எக்லெஸ் ஆரஞ்சு கேக்

தேதி: October 13, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (9 votes)

 

மைதா - 1 1/4 கப்
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
பேக்கிங் சோடா - அரை தேக்கரண்டி
ஸ்வீட்டண்ட் கண்டென்ஸ்ட் மில்க் - அரை கேன் (7 அவுன்ஸ்)
ஆரஞ்சு ஜூஸ் - அரை கப்
வெனிலா எசன்ஸ் - 1 1/2 தேக்கரண்டி
உருக்கிய வெண்ணெய்(salted Butter) - அரை கப்
ஆரஞ்சு ஜெஸ்ட் - ஒரு தேக்கரண்டி
வெனிலா ஃப்ராஸ்ட்டிங் - ஒரு கேன் (16 அவுன்ஸ்)


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா(dry ingredients) சேர்த்து 2 அல்லது 3 முறை சலித்துக் கொள்ளவும்.
அதன் நடுவே பள்ளம் செய்து, கண்டென்ஸ்ட் மில்க், ஆரஞ்சு ஜூஸ், வெனிலா எசன்ஸ் மற்றும் உருக்கிய வெண்ணெய் சேர்க்கவும். அதனுடனே ஆரஞ்சு ஜெஸ்ட் சேர்க்கவும்.
பிறகு எல்லாவற்றையும் கட்டியில்லாமல் கலக்கவும். அதிகம் பீட் பண்ண வேண்டாம். இந்த கலவை மிகவும் திக்காக தான் இருக்கும்.
வெண்ணெய் தடவி, மைதா மாவு பூசி தயாராக வைத்துள்ள பாத்திரம் அல்லது பேக்கிங் ட்ரேயில் இந்த கலவையை ஊற்றவும்.
350 டிகிரி ல் அவனை முற்சூடு செய்து, அதில் 25 முதல் 30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். கேக்கை மையப்பகுதியில் டூத் பிக் கொண்டு வெந்து விட்டதா என பார்த்துக் கொள்ளவும். அதிகம் வெந்து விட்டால், மேலே கடினமாகி விடும்.
பொதுவாக எக்லெஸ் கேக் உப்பாது. ஆனால் இந்த கேக் நன்கு உப்பி, மேலெழும்பும்.
கேக் நன்கு ஆறியதும், பாதியில் இரண்டு லேயர்களாக வருமாறு கட் செய்து கொள்ளவும்.
ஃப்ராஸ்ட்டிங் செய்ய ஒரு ட்ரேயில், கேக்கின் மேல் பாதியை வைக்கவும். அதன் மீது க்ரீம் பூசவும்.
பின்னர், கேக்கின் அடிப்பகுதியை அதன் மேல் வைக்கவும்.
முதலில் பக்கவாட்டில் க்ரீம் பூசி, பின்னர் மேல் பக்கத்தில் பூசவும். எளிதில் செய்யக்கூடிய எக்லெஸ் ஆரஞ்சு கேக், வெனிலா ஃப்ராஸ்ட்டிங்குடன் தயார். பிறகு, இதன் மீது விரும்பிய வண்ணம் அலங்காரம், பைப்பிங், பூக்கள் செய்து கொள்ளலாம்.

இந்த கேக்கில் ஃப்ராஸ்ட்டிங் செய்து இருப்பதால், கண்டென்ஸ்ட் மில்க்கில் உள்ள இனிப்பின் அளவே போதுமானதாக இருக்கும். ஃப்ராஸ்ட்டிங் செய்யவில்லையெனில் இரண்டு தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். கேக் வாசத்துக்கு ஆரஞ்சு ஜெஸ்ட்க்கு பதில் ஆரஞ்சு எசன்ஸ் சேர்த்தாலும் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Enga pa ippadi kandu pidikiringa. Kalakitinga super. Unga cake mighavum arumaiyagha irukiruthu. I like this very much

nanga pure vegeterian anal en kanavaruku cake pidikum neenda natkalaga eppadi seivathu endru yositukondu irunthen unga kurippai seiya ovan venuma?
vithiasama iruku try panren thank u.

unave marunthu marunthe unavu

அன்பு கேக் ரொம்ப சூப்பரா இருக்குப்பா வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

கௌதமி,
முதலாவதாக பதிவிட்டதற்கும்,உங்க பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றிங்க.

நிர்மலா,
இந்த கேக்,செய்வதும் ரொம்ப சுலபம் தாங்க.அவனில் தான் செய்யணும்னு இல்லை.குக்கரில் கூட செய்யலாம்.நிறைய 'குக்கரில் கேக் செய்யும் முறை' நம் அறுசுவையிலேயே இருக்கு.பாருங்க.கேக் வேகும் நேர அளவு வேறுபடும்.அவ்வளவுதான்.செய்து பார்த்துட்டு சொல்லுங்க.பதிவுக்கு மிக்க நன்றி.

ஸ்வர்ணா,
உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க.

குறிப்பு நன்றாக இருக்கிறது, பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

இமா,
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி,இமா.

