தக்காளி கார சட்னி

தேதி: October 17, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (17 votes)

 

தக்காளி - 3
சின்ன வெங்காயம் - 15 எண்ணிக்கை
காய்ந்த மிளகாய் - 