கீழுமாக இருக்கும். பாலை கொதிக்க விட்டால் இப்படி டபுள் கலர் தெரியாது, சுவை அலாதியாக இருக்கும். ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அடடா... கடல்பாசியை பட்டர்ஃப்ளை போல் வெட்டி அசத்திட்டீங்க :) ரொம்ப சூப்பரா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் சூப்பர். பார்க்கவே அழகா இருக்கு. . வாழ்த்துக்கள். அச்சுகள் வடிவம் அழகா இருக்குபா.

ரசியா சூப்பர்பா அழகா இருக்கு வாழ்த்துகள் பா கண்டிப்பா ட்ரைபண்றேன் கடல்பாசா தா தேடணும் பரவால தேடி பாக்கறேன் எங்க கிடைக்கும்னு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரசியா,
ரொம்ப அழகா இருக்கு உங்க பட்டர்ஃப்ளை கடல்பாசி குறிப்பு! :) அசத்திட்டிங்க, வாழ்த்துக்கள்!

ரசியா, எனக்கு கொஞ்சம் விளக்கம் தருவிங்களா?! இதில் நீங்க எவ்வளவு தண்ணீர் சேர்த்திங்க?! அதேப்போல 3-ல் ஒரு பகுதி என்றால், ஒரு முழு பாக்கெட்டில் 1/3-ஆ?! அது எந்த அளவு பாக்கெட்?! கொஞ்சம் சொல்லுங்களேன்.
அப்புறம், தேங்காய்ப்பால், தேங்காய்ப்பால் பவுடர் கொண்டு தயார் செய்திங்களா?! (உங்க போட்டோஸ் பார்த்துதான் இந்த சந்தேகம்). பாக்கெட் தேங்காய்ப்பாலே நல்லா வருமென்றால் ஜாலிதான்! என்னிடம் பாக்கெட் இருக்கு! ;)

ரொம்பதான் கேள்விகள் கேட்கிறேன் இல்லை?! கொஞ்ச நாள் முன்னாடி ஒரு முறை கடல்பாசி வாங்கி செய்து, அவுட்புட் அவ்வளவு சுவராசியமா இல்லை! அப்புறம் அதில் மீதம் உள்ளதை செய்யவே இல்லை. இன்னும் கொஞ்சம் தேடிப்பார்த்து, படித்துவிட்டு செய்ய நினைத்திருந்தேன். இப்ப உங்க குறிப்பை பார்த்ததும், மீண்டும் செய்துப்பார்க்க ஆசை வந்திடிச்சி!, அதான்! :)

அன்புடன்
சுஸ்ரீ

முதல் ஆளா வந்து பதிவிட்டதற்கு நன்றி வனிதா,இதற்கு நான் பட்டர் ஃப்ளை கடல்பாசின்னு பேர் வைத்திருக்கலாம்....இந்த ஐடியால்லாம் வனிதாக்கு தான் வரும்,ஹிஹிஹி...........

Eat healthy

நன்றி நன்றி,வாழ்த்துக்கு ரொம்ப நன்றி

Eat healthy

பாராட்டுக்கு நன்றி தேவா!!கடல்பாசி சைனீஸ் கடைகளில் கிடைக்கும்,இல்லையென்றால் சிங்கப்பூர் மார்க்கெட்டுகளில்(கடைகள்)கிடைக்கும்,இப்போது நம்ம ஊர் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கிறது,கேட்டுப்பாருங்க,நன்றி!

