குருவி கூடு பற்றி

எங்கள் வீட்டில் உள்ள மல்லி கொடியில் குருவி கூடு கட்டி உள்ளது.

நாங்க இந்த வீட்டில் 13 வருடங்களாய் உள்ளொம்,இதுவரை

இப்படி கூடு எதுவும் கட்டியது இல்லை.

குருவி கூடு கட்டினால் என்னவென்று யாராவது சொல்லுங்க பா.

அம்மா மிகவும் குழம்பி உள்ளார் இதை நினைத்து.

ஹாய் சுகன்யா, எங்க அத்தை குருவி கூடுகட்டினா நல்லதுன்னு தான் சொல்வாங்க. ஆனா ஏதா குருவி விழுந்துட்டா அந்த குருவிய எடுத்து நாம மேல வச்சா தாய் குருவி அப்புறம் அத ஏத்துக்காதாம். அப்டின்னும் சொல்வாங்க. ஆனா எனக்கு அனுபவம் இல்லை எங்க அத்தை வீட்ல நிறையா உண்டு பின்பக்கத்து தோட்டத்து வீட்ல.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

குருவி கூடு கட்டினா ஒன்னும் இல்ல. நாங்க இருந்த வீட்டில் இருவர் ஹாலில் நடு வீட்டில் கட்டி இருந்தார்கள், இன்னும் இருவர் வராந்தாவில் கட்டி இருந்தார்கள். அவர்கள் வந்து கூட்டில் அடையும் வரை கதவை மூட கூட முடியாது... பாவம் உள்ளே வர முடியலன்னா தவிச்சு போகும். ஒருவர் மாற்றி ஒருவர் வீட்டில் குஞ்சுகள் சத்தம் கேட்கும்... பெருசுகள் உணவு கொடுக்கும்... அதை பார்ப்பதே தனி மகிழ்ச்சி தான். அது ஒரு அழகு... ஒரு ஜீவனுக்கு தங்க இடம்... பாதுகாப்பா நாமும் பார்த்துக்கலாம். இதுக்குலாம் குழம்பிக்க கூடாது... ரசிங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//இதுக்குலாம் குழம்பிக்க கூடாது... ரசிங்க :)// அதுவேதான் என் கருத்தும்.
//குருவி கூடு கட்டினால் என்னவென்று யாராவது சொல்லுங்க பா.// இனி என்ன! சந்தோஷம்தான். நாலு அரிசியை மல்லிக்கொடி அடியில் போடுங்க சுகன்யா. அவங்க சாப்பிடுற அழகைப் பாருங்க. மனசெல்லாம் மகிழ்ச்சிதான். பிறகு... இந்த சந்தோஷத்துக்காகவே தீன் கொடுப்பீங்க. ;)

ஊர்ல எங்க வீட்டில (உள்ளேயே) எப்பவும் மனிதரை விட இவங்க எண்ணிக்கைதான் அதிகமா இருந்தது. ஒரே காச்மூச் என்று வீடு நிறைந்தாற்போல் இருக்கும். இங்கயும் ப்ளம் மரத்துல ரெண்டு கூடு இருந்துது. திரும்ப வருவாங்க இந்த சீசனுக்கு. எங்களுக்கு தப்பா ஒண்ணும் ஆகல. நாங்க நல்லா சந்தோஷமா இருக்கிறோம். யோசிக்கப்படாது இதுக்கெல்லாம்.

மனிதரைப் போல சீமெந்துல, மாடி வீடு கட்டிக்கத் தெரியல அவங்களுக்கு. மல்லிக்கொடியில தும்பு வச்சு கட்டுறாங்க. ;) இரக்கம் காட்டணும் அவங்களுக்கு.

‍- இமா க்றிஸ்

நன்றி தோழிகளே

மேலும் சில பதிவுகள்