ஹாய் தோழிஸ்.... ஒர் ஹெல்ப் வேண்டும்...
என் சிஸ்டர் 2வருஷம் முன்னாடி washing கு ரின் சோப் use பன்னா அபத்லேர்ந்து அவளுக்கு உள்ளங்கை அரிப்பு, வெடித்து ரத்தம் வருதுபா நாங்க 2,3 ஸ்கின் டாக்டர் கிட்ட போயும் சரியாகல ஆ டாக்டர் ஸ்கின் அலர்ஜி சொன்னாங்கபா உங்களுக்கு இதப்பற்றி தெரிஞ்சா சொல்லுங்கபா பிளீஸ்
-ரஸினா
answer me pls answer me
தோழி உங்கள் சகோதரியை ஸ்கின் டாக்டரை பார்க்கசொல்லுங்கள்.ஏன்னா 2 வருடம் முன் உபயோகித்து அதைத்தொடர்ந்து இன்னும் சரியாகலைன்னா ஒருமுறை டாக்டரை அனுகுவதுதான் சரி.
உள்ளங்கையில் ஈரப்பதம் குறைவதால்கூட இப்படி ஆகலாம்.தேங்காய் எண்ணேய் தினமும் தேய்க்க சொல்லுங்கள். வாசலின்கூட போடலாம். முடிந்தவரை துவைக்க வேப்ப எண்ணை சோப்பை உபயோகித்தால் இப்படி ஆவதில்லை.அதன் வேம்பு ஆயில் படுவதால் சீக்கிரம் குணமாகவும் வாய்ப்புண்டு..... ஆனால் முதலில் மருத்துவரை அனுகச்சொல்லுங்கள்......
டாக்டரைப் பாக்குறதை விட முக்கியம் ட்ரீட்மன்ட விடாம தொடருறது. சில விஷயங்கள் சட்டென்று சரியாகிருறது இல்லை. தொடர்ந்து மூன்று மாதம், சிலருக்கு ஆறேழு மாதங்கள் கூட தொடர வேண்டி வரலாம். மனம் தளராம தொடரணும். அவங்க ட்ரீட்மண்ட்ல மாய்ஸ்சரைசரும் இருக்கும். கொடுக்கிற இன்ஸ்ட்ரக்க்ஷன் படி விடாம போடுங்க.
அடுத்து முக்கியம் க்ளவ். சமைக்கிறது, பாத்திரம் கழுவுறது, துணி துவைக்கிறது, வீடு க்ளீன் பண்றது, தோட்டவேலை என்று எதுவானாலும் க்ளவ் இல்லாம பண்ண வேணாம். ஒரு ப்ராண்ட் க்ளவ் ஒத்துவராதது போல இருந்தால் ப்ராண்ட் மாத்திப் பாருங்க.
டெய்லி சாப்பிடுறது எல்லாம் நோட் பண்ணி வைங்க. பிரச்சினை ஆரம்பிச்சதுக்குக் காரணம் ரின்சோப் ஆனாலும் சிலருக்கு ஆரம்பிச்ச பிறகு சாப்பிடுற சில பொருட்கள் அரிப்பு, நீர்வடியுறது என்று சிரமத்தைக் கூட்டி வைக்கும். கவனிச்சு குறிப்பிட்ட அந்த உணவுகளை கை சரியாகிற வரைக்கும் தவிர்க்கிறது நல்லது.
அடிக்கடி கையைக் கழுவாதீங்க. கைக்கு சோப் போட வேண்டாம். கட்டாயம் போட வேண்டுமானால் ஏதாவது மென்மையான ஹான்ட்வாஷ் நல்லது. இதுகூட சிலருக்கு ஆகாது.
காயத்தைக் க்ளீன் பண்ண டாக்டர் சொல்லாத எதையும் பயன்படுத்தாதீங்க.
இமா
நன்றி ரேணு, இமா நா இப்பத்தான் கருத்துக்களை பார்த்தேன் ரொம்ப நன்றிபா....
-ரஸினா
en makalukku kai kal koppalam varuthu doctor athu kosu alarji nu solranga maruwthu poodda nalayirum apuram mindum varuthu ennea seyvathu pls solunga
என் மகளுக்கும் அது போல் வந்தது . எனக்கு மருத்துவர் சொன்ன அறிவுரை , full sleeve dress போட்டு விடுங்க . குறிப்பா மாலை 4 மணிக்கு மேல் காலை குளிப்பதற்கு முன் வரை . அது எனக்கு அவர் சொன்ன பொழுது வேடிக்கையாக இருந்தது . ஆனால் அது தான் உண்மை . இப்பொழுது என் மகளுக்கு அந்த புண் குறைந்து விட்டது . வாரத்திற்கு இரண்டு முறை நகம் கட் செய்து விடுங்கள் . உங்கள் மகளின் வயது என்ன ? வேறு சந்தேகம் இருந்தால் கேளுங்கள்