கர்பிணி பெண்களுக்கான diet Chat Pls

யாரவது உங்களுக்கு தெரிந்த Pregnancy diet chart சொல்லவும்.தினமும்
என்னவெல்லம் சாப்பிடலாம்,என சொல்லவும்

ஹாய் Regi
congrats! every 2 hoursகு ஒரு முறை சாப்பிடுங்க
large 3 mealsஅ cut பண்ணிட்டு கொஞ்சமா 6 டைம் சாப்பிடுங்க
diet chart
6'o clock -- 4 marie biscuits/bread, 1 cup milk
8'o clock --- 3 or 4 idly/dosa/chappathi/ pongal with sambar, 4 badam paruppu,4 dates
11'o clock --- 1 glass fresh (orange or apple) juice/(veg or non-veg)soup/2 boiled eggs.
1'o clock --- 1 cup rice, dhall, 1 keerai, 1 cup vegetable kootu,curd
4'o clock --- 1 cup roasted groundnut/vega vaitha payaru ethavathu /2 sandwich/ 1cup salad(veg/fruits)
6'0 clock --- 1 full fruit (orange/apple/pomegrante/kiwi/guava/ piece of watermelon/ small quantity of grapes)
8'0 clock --- 3 chappathi/dosa/idli with one cup of vegetables kuruma or sambar
10'0 clock --- 1 full glass of milk. milk without sugar / half sugar

Avoid : Raw egg, coffee, chat masala items(pani puri,pel puri) and hotel chutneys.
இது எனக்கு ஒரு dietician சொன்னது உங்களுக்கும் helpfull a இருக்கும்.
All the best.

ALL IS WELL
GOKILA PREM

thank u so much gokila prem.ur chart will be so useful to me,

with wishes,,
regi

அறுசுவை சமையல் களஞ்சியம் இணையதளம் மிகவும் பயனுள்ள தளமாக இருக்கிறது. என்னைப் போன்ற சாப்பாடு பிரியர்களுக்கும், சமையல் கற்றுக் கொள்ள விரும்பும் மகளிருக்கும் மிகவும் உபயோகமான தளம். வாழ்த்துகள். இந்த இணையதளத்தின்மூலம் நானும் பயனடைந்து வருகிறேன். அதற்கு எனது மனமார்ந்த நன்றி. இதில் பங்கேற்று வரும் அனைத்து சகோதரிகளுக்கும் எனது நன்றி.

எதுக்கு காபி குடிக்க கூடாது

Coffee contains Caffeine which is a stimulant .thats why we feel instant freshness after we drink it. When pregnant women consume coffee in a larger amount,the stimulant obiviously is carried to the baby that may increase blood pressure , heart rate in abnormal ways thereby resulting in things which we dont want to happen to us or the baby.
So drinking less or no coffee is always followed for healthy pregnancy.

pls refer the links to get more details
http://www.healthlivingblog.com/pregnant-women-should-not-drink-coffee-and-caffeinated-beverages.html

Preethi Vasanth

டயட் சார்ட் என்றெல்லாம் தனியாக பின்பற்ற வேண்டாமென்பது என் சொந்த அனுபவம். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் அதுவும் தென்இந்தியர்களின் உணவில் சரி விகிதத்தில் கார்பஸ், புரதம், வைட்டமின்கள் ஏராளமாக உள்ளது.
தினமும் காய்கறிகள் பழங்கள் மற்றும் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு பயிர் வகையை முளை கட்டியோ அல்லது வேகவைத்தோ சாப்பிடவும். உணவில் காரம் உப்பின் அளவை குறைத்துக் கொள்ளவும். கொழுப்பு நீக்கிய பால் இரண்டிலிருந்து மூன்று க்ளாஸ் பருகினாலே போதும். இடை இடையே பசித்தால் பழங்கள் அல்லது காரட் வெள்ளரி போன்றவைகளை சாப்பிடவும். ஜூஸ் குடிப்பதை விட பழமாகவே சாப்பிடவும். தினம் எதாவது நட்ஸ் சாப்பிடவும். கொழுப்பு சத்து அதிகமுள்ள முந்திரி வகைகளை ஐந்து சாபிட்டாலே போதும். பிஸ்தா மிகவும் குறைந்த கலோரி நட். . நார் சத்துள்ள பழங்கள் காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொண்டால் மலசிக்கல் வராது. ஜன்க் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பொரித்தது, வறுத்தது ஊருக்காய் என்று நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டாம்.
பெரியவர்கள் சொல்லுவார்கள் இரண்டு உயிர் அதற்காக இரண்டு மடங்காக சாப்பிட வேண்டும் என்று. அதெல்லாம் தேவையே இல்லை. உள்ளே இருப்பது பச்சிளம் குழந்தை அது என்னங்க ஒரு பெரிய ஆள் சாப்பாடா சாப்பிட போகுது. மருத்துவர்களின் கூற்றுப் படி நாம் அன்றாடம் சாப்பிடும் சாப்பாட்டுடன் ஒரு ஆப்பிள் சேர்த்தாலே குழந்தைக்கு தேவையான ஊட்ட சத்து கிடைக்கும். தேவையில்லாமல் இப்போ நிறைய சாப்பிட்டு விட்டு பின்பு குழந்தை பறந்த பிறகு எடை குறைக்க நாம் தான் சிரமப்படணும்.

காபி கண்டிப்பாக குடிக்கவே கூடாதேன்றேல்லாம் இல்லை. கண்டிப்பாக குடித்தே ஆக வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை அதற்க்கு மேல் வேண்டாம்.

ப்ரீத்தி வசந்த்,
அறுசுவை தளத்தின் விதிமுறை படி வேறு தளத்தின் லின்க்கை இங்கே கொடுக்க கூடாது. நீங்கள் புதிவர் என்பதால் தெரியாது என்று நினைக்கிறேன். ஒரு முறை அறுசுவையின் விதிமுறைகளை (மன்றத்தில் இருக்கின்றது) பார்க்கவும். நீங்கள் மேலும் அழகிய தமிழில் பதிவிட்டால் நீங்க சொல்லியிருக்கும் அற்புதமான விஷயமும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும். அடுத்த பதிவை தமிழில் எதிர்ப்பார்க்கிறேன் தோழி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்