பட்டர் பீன்ஸ் மசாலா

தேதி: October 12, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (5 votes)

 

பட்டர்பீன்ஸ் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று (சிறியது)
தக்காளி - ஒன்று (சிறியது)
பச்சைமிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - கால் தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
மல்லி தழை - சிறிது
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - ஒரு குழிகரண்டி
அரைக்க:
தேங்காய் - ஒரு துண்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
கிராம்பு - ஒன்று
பட்டை - சிறிது


 

வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். மிளகாயை கீறி வைக்கவும்.
அரைக்க கொடுத்தவைகளை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போக வதக்கவும். அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள்தூள், அரைத்த மசாலா போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் பட்டர்பீன்ஸ் போட்டு வதக்கி உப்பு, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் 5 நிமிடத்திற்கு வேக வைக்கவும்.
வெந்ததும் இறக்கி மல்லி தழை தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Super i like this recipe i add this in my favourites this is a protiest item

சத்தான குறிப்பு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஃபாத்திமா அம்மா,
பட்டர் பீன்ஸ் மசாலா அழகா செய்து இருக்கீங்க,கண்டிப்பா ட்ரை பண்றேன்.வாழ்த்துக்கள்.

ஃபாத்திமா அம்மா,
அருமையான மசாலா..வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
கவிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

வருகைகு மிக்க நன்றி
தமிழில் டைப் பண்ணுங்கள்

மிக்க நன்றி

ட்ரை பண்ணிட்டு சொல்லுங்கள் வாழ்த்துக்கு நன்றி

வாழ்த்துக்கு மிக்க நன்றி

கடாய் பனீர் ரேஞ்சுக்கு கலர் கலக்குது கண்டிப்பா செய்து பாக்கறேன் வாழ்த்துக்கள்;)

Don't Worry Be Happy.

நல்ல குறிப்பு பாத்திமா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