திருவாச்சி துவையல்

தேதி: October 14, 2011

பரிமாறும் அளவு: 4 - நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

திருவாச்சி இலை _ ஒரு கைய்யளவு
தேங்காய் துருவல் _ அரை கப்
புளி _ பெரிய நெல்லிக்காய் அளவு
சிறிய வெங்காயம் _ மூன்று
பச்சைமிளகாய் _ மூன்று(காரத்திற்க்கேற்ப)
உப்பு _ தேவையான அளவு


 

திருவாச்சி இலையை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு அகன்ற வானலியை அடுப்பில் வைத்து,அதில் தேங்காய் துருவலை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
பின்பு வெங்காயம்,பச்சை மிளகாய்,சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
அதன் பின் புளியையும்,திருவாச்சி இலையையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து ஆறவிடவும்.
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் சிறிதளவே தண்ணீர் சேர்த்து அரைத்து விடவும்.
மிகவும் சுவையான மணமான திருவாச்சி துவையல் தயார்.
சாம்பார்,தயிர் சாதங்களுக்கு தொட்டுக் கொள்ள மிகவும் நல்ல காம்பினேஷனாக இருக்கும்.
இதை அம்மியில் அரைத்தால் இன்னும் இதன் சுவை அபாரமாக இருக்கும்.


இந்த திருவாச்சி இலையை சிலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இதை பார்ப்பதற்க்கு காசு காசாக இருக்கும்.மணமோ அரைத்த பின் கருவேப்பிலை போன்ற வாசத்தை கொடுக்கும்.
உடம்பிற்க்கு மிகவும் நல்லதாகும்.கால் வலிக்கெல்லாம் நல்லது என்று எங்கள் ஊர்களில் சொல்லுவார்கள்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடிய நல்ல துவையல் இது.

மேலும் சில குறிப்புகள்


Comments

அப்சரா,
எப்படி இருக்கீங்க?பேசி வெகு நாட்கள் ஆகுது.
திருவாச்சி துவையல் பெயரே வித்தியாசமா இருக்கு.திருவாச்சி இலைகள் கேள்விப்பட்டதில்லை.முடிந்தால் குறிப்பை படத்துடன் அனுப்புங்க.திருவாச்சி இலையை பார்க்க ஆவலா இருக்கு.வித்தியாசமான குறிப்பு.வாழ்த்துக்கள்.

ஹாய் ஹர்ஷா எப்படி இருக்கீங்க?
நான் நலமாக இருக்கின்றேன்.சில காரணங்களால் என்னால் அருசுவைக்கு வரமுடியாமல் போய் விட்டது.
இன்று எல்லோரையும் இப்பாக்கம் வந்து எழுத்துக்கள் மூலம் சந்திப்பத்iலl ்mக்கிி மகிழ்ச்சி.

ஆமாம் ஹர்ஷா நான் குறிப்பிட்டது போல் இதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.ஆனால் இதன் சுவையை அறிந்து விட்டால் யாரும் விட மாட்டார்கள்.
இப்படி அறிய பல விஷயங்கள் எல்லாம் நமது ஊரில் இருக்கின்றன.அதை பலருக்கும் தெரியபடுத்தாமலே போய்விடுகின்றது.

வந்து கத்திட்டமைக்கு மிகவும் நன்றி ஹர்ஷா.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் அப்சரா எப்படி இருக்கீங்க? இந்த பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகுதே ஏன் வரவில்லை? இன்று உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி :)

திருவாச்சி துவையல் படிக்கும்போதே சாப்பிடனும்னு தோனுது ஆனால் இப்படி ஒரு கீரை கேள்விபட்டதே இல்லையே :( முடிந்தால் படத்துடன் அனுப்புங்கப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஆஹா.., வாங்க ஸ்வர்ணா..., நான் நலாமாக இருக்கின்றேன்.
நீங்கள் நலமாகைருக்கின்றீர்களா..?
எனக்கும் உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி பா....
இந்த அருசுவையையும்,உங்கள் அனைவரையும் ரொம்பவே மிஸ் பண்ணேன்.
இனி அவ்வபோது வந்து செல்வேன்.

வந்ததற்க்கான அறிகுறியாய் ஒரு குறிப்பை வெளியிடுவோமேன்னு தான் இதை வெளி்யிட்டேன் ஸ்வர்ணா.இனி நேரம் கிடைக்கும் போது படங்களுடன் கூடிய குறிப்பை அனுப்புகிறேன்.
மிக்க நன்றி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா நலமா? திருவாச்சி துவையல் கேள்விப்படாத புதுமை குறிப்பு. இது எந்த ஊர் ஸ்பெஷல். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது மறக்காமல் இதை படத்துடன் கொடுங்கள்.