கேரட் கீரை கூட்டு

தேதி: October 15, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

தண்ணிப்பசலைக் கீரை - ஒரு கட்டு
கேரட் - ஒன்று
வேகவைத்த பாசிபருப்பு - ஒரு சிறிய கப்
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - 2
கடுகு - தாளிக்க
கொத்தமல்லி - ஒரு கொத்து
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
கீரையை மண்போக கழுவி தண்ணீரை வடித்து இளம் தண்டுடன் சேர்த்து நறுக்கி வைக்கவும். கொத்தமல்லி மற்றும் வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கவும். கேரட்டை துருவி வைக்கவும். பச்சைமிளகாய் கீறி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து வெங்காயம் சேர்க்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் கீரை மற்றும் கேரட் சேர்க்கவும்.
இரண்டு நிமிடம் கிளறி உப்பு சேர்த்து தணலை சிறிதாக்கி மூடி வைக்கவும்.
கீரை, கேரட் வெந்ததும் வேகவைத்த பாசிபருப்பு சேர்த்து நன்கு பிரட்டவும்.
கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
சுவையான கேரட் கீரை கூட்டு தயார்.

சாதத்துடன் பிசைந்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். சப்பாத்திக்கு எனில் கொஞ்சம் அதிகமாக பாசிபருப்பும் தண்ணீரும் சேர்த்து செய்யலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். கண்ணுக்கு குளிர்ச்சியான சத்தான உணவு இது. பருப்புக்கீரை பசலைக்கீரையிலும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இதையே காரட் இல்லாம செய்வோம். அம்மா வீட்ல நிறைய பசலைக்கீரை இருக்கு. அம்மாட்ட செய்ய சொல்றேன். பரிமாறியிருக்கும் விதம் அருமை

KEEP SMILING ALWAYS :-)

நல்லாயிருக்கு பா கேரட் ரோஸ் அழகா இருக்கு பா வாழ்த்துகள் நாங்க அரைகீரைல முருங்கைகீரைல செய்வோம் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஜெய் கலர்ஃபுல் கூட்டு சூப்பர்ப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஜெய்,
வித்தியாசமான காம்பினேஷன்.கீரையும்,கேரட்டும் சேர்த்து செய்ததில்லை.இங்கு பசலைக் கீரைதான் கிடைக்கும்.அதில் செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.ப்ரசன்ட் பண்ணியிருக்கும் விதம் நல்லா இருக்கு,ஜெய்.

அழகான குறிப்பு .. அதிலும் எனக்கு கேரட் ரோஸ் ரொம்பவே பிடித்திருக்கு..
வாழ்த்துக்கள். நல்லா ப்ரசண்ட் பண்ணி இருக்கிங்க :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா சொன்னது போல் எனக்கும் குறிப்பில் இருக்கும் கேரட் ரோஸ் ரொம்ப பிடிச்சிருக்கு. முகப்பில் அழகா கியூட்டா இருக்கு :) ஆரோக்கியமான குறிப்பை அழகா கொடுத்திருக்கீங்க. கலக்குறீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தண்ணிப்பசலை என்னது! கங்குன் கீரையா?
குறிப்பு நல்லா இருக்கு. அந்த ரோஸ் எல்லோரையும் இந்தப் பக்கம் வர வைச்சுரும். அழகு. ;)

‍- இமா க்றிஸ்

எனது குறிப்பை அழகா தொகுத்து வழங்கிய அருசுவை டீமுக்கு நன்றி;-)

Don't Worry Be Happy.

மிக்க நன்றி நாகா;) குட்டீஸும் சாப்பிடறதால எதாவது காய சேர்த்தி செஞ்சுடுவேன்;-)

Don't Worry Be Happy.

எனக்கும் முருங்கைக்கீரையில செய்யறது ரொம்பப் பிடிக்கும் இங்க முருங்கைகீரை மார்கெட்ல கிடைக்கிறது இல்ல;( வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி இந்தக்கீரையிலும் செய்து பாருங்க;)

Don't Worry Be Happy.

மிக்க நன்றி ஸ்வர் ;) அப்படியே செஞ்சும் பாருங்க டேஸ்டும் சூப்பரா இருக்கும்;)

Don't Worry Be Happy.

