திருமணங்களுக்கு போடக்கூடிய ஹென்னா டிசைன் - 4

தேதி: October 15, 2011

5
Average: 4.3 (29 votes)

 

ஹென்னா கோன் - ஒன்று

 

மணிக்கட்டுக்கு சிறிது கீழே படத்தில் உள்ளது போல் டிசைன் வரைந்து நிரப்பவும்.
அதன் மேலே அரச இலை போன்ற டிசைன் வரைந்து நிரப்பவும்.
இலையின் நடுப்பகுதியை மையமாக கொண்டு மாங்காய் வடிவம் வரைந்து நிரப்பவும்.
முதலில் வரைந்து டிசைனின் கீழ் பகுதியிலும் மேலே வரைந்தது போலவே இலை வடிவம் வரைந்து நிரப்பவும். விரும்பினால் இதன் கீழ் மேலே வரைந்தது போல் மாங்காய் வடிவமும் வரையலாம்.
இப்போது இலையை சுற்றி சிறு அரும்பு போன்ற வடிவத்தை வரையவும்.
இதே போல் மேலே வரைந்த மாங்காய் டிசைனை சுற்றியும் வரைந்து முடிக்கவும்.
விரல்களில் கட்டங்கள் வரைந்து நிரப்பி கீழே சிறு புள்ளிகள் வரைந்து விடவும்.
இப்போது மீதம் இருக்கும் இடங்களில் சிறு அரும்பு அல்லது முத்துக்கள் போன்ற டிசைன் போட்டு முடிக்கவும். இது திருமணங்களுக்கு போடக்கூடிய மிகவும் சுலபமான டிசைன்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகா இருக்கு இந்த டிசைன் நான் ட்ரை பண்ணி பாக்றேன் அந்த இழை டிசைன் ரொம்ப அழகுக்கா வாழ்த்துக்கள் அக்கா by Elaya.G

ரொம்...ப அழகு வனி.

‍- இமா க்றிஸ்

ரொம்ப ஈஸியா, அழகா இருக்கு. தீபாவளிக்கு போட்டுக் கொள்ளக்கூடிய சுலபமான டிசைன் வனி.

வனி அழகோ அழகு கலக்குறீங்க என் அக்கா மெரேஜ்க்கு இத தா போட போறேன் சூப்பர்பா வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

What a creative idea? superb i like it very much. Ur photos are good its clarity is very nice and well done.

வனிதாக்கா ரொம்ப அழகா இருக்கு. சிம்பிளான டிஸைன்.. பார்ட்டிக்கு வச்சுக்கலாம்போல இருக்கே.

KEEP SMILING ALWAYS :-)

ஹாய் வனி அக்கா நான் அருசுவைக்கு வந்தபிறகு எங்களுடைய ஒவ்வொரு பெருநாளுக்கும் உங்களது மெஹந்தி டிசைனயே போடுவேன்,மற்றவர்களுக்கும் போட்டுவிடுவேன்.பிறகு பாராட்டு மழைதான் எனக்கு.அப்பாராட்டனைத்தும் உங்களையே சாரும்.அடுத்த மாதம் வரும் ஹஜ்ஜுப் பெருநாளைக்கு இந்த மாடல் டிசைனையே போட்டுக்கொள்ளப்போகிரேன்.உங்கள் கைவேலைகள் அனைத்தும் மிகவும் அருமை.நான் உங்கள் ரசிகையாகிவிட்டேன்.

வனி எளிமையாவும் அழகாவும் இருக்கு.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

என்ன வனி எப்படி இருக்கீங்க..?வீட்டில் அனைவரும் நலமா..?
என்னை மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.
நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றுதான் என்னால் அருசுவையில் நுழைவதற்க்கான சந்தர்ப்பம் கிடைத்தது.இனி அவ்வபோது வந்து செல்வேன் என நினைக்கிறேன்.
சரி வந்த விஷயத்தை விட்டுட்டேனே....
வழக்கம் போல் உங்கள் கைத்திறன் முகப்பிலே பளிச்சிட்டது.வனியா...கொக்கா...
சூப்பரா கலக்கலான டிசைனாக இருக்கின்றது.ஏதோ இந்த ஊரில் வந்து செட்டில் ஆனப்பிறகு நானும் கூட சிலருக்கு மெகந்தி போடுறேன்பா...(என்னையும்நம்பி அவங்க கைய்யை கொடுக்குறாங்கல்ல...)
உங்களுடைய டிசைனெல்லாம் போட்டு விட வேண்டியதுதான்.
இந்த டிசைனும்,உங்களுடையை மற்ர டிசைன்களை போன்றே மாறுபட்டு சூப்பரா........... இருக்கு.
வாழ்த்துக்கள் வனி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ரொம்ப எளிமையாவும் அதே சமயம் கடைசியா பார்க்கிறப்ப ரொம்பவே க்ரான்டா தெரியுறது தான் உங்க ஸ்பெஷாலிட்டி வனி

