" ப்ரீ ப்ளாண்ட் சிசேரியன்” டாக்டர் சொல்வதும் செய்வதும் சரியாய்?

" ப்ரீ ப்ளாண்ட் சிசேரியன்” பற்றி உங்களுக்கு தெரிந்தது தெரியவிரும்புவது அல்லது உங்களின் அனுபவம் அனைத்தும் இந்த இடத்தில் ஷேர் பண்ணலாம் ...

எனக்கு இது 36 வது வாரம் . முதல் குழந்தை சிசேரியன் தான்.
அதனால் தற்போதும் சிசேரியன் தான் என்று டாக்டர் சொல்லிவிட்டார்கள் .. ஆனால் due date கு 15 நாட்கள்
முனதகவே ஆபரேஷன் பண்ணலாம்னு சொல்லி எங்கள் விருப்பமான நாள் பார்க்க சொல்லிருகாங்க .

என் சந்தேகம் என்வென்றால் ஏன் due date கு 15 நாட்கள் முனதகவே ஆபரேஷன் பண்ணவேண்டும் ? அப்படி பண்ணுவதால் என + இல்ல என்ன - ? குழந்தை வளர்ச்சி நன்றாக இருக்குமா ? இல்லை எதில் தவறு ஈதும் உள்ளதா? உங்களில் யாருகாவது இதுமாதிரி அனுபவம் உள்ளதா?

நீங்கள் சொல்லுவது சரி தான். என் பயம் என்வென்றால் என் முதல் குழந்தை 36 வாரத்திற்கு முன் பிறந்துவிட்டான் . அதனால் அவன் மிகவும் கஷ்டப்பட்டான் . இப்பொழுதாவது full term பேபி கு ஆசை படுகிறான் .

39 வாரத்தில் இருந்து டெலிவெரி டியூ டேட்டுக்கு முன் எப்போது வேண்டுமானாலும் குழந்தையை சிசேரியன் செய்து எடுக்கலாம். அப்போது குழந்தை முழு வளர்ச்சி அடையும். டெலிவெரி டேட்டுக்கு முன் எடுக்க சொல்ல காரணம் ஒன்று தான்... உங்கள் குழந்தை முழுமையான வளர்ச்சி அடைந்து நார்மல் டெலிவெரி வலியோ, பனிக்குடம் உடைதல், அல்லது ப்லீடிங் போன்ற விஷயங்கள் 38 வாரத்துக்கு பின் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்... அப்படி நடந்தால் எமெர்ஜென்சியாக சிசேரியன் செய்ய நேரும்... அது தாய்க்கும், குழந்தைக்கும் நல்லது இல்லை என்பதனால் தான் பாதுகாப்பாக 38 வாரம் முடிந்ததும் அல்லது 39 வாரம் ஆனதும் சிசேரியன் செய்ய சொல்வார்கள். 38 வாரத்துக்கு முன் நடந்தால் குழந்தை வளர்ச்சி பூர்த்தி ஆகி இருக்காது, அதனால் குழந்தைக்கு சுவாசப்பிரெச்சனை போன்றவை ஏற்படலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//ஏன் due date கு 15 நாட்கள் முன்னதாகவே ஆபரேஷன் பண்ணவேண்டும்?// உங்களுக்கு சிசேரியன்தான் பாதுகாப்பு என்று முடிவு செய்து இருந்தால் கடைசி நாள் வரை காத்திருக்க, இயற்கை முந்திக் கொண்டால் சிக்கலாகலாம். அதனால்தான் முன்பாகவே சிசேரியனுக்கு நாள் குறிக்கிறார்கள்.

//அப்படி பண்ணுவதால் என்ன +// இதற்கு பொதுவாகப் பதில் சொல்வதானால்... இது ஒரு பாதுகாப்பு ஏற்பாடு. மற்றப்படி 'ப்ளஸ்' தாயையும் அவர் வயிற்றிலிருக்கும் குழந்தையையும் பொறுத்து வேறுபடும். 'உங்களுக்கு' இதனால் என்ன நன்மை என்பதை உங்கள் டாக்டர் சொல்லி இருப்பார்கள்.