Eat healthy

முதலில் உங்க பாராட்டுக்கு நன்றி சொல்லிகிறேன்!
4 தம்ளர் அளவு தண்ணீர் சேருங்கள்,ஏனெனில் தேங்காய் பாலும் சேர்ப்பதால் தண்ணீரின் அளவு 4 தம்ளர் போதும்.
கடல்பாசி 2 வகையில் இருக்கு,1.வைக்கோல் போல் இருக்கும்,2.பௌடராக இருக்கும்,நான் உபயோகிப்பது வைக்கோல் போல் உள்ளதைத்தான்,படத்தில் பாருங்கள்,இதன் மொத்த வெயிட்டே 40கிராம் தான்,அதை மூன்றாக பிரித்து வெட்டிக்கொள்ளுங்கள்.
தேங்காய் பால் பிழிந்தும் யூஸ் பன்னலாம்,என்னிடம் டின் அல்லது பாக்கெட் தேங்காய் பால் இருப்பதால் அதை யூஸ் பன்னிக்குவேன்,நான் படத்தில் தேங்காய் பாலை ஊற்றும் கோப்பையின் அளவில் 1 கோப்பையளவு எடுத்துக் கொள்ளுங்கள்,பால் திக்காக இருக்கனும்.
குறிப்பு:கடல்பாசிக்கு தண்ணீரின் அளவு போதவில்லையென்றால் கொஞ்சம் அழுத்தமாக இருக்கும்,தண்ணீர் அதிகமாகிவிட்டால் வெட்ட வராது,நீர்த்திருக்கும்.அதனால் பார்த்து செய்யுங்கள்.

Eat healthy

அழ..கா இருக்கு. ;)

‍- இமா க்றிஸ்

thank u imma

Eat healthy

ரஸியா,
கடல்பாசியில் பட்டாம்பூச்சி சூப்பரா இருக்கு.இரண்டு ஷேட்களில் செய்திருப்பது நல்ல ஐடியா.கலக்கல் குறிப்பு.வாழ்த்துக்கள்,ரஸியா.

வித்தியாசமா அழகா இருக்கு ..

வித்தியாசமா அழகா இருக்கு ..

இதன் ஸ்பெஷலே டபுள் ஷேட்தான்,பாராட்டுக்கு நன்றி ஹர்ஷா.

Eat healthy

ரொம்ப நன்றி ஜனனி

Eat healthy

ரசியா,

பட்டாம்பூச்சி அழகோ அழகு!!!
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

பட்டாம்பூச்சி அமர்க்களமாக இருக்கு. அழகா விளக்கி அம்சமாக செய்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கடல்பாசி அசைவம் தானே? செய்முறைக்குறிப்புகள் , படங்கள் பார்க்கவே ரொம்ப அழகா இருக்குது. container melaaga pink colouril iruppathu enna?

god is love

தேங்காய் பாலில் செய்தது வித்தியாசமாக இருக்கு விருப்பபட்டியில் சேர்த்துட்டேன்வாழ்த்துக்கள்

(அச்சுவை காண்பித்து இருந்தால் அதேமாதிரி கேட்டு வாங்க வசதியா இருக்கும்)

படம் பார்த்ததுமே ஆசை வந்திருசு கண்டிப்பா செய்து பாக்க வேண்டிய குறிப்பு வாழ்த்துக்கள்;)

Don't Worry Be Happy.

லாவண்யா & கவிதா உங்க இருவருக்கும் என் நன்றிகள்.

Eat healthy

கடல்பாசி அசைவம் இல்லை சைவம்தான்,பேரிலேயே இருக்கே.....கடல் பாசி;இது கடலில் இருக்கும் ஒருவகை பாசிதான்(செடி)இதை சுத்தம் செய்து பச்சையம் நீக்கி வெண்மையாக காயவைத்து நமக்கு கிடைக்கிறது.
/container melaaga pink colouril iruppathu enna?/
அதுவா!!!!!!!!!!!நான் ஃபுட் கலர்ஸ் வைத்திருக்கும் டப்பா!நன்றி ஷீபா!

Eat healthy

ரொம்ப நன்றி ஃபாத்திமா மாமி!இந்த அச்சுக்கள் எல்லாம் எனக்கு சிங்கப்பூரிலிருந்து என் மாமி வாங்கி கொடுத்தனுப்பியது,அச்சுக்கள் எல்லா கடைகளிலும் கிடைக்கும்,கேட்டுப் பாருங்க,இல்லையென்றால் ஐஸ் ட்ரேயில் கூட ஊற்றி எடுக்கலாம்.

Eat healthy

ரொம்ப நன்றி ஜெயலக்ஷ்மி அவர்களே!!!

Eat healthy

என் பாட்டி செய்வாங்க ரசியா அதுபோலவே நீங்களும் செய்து இருக்கீங்க கடைசி படம் சூப்பரா இருக்கு

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

thanx

நன்றி குமாரி!நீங்க செய்து உங்க பாட்டிக்கு குடுங்க.

Eat healthy

.

Eat healthy