Superrbbb!!

வனிதா,
வழக்கம் போலவே கலக்கிட்டீங்க.அழகான டிசைன்.விரல்களில் போட்டிருக்கும் டிசைன் ரொம்ப அழகு.அரச இலை டிசைன் மெஹந்தியில் கொண்டு வந்தது நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்,வனிதா.

ரொம்ப ரொம்ப ட்ரெண்டியா அழகா இருக்கு.. நல்ல ஒரு சிந்தனை உங்களுக்கு.. நானும் கோன் ஒன்னு வாங்கி வைத்து பார்த்திட்டே இருக்கேன் :)
வாழ்த்துக்கள் வனி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சூப்பர் ......!சூப்பர்........! சூப்பர்........!

மொதல்ல இந்த அரும்பை ஒழுங்கா ஒரேமாதிரி போடக் கத்துக்கறேன் பாக்கி அதுக்கப்புறம் ட்ரை பண்றேன்..இப்படி பட்ட டிசைனப் போயி சிம்பிள்னு சொல்லிட்டீங்களே .....ரொம்ப நல்லவங்க நீங்க..;-)

Don't Worry Be Happy.

வனிக்கா ரொம்ப தெளிவா அழகா இருக்கு..கடைசி போட்டோ சூப்பரா இருக்கு....வாழ்த்துக்கள் வனிக்கா....

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி. :)

இளையா... மிக்க நன்றி. இனி ட்ரை பண்ண படம் அனுப்பிடுவீங்க தானே?? ;)

இமா... ரொம்ப நன்றி :) செபா ஆண்ட்டி எப்படி இருக்காங்க?? நீங்களும் கியூட்டா மெஹெந்தி வைக்கறீங்க... அனுப்புங்களேன் ப்ளீஸ் :)

வினோ... அவசியம் தீபாவளிக்கு உங்க கையில் இருக்கும் தானே ;) மிக்க நன்றி.

ரேணு... அக்கா கல்யாணமா?? எப்போ? வாழ்த்துக்கள் சொல்லிடுங்க. அவசியம் போட்டு எப்படி வந்ததுன்னும் சொல்லுங்க. மிக்க நன்றி.

கௌதமி... மிக்க நன்றி. ஏதோ நம்மால் முடிஞ்ச வரை எடுத்து அனுப்பறேன் ;)

நாகா... எல்லாத்துக்கும் வைக்கலாம்.... இல்ல என்னை போல் சும்மா வீட்டில் இருக்கும் போதும் வைக்கலாம் ;) மிக்க நன்றி.

Kifa.. பாராட்டு உங்களையே சேரும்... டிசைன் கொடுப்பது சுலபம், அதை பாராட்டும் அளவுக்கு போடுறது நீங்க தானே!!! அதுக்கு முதல்ல என் மனமார்ந்த நன்றி. கண்டிப்பா போட்டு எப்படி வந்ததுன்னு சொல்லுங்க. //நான் உங்கள் ரசிகையாகிவிட்டேன்.// - கால் தரையில் நிக்க மாட்டங்குது வனிக்கு ;) நானும் நானும்... நானும் உங்க பின்னூட்டத்துக்கு ரசிகை ஆகிட்டேன்.

சுவர்ணா... மிக்க நன்றி :)

அப்சரா... உங்களை மறக்க முடியுமா??? மறந்தாலும் பரோட்டா நினைவுபடுத்திடுமே!!! ;) ஹிஹிஹீ. நாங்க எல்லாரும் நலம். நீங்க நலமா? எங்க ரொம்ப நாளா வரல நீங்க? இனியாவது அடிக்கடி வாருங்கள்... மிஸ் பண்ணோம் உங்களையும் உங்க குறிப்புகளையும். மிக்க நன்றி.

