பாசிப்பயறு பிரட்டல்

தேதி: June 29, 2006

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாசிப்பயறு - நூற்றைம்பது கிராம்
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
மஞ்சள் பொடி - ஒரு டீஸ்பூன்
மிளகாய் பொடி - அரை டீஸ்பூன்
உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
பட்டை, இலை, அன்னாசிப்பூ - தாளிக்க
அரைக்க:
தேங்காய் துருவல் - மூன்று டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - நான்கு
பொட்டுக்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
கசகசா - ஒரு டீஸ்பூன்
பூண்டு - இரண்டு பல்


 

பாசிப்பயறை இரவு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவி நீரை வடித்து விட்டு ஹாட்பேக்கில் போட்டு மூடி வைத்தல் மறுநாள் முளை விட்டு இருக்கும்.
பாசிப்பயரில் இருநூறு மில்லி தண்ணீர் விட்டு உப்பு போட்டு முக்கால் வேக்காடு வேக வைக்கவும்.
வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை குறுக்கில் ஆறு துண்டுகளாகவும் நறுக்கி வைக்கவும்.
பயறில் உள்ள தண்ணீரை வடித்து அந்த தண்ணீரை ஊற்றி அரைக்க வைத்துள்ளவற்றை அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க வைத்துள்ளவற்றைப் போட்டு வாசனை வந்ததும் கறிவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
மூன்று நிமிடம் வதக்கி மஞ்சள் பொடி, மிளகாய் பொடி சேர்க்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து மூன்று நிமிடம் வதக்கி பயறை சேர்க்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து அரைத்த மசாலா போட்டு கொதிக்க விடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து அடிக்கடி கிளறி விட்டு பத்து நிமிடம் கழித்து இறக்கவும்.


முளைவிட்ட பாசிப்பயறில் புரதம் (புரோட்டீன்) அதிக அளவில் உள்ளதாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

DEAR MADAM!

ME TOO FROM KUWAIT. CONGRATULATIONS FOR YOUR 100th RECIPE IN A VERY SHORT PERIOD. CONTINUE YOUR DEDICATED WORK WITH FLYING SPIRIT AND GOOD HEALTH.

NOODLES

மிக்க நன்றி நூடுல்ஸ்!!!
பாராட்டிற்கு நன்றி.... நிச்சயம் இன்னும் நிறையக் குறிப்புகள் கொடுக்க எண்ணம் கொண்டுள்ளேன்....

Vazhga Tamil!!!