//என்ன - ?// கட்டாயம் சிசேரியன் செய்யத் தேவையான நிலையிலிருக்கும் ஒருவருக்கு இதனால் 'மைனஸ்' எதுவும் இருக்கும் என்று தோன்றவில்லை. நிச்சயம் ப்ளஸ்தான். //தவறு ஈதும் உள்ளதா?// டாக்டர் உங்களைப் பரிசோதித்துச் சொல்கிறார். நாங்கள் பார்க்காமல் அவரவர் அனுபவங்களைச் சொல்கிறோம். டாக்டர் சொல்வதுதான் சரியாக இருக்கும். அவர்கள் சொல்வதைக் கேட்காமல் கடைசி வரை வீட்டில் இருந்தால் மைனஸ் ஆகலாம். ரிஸ்க் எடுக்க வேண்டாம்.

//குழந்தை வளர்ச்சி நன்றாக இருக்குமா?// இருக்கும். இல்லையென்றாலும் அதற்குக் காரணம் இந்தப் பதினைந்து நாட்களாக இல்லாமல் வேறு ஏதாவதாகத்தான் இருக்கும். நிச்சயம் வைத்தியசாலையில் குழந்தைக்குத் தகுந்த பராமரிப்புக் கிடைக்கும், பயப்படத் தேவையில்லை.

ஆரோக்கியமானதொரு குழந்தையை ஈன்றெடுக்க எனது வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

நன்றி வனிதா ,நன்றி imma .
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி . இப்போ என் பயம் சற்று குறைந்துள்ளது ..
.. இருந்தாலும் எது மாறி அனுபவம் யாருகாவது இருந்தால் தயவு செய்து உங்களின் அனுபவத்தை சொல்லுங்கள்

ராஜி,
எனக்கும் முதல் குழந்தை சிசேரியன் செய்து பிறந்தான்.அதனால் இரண்டாவதும் சிசேரியன் தான்.ஆனால்,எனக்கு 39 வாரங்கள் முடிந்த பிறகு தான் டாக்டர்,ஆஸ்பீஷியஸ் டே அண்ட் டைம் பார்க்க சொன்னார்.நாங்கள் பார்த்ததில் நல்ல நாள்,ட்யூ டேட் அன்று தான்.அன்றைக்கு இங்கு(US) பயங்கர பனிப்பொழிவு.
எனக்கு வலியும் வந்தது.குறித்த நேரத்தில்,இரண்டடி ஸ்னோவில் ஹாஸ்பிடல் போக முடியுமா இல்லையானு ரொம்ப கஷ்டமாயிடுச்சு.எப்படியோ குறித்த நேரத்தில் ஆபரேஷன் செய்யப்பட்டு குழந்தை பிறந்தாள்.

அதனால் ட்யூ டேட் வரை காத்திராமல்,முன் கூட்டியே ப்ளான் பண்ணி,உங்களுக்கு வசதிப்படும் நாளில் ஆபரேஷன் பண்ணிக்கோங்க.37 வாரங்களிலேயே குழந்தை முழு வளர்ச்சி பெற்றுவிடும்.
அதன் பின் வரும் வாரங்களில் குழந்தை இன்னும் எடை கூடும்.36 வாரங்களுக்கு முன் பிறந்தால் தான் ப்ரீ மெச்சூர்ட் பேபி.37 வாரங்கள் ஆகி விட்டால் Full term Babyதான்.அதனால் தாராளமாக 37 வாரங்கள் முடிந்ததும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

15 நாட்கள் முன்பாக சி செக்‌ஷன் வேண்டாம் என் நீங்க நினைத்தால்,உங்க டாக்டரிடம் பேசி பாருங்க.39 வாரங்கள் முடிந்ததும் சிசேரியன் பண்ணுங்கனு கேட்டுப்பாருங்க.

தலைப்பை ”ப்ரீ ப்ளாண்ட் சிசேரியன்”அப்படினு மாற்றினால்,பின்னாளில் இழையை தேடி படிப்பவர்களுக்கு உதவும்.

எதுக்கும் இன்னொரு டாக்டரிடம் கன்சல்ட் பண்ணுங்களேன்

தாரளமாக பண்ணிகொள்ளுங்கள். பயப்பட வேண்டாம். பிள்ளை நன்றாக வளர்த்திருப்பார். எனது sisterku நடந்த படியால்
உங்களுக்கும் நம்பிக்கை தருகிறேன். அவருக்கு due date கு 19 நாட்கள் முந்தி. டோன்ட் வோர்ர்ரி

மேலும் சில பதிவுகள்