தளிகா... உங்க பின்னூட்டம் கிடைச்சாலே நிச்சயம் மகிழ்ச்சி தான் :) மிக்க நன்றி தளிகா.

ஹர்ஷா... மிக்க நன்றி. விரலில் கடைசி நேரத்தில் குட்டீஸ் அழ தொடங்கியதால் சீக்கிரம் போட வேண்டியதாயிடுச்சு, அதான் இந்த டிசைன். அது நல்லா இருக்குன்னதும் மகிழ்ச்சியா இருக்கு :)

ரம்யா... கோன் வாங்கி வெச்சா போதாது, ஒரு டிசைனை போட்டு சீக்கிரம் அறுசுவைக்கு அனுப்பிடனும். பார்க்க நாங்க காத்திருக்கோம். :) மிக்க நன்றி.

ஜெய்... உண்மை தான்... எனக்கும் ஒரு லிமிட்டுக்கு மேல் ஒன்று போல் வரைய சிரமமா இருந்தது. வலது கை பொஷிஷன் மாறாமல், இடது கையை மட்டுமே சுற்றி கொண்டு வந்து வரைந்தது கொஞ்சம் சிரமம் தான். மற்றவர் கையில் போடுங்க சுலபமா இருக்கும், நமக்கே போடுவது தான் சிரமம். அவசியம் ட்ரை பண்ணுங்க சூப்பரா போடுவீங்க. மிக்க நன்றி. :)

சுமி... மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அழகாகவும் simpleஆகவும் இருக்கு... super....

மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டிசைன் நல்லா இருக்கு வனிதா,வாழ்த்துக்கள்!

Eat healthy

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,
எப்பவும் போல இந்த மருதாணி டிசைனும் அருமையா, ரொம்ப அழகா இருக்கு! உங்க‌ளுக்கு ந‌ல்ல‌ க‌ற்ப‌னைத்திற‌ன் வ‌னி! பாராட்டுக்கள்!

(போன‌வார‌ம் உங்க‌ முட்டை பெயிண்டிங் பின்னூட்டத்தில் உங்களுக்கு பதில் போட்டிருந்தேனே?! பார்த்திங்களா வனி?! ஆக்சுவலா, என் பொண்ணுக்கு தீபாவளிக்கு கையில் மருதாணி போட்டுவிடுவதாக சொல்லி இருக்கேன்! அதற்காக, உங்க பழைய டிசைன்ஸை எல்லாம் கொஞ்சம் நோட்டம் பார்த்திட்டு இருந்தேன், :) இதையும் பார்த்துக்கிறேன்! :))

அன்புடன்
சுஸ்ரீ

வனி ரொம்ப அழகா இருக்கு...... கலக்குறீங்க.

<b>அன்புடன்</b>
<b>லலிதா</b>

அன்புடன்,
லலிதா

ரொம்ப அழகா...தெளிவா இருக்கு...

சொல்ல வார்த்தை இல்ல, ரொம்ப ஈஸி ஹா பில் பண்ண கூடிய டிசைன். எப்பவும் போல கலக்கல் தான்.....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுஸ்ரீ.. மிக்க நன்றி. பார்த்தேனே பின்னூட்டத்தை, பதிலும் போட்டேனே. :) இந்த தீபாவளிக்கு குட்டிக்கு கை நிறைய மருதாணி போட்டு குஷி ஆக்கிடுங்க.

லதிதா... இப்போ தான் முதல்ல பேசுறோமோ?? மிக்க நன்றி லலிதா.. இனி அடிக்கடி பேசுவோம். :)

nihaza... மிக்க நன்றி தோழி. உங்க பெயரை எப்படி உச்சரிப்பது?

சுகி... ஆகா... உங்க வாயால(கையால்!!!) கேட்டது மகிழ்ச்சி!! ;) நன்றி சுகி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

cute design.....with perfection.:))

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

அன்புடன்,
மலர்.

மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிக்கா மருதாணி சூப்பர். வனிக்கா சிரியா பத்தி சூப்பர் ஆ எழுதி இருக்கீன்க்க. இன்னிகுதான் படிச்சேன்.

மிக்க நன்றி பிரியா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா