பாசிப்பயறு பிரட்டல்

வழங்கியவர் : CHITHRA DURAI
தேதி : வியாழன், 29/06/2006 - 15:23
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் : 25 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு
- பாசிப்பயறு - நூற்றைம்பது கிராம்
- வெங்காயம் - இரண்டு
- தக்காளி - இரண்டு
- மஞ்சள் பொடி - ஒரு டீஸ்பூன்
- மிளகாய் பொடி - அரை டீஸ்பூன்
- உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை - இரண்டு கொத்து
- பட்டை, இலை, அன்னாசிப்பூ - தாளிக்க
- அரைக்க:
- தேங்காய் துருவல் - மூன்று டேபிள் ஸ்பூன்
- வரமிளகாய் - நான்கு
- பொட்டுக்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்
- சோம்பு - ஒரு டீஸ்பூன்
- கசகசா - ஒரு டீஸ்பூன்
- பூண்டு - இரண்டு பல்
- பாசிப்பயறை இரவு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவி நீரை வடித்து விட்டு ஹாட்பேக்கில் போட்டு மூடி வைத்தல் மறுநாள் முளை விட்டு இருக்கும்.
- பாசிப்பயரில் இருநூறு மில்லி தண்ணீர் விட்டு உப்பு போட்டு முக்கால் வேக்காடு வேக வைக்கவும்.
- வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை குறுக்கில் ஆறு துண்டுகளாகவும் நறுக்கி வைக்கவும்.
- பயறில் உள்ள தண்ணீரை வடித்து அந்த தண்ணீரை ஊற்றி அரைக்க வைத்துள்ளவற்றை அரைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க வைத்துள்ளவற்றைப் போட்டு வாசனை வந்ததும் கறிவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
- மூன்று நிமிடம் வதக்கி மஞ்சள் பொடி, மிளகாய் பொடி சேர்க்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து மூன்று நிமிடம் வதக்கி பயறை சேர்க்கவும்.
- ஐந்து நிமிடம் கழித்து அரைத்த மசாலா போட்டு கொதிக்க விடவும்.
- அடுப்பை சிம்மில் வைத்து அடிக்கடி கிளறி விட்டு பத்து நிமிடம் கழித்து இறக்கவும்.
Note:
முளைவிட்ட பாசிப்பயறில் புரதம் (புரோட்டீன்) அதிக அளவில் உள்ளதாம்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
DEAR MADAM!
ME TOO FROM KUWAIT. CONGRATULATIONS FOR YOUR 100th RECIPE IN A VERY SHORT PERIOD. CONTINUE YOUR DEDICATED WORK WITH FLYING SPIRIT AND GOOD HEALTH.
NOODLES
மிக்க நன்றி நூடுல்ஸ்!!!
பாராட்டிற்கு நன்றி.... நிச்சயம் இன்னும் நிறையக் குறிப்புகள் கொடுக்க எண்ணம் கொண்டுள்ளேன்....
Vazhga Tamil!!!