மிக்க நன்றி அன்பு;) ப்ரசண்ட் பண்ணியிருக்கிற விதம் நல்லாயிருக்கா ரொம்ப தேங்
ஸ் எல்லாம் அருசுவை ஜாம்பவான்களாகிய உங்கள எல்லாம் பாத்து கத்துகிட்டதுதான்;-)

Don't Worry Be Happy.

மிக்க நன்றி ரம்ஸ்;) ப்ரசண்ட் பத்தினா அன்புகிட்ட சொன்ன அதே பதில்தான் உங்களுக்கும்;-)

Don't Worry Be Happy.

மிக்க நன்றி வனி;) எல்லாம் உங்க தயவுதான்;)

Don't Worry Be Happy.

இந்தக்கீரையை இங்க பாலக்னுதான் சொல்றாங்க ஆனா இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் இதன் தண்டு குழாய்மாதிரி அமைப்புல இருக்கும் இதோட தண்டுதான் ரொம்ப டேஸ்டி..நான் நெட்ல தேடி பேர் கண்டுபிடிச்சு போட்டேன்;-) இப்படிதான் நீங்க சொன்ன கீரையும் இருக்கும்னா அப்ப இது கங்குன் கீரைதான்;-)

நீங்கலும் இந்தப்பக்கம் வந்ததற்கு மிக்க நன்றி இமா;-) எல்லாரும் ரோஸுன்றீங்க ஆனா நான் தேன்பூன்னு நினைச்சுதான் கேரட் துருவலை வடிவமைச்சேன்;-)

Don't Worry Be Happy.

எல்லா வகை கீரையும் பொரியல் நான் இப்படிதான் ஜெயா செய்வேன்.நீங்க கேரட் சேர்த்து செய்திருப்பது புதுமை.கட்டாயம் இது போல செய்து பார்க்கிரேன்.வாழ்த்துக்கள் ஜெயா.

ஜெயா கீரைக்கூட்டு கேரட் சேர்த்து செய்தது நல்லா இருக்கு. பக்கத்துல இருக்கற இட்லி பூவும் அழகா இருக்கு வாழ்த்துக்கள். இதுல தண்ணியே சேர்க்க வேண்டாமா.

ஜெய் சூப்பர் க்ரீன் அதோட ரெட் சேர்ந்து இருப்பது ரொம்ப அழகா இருக்கு. நிச்சயம் டேஸ்டாவும் இருக்கும்னு தெரியுது. அந்த பக்கத்துல இருக்கற ரோஸ் சூப்பர். கலக்குறீங்க ஜெய்

சாதாரண கீரையை இப்படி கலக்கலா செஞ்சு காண்பித்துட்டீங்க,எல்லாரும் சொன்ன மாதிரி நான் கேரட் ரோஸ்னு நினைக்கல,தேன் பூன்னுதான் நினைச்சேன்!

Eat healthy

ஜெயா,
கேரட் கீரை கூட்டு அருமை! வெறும் கீரையில இதுப்போல கூட்டு செய்வதுண்டு, நீங்க கேரட் சேர்த்திருப்பது கலர்ஃபுல்லா அழகா இருக்கு!
உங்க ப்ரசண்டேஷன் அமர்க்களம், அந்த 'கேரட் பூ' டெக்கரேஷன் பிரமாதம்!
வாழ்த்துக்கள் ஜெயா!

அன்புடன்
சுஸ்ரீ

மிகவும் ஆரோக்கியமான குறிப்பு, நீங்க பரிமாறிய விதம் அருமை

Jaleelakamal

நல்லதொரு சத்தான காம்பினேஷன். ப்ரெசன்டேஷன் அருமை.(நீங்க சொன்ன பிறகு) எனக்கு அது தென்பூவாக தான் தெரிந்தது ;) இதை ஆங்கிலத்தில் "Water Cress" என்று சொல்லுவார்களோ? வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கேரட் கீரை கூட்டு நல்லா இருந்தது

நான்கு வருஷத்துக்கு முன் லாவண்யாவுக்கு வந்த சந்தேகத்திற்கு இப்போ பதில். நீங்களே இதற்குள் கண்டுபிடிச்சிருப்பீங்க. :-) //இதை ஆங்கிலத்தில் "Water Cress" என்று சொல்லுவார்களோ?// இல்லை லாவண்யா. அது வேறு, இது... water spinach. kangkung / kangkong என்று தேடிப் பார்க்கலாம். சைனீஸ் கடைகளில் ong choy என்று வைத்திருப்பார்கள்.

‍- இமா க்றிஸ்