ரொம்ப நாளாக எதிர்பார்த்திருந்த கேக் இது. குறிப்பு ரொம்ப நல்லாயிருக்கு. பிரசன்டேஷனும் நல்லாயிருக்கு. அப்படியே லெமன் கேக் ரெசிபியும் கொடுங்களேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

unga dish nalla irenthathe dear

கேக் சூப்பர். மேலே பூவும் போட்டிருக்கலாம்... இன்னும் கியூட்டா இருந்திருக்கும். அடுத்த கேக் பூவோட அனுப்பனும் ;) ட்ரை பண்ண ஆசை தான்... ஆனா அவன் வேண்டுமே... மாலே போனால் செய்துட்டு முதல் ஆளா சொல்லிடுறேன் :) சுலபமா செய்து காட்டி இருக்கீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹர்ஷா,

கேக் ரெஸிப்பி சூப்பரா இருக்கு!, வாழ்த்துக்கள்! உடனே, நாளைக்கே பண்ணிடறேன்! :) சொல்லப்போனா பெர்ஃபெக்ட் டைமிங்குன்னுதான் சொல்லனும்! ஏன்னு கேட்கிறீங்களா? நாளை ஹஸ்க்கு பர்த்டே!. ஒரு நல்ல எக்லெஸ் கேக் ரெஸிப்பி தேடி எடுக்கனும், கேக் செய்யன்னு நினைச்சிட்டு இருந்தேன். இங்க வந்து பார்த்தா, கரக்ட்டா உங்க ரெஸிப்பி! :) நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

லாவண்யா,
இந்த கேக் குறிப்பை தான் எதிர்ப்பார்த்தீங்களா?(உங்களுக்கு தெரியாத குறிப்பா?)ஆரஞ்சு ஜூஸுக்கு பதில்,லெமன்/லைம் ஜூஸும்,ஜெஸ்ட்டும் சேர்த்தால் லெமன் கேக் ரெடி.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

Abu Nisha,
உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.

வனிதா,
பூ,டிசைன் போட இன்னும் கத்துக்கல.கண்டிப்பா அடுத்த கேக் கொஞ்சம் பெட்டரா ப்ரெசன்ட் பண்ண பார்க்கிறேன்.மாலே போனதும் செய்து பாருங்க.ரொம்ப ஈசி தான்.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

சுஸ்ரீ,
போன வீகென்ட் என்னவரின் பிறந்த நாளுக்காக செய்தேன்.சர்ப்ரைஸா செய்ததால்,வீட்டில் இருந்த பொருட்கள் கொண்டே செய்தேன்.கேக் மேலே வெறும் "Happy Birthday"மட்டும் தான் எழுதினேன்.கேக் நல்லா வந்தது.அதிசயமாக என் மகனும் விரும்பி சாப்பிட்டான்.நீங்களும் செய்து பாருங்க.கேக் மாவுடன் விரும்பினால் வால் நட்ஸ் சேர்த்துக்கோங்க.உங்களவருக்கு, "அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்".

அட... இத்தனை அழகான கேக், சுவையான கேக் செய்துட்டீங்க, பூ வரைவது சிரமமா?? அங்கே சூப்பர் மார்க்கெட்டில் கோன் முன் ஃபிக்ஸ் செய்யும் பூ, இலை வடிவங்கள் எல்லாம் வரைய வித விதமான மூக்குகள் கிடைக்கும். இதே க்ரீமில் கலர் கலந்து அந்த மூக்கை ஃபிக்ஸ் செய்து அழுத்தினால் பூ, இலை எல்லாம் வரும். சிரியாவில் அது போல் பார்த்திருக்கேன். ட்ரை பண்ணுங்க. இது ப்ரெசெண்டேஷன் அழகா இருக்கு... ஆனா பூ இருந்திருந்தா கலர்ஃபுல்லா இன்னும் சூப்பரா இருந்திருக்கும். அதான் சொன்னேன் :) அடுத்தது பூவோடு எதிர் பார்த்து காத்திருக்கேன்.

அதெல்லாம் சரி... போன வாரம் அவர் பிறந்த நாள் என்று சொல்லவே இல்லையே... தாமதமான வாழ்த்துக்கள். மறக்காம சொல்லிடுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா...,மிகவும் அருமையான சுலபமான கேக் செய்துகாட்டி இருக்கீங்க ஹர்ஷா.
அதுவும் எக்லெஸ் கேக்.கண்டன்ஸ்ட் மில்க்கின் சுவையோடு நிச்சயம் சூப்பராகவே இருக்கும்.
அருமையான கேக்கை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஹர்ஷா.
வாழ்த்துக்களும்....

என்றுமன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வனிதா,
ஆமாம்,நீங்க சொல்வதுபோல்,பூ செய்து வைத்திருந்தால் இன்னும் பளிச்சுனு இருந்திருக்கும்.எனக்கும் பூ,டிசைன் போட்டு அனுப்ப ஆசைதான்.டிசைன்,பூக்கள் செய்யும் அந்த அச்சுகள்,(மூக்குகள்)இன்னும் வாங்கவில்லை.வாங்கியதும் அடுத்த முறை பூவுடன் செய்து அனுப்புறேன்.என்னிடம் உரிமையோடு ஐடியாஸ் சொல்வது ரொம்ப பிடிச்சு இருக்கு.உங்க அன்புக்கு நன்றி,வனிதா.கண்டிப்பா அவரிடம் உங்க வாழ்த்துக்களை சொல்லிடுறேன்.அறுசுவையில் இருந்து,அவருக்கு வாழ்த்து கிடைத்ததில் மகிழ்ச்சி.

அப்சரா,
உங்க பாராட்டுக்களுக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.ஆனால் உங்க அளவுக்கெல்லாம் நான் ஒன்றும் செய்யல.உங்க குறிப்புகள் எல்லாம் பார்த்து வியந்திருக்கிறேன்.நீங்கள் பதிவு போட்டு ஊக்கப்படுத்துவது,உற்சாகமா இருக்கு.நன்றி அப்சரா.

உங்களை போல யாராலும் கேக் பேக் செய்யவே முடியாது ;)
அதிலும் நீங்க செய்யும் க்ரீம் பார்க்கவே அத்தனை சில்கியா இருக்கு
வாழ்த்துகள்.. யம்மி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு வித விதமா கேக் செய்றிங்க வாழ்த்துக்கள் அருமையா இருக்கு

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அன்பு கேக் சூப்பரா இருக்கு.... அருமையான குறிப்பு...வாழ்த்துக்கள்;)

Don't Worry Be Happy.

ஹர்ஷா,
வீக்கென்ட் உங்க ஆரஞ்சு கேக் செய்து சூப்பரா சாப்பிட்டாச்சு! (நான் ஒரு முறை எக் இல்லாமல் செய்யவதற்காக வேற சப்ஸ்ட்டிடுயூட் போட்டு கேக் எழும்பவே இல்லை! :)) ஆனால், உங்க ரெஸிப்பி, நல்லா அருமையா, புஸ்னு பொங்கி வந்தது ஹர்ஷா! நான் சாக்லெட் ஃப்ராஸ்டிங் மேலே தடவி, என் பொண்ணுகிட்ட கொடுத்தேன். அப்புறம் என்ன, அவ கேக் டெக்கரேஷன் க்ரீம் வைச்சி ஹேப்பி பர்த்டே அப்பா என்று எழுதி, கூடவே கொஞ்சம் பூ எல்லாம் போட்டு, ஸ்மைலிங் ஃபேஸ் ஒன்னும் வரைந்தாள்! :) பசங்களுக்கு ரொம்ப டேஸ்ட் பிடிச்சிருந்ததால், மறுபடியும் இந்த கேக் வர வீக்கெண்ட் செய்ய சொல்லி இருக்காங்க! :)
பி.கு. பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஹர்ஷா! உங்களவருக்கும் மறக்காம சொல்லிடுங்க, வெரி பிலேட்டட் விஷ்ஷஸ்! :)

அன்புடன்
சுஸ்ரீ

hi,
your recipe is looking good.let me know what is ஆரஞ்சு ஜெஸ்ட்?

ரம்ஸ்,
இதைவிட நல்ல நல்ல கேக் குறிப்புகள் நம் அறுசுவையில் இருக்கே!(உங்க குறிப்புமே சூப்பரா இருக்கும்.)இருந்தாலும் ரொம்ப நன்றி.க்ரீம் கடையில வாங்கினது. ;-)

குமாரி,
உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

ஜெய்,
மிக்க நன்றி. :-)

சுஸ்ரீ,
செய்துட்டீங்களா?மிக்க நன்றி.உங்க குட்டீஸ்க்கும் பிடிச்சதில் ரொம்ப ரொம்ப சந்தோஷம்.இந்த கேக் சாஃப்ட்டாவும் இருக்கும்.நானும் இன்னொரு முறை இந்த கேக் செய்யலாம்னு இருக்கேன்.கண்டிப்பா உங்க வாழ்த்துக்களை அவருக்கு சொல்லிடுறேன்.ரொம்ப நன்றி,சுஸ்ரீ.

ரேணுகா கார்த்திக்,
ஆரஞ்சு தோலை துறுவியது தான் ஆரஞ்சு ஜெஸ்ட்(Orange Zest).

வணக்கம்
நீங்க பண்ண கேக் ரொம்பா அருமை ஆனால் எனாக்கு இது என்னனு புரியலை சொல்லுங்க (வெனிலா ஃப்ராஸ்ட்டிங் - ஒரு கேன் (16 அவுன்ஸ்) இது எங்கே கிடைக்கும்

மோஹனம்,
ஃப்ராஸ்ட்டிங் என்பது,கேக்கின் மேல் பூசும் க்ரீம் தான்.இது சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள பேக்கிங் செக்‌ஷனில் கிடைக்கும்.