காய்கறி பிரட்டல்

தேதி: June 29, 2006

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிறிய காரட் - இரண்டு
சிறிய உருளைக்கிழங்கு - இரண்டு
காலிஃப்ளவர் - நூறு கிராம்
பச்சை பட்டணி - ஐம்பது கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - இரண்டு
எண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
பட்டை, இலை, அன்னாசிப்பூ - தாளிக்க
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
அரைக்க:
தேங்காய் துருவல் - மூன்று டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
கசகசா - ஒரு டீஸ்பூன்
பூண்டு - இரண்டு பல்


 

காரட், உருளைக்கிழங்கை தோல் நீக்கி அரை அங்குல கனமுள்ள துண்டுகளாக நறுக்கவும்.
காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு வைக்கவும். வெங்காயத்தை நீளமான துண்டுகளாக நறுக்கவும்.
தக்காளியை குறுக்கில் ஆறு துண்டுகளாக நறுக்கவும். அரைக்க வைத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க வைத்துள்ளவற்றை போடவும்.
வாசனை வந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பிறகு காய்களைப் போட்டு பாதி வதங்கியதும் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
பொடிகளின் பச்சை வாசனை போன பின் தக்காளியைப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து பச்சைபட்டாணி, அரைத்த விழுதைப்போட்டு அடிக்கடி கிளறி விட்டு மேலும் பத்து நிமிடம் கழித்து இறக்கவும்.


பச்சைபட்டாணி வேக எடுத்துக் கொள்ளும் நேரம் குறைவு என்பதால் கடைசியில் சேர்த்தால் போதும்.

மேலும் சில குறிப்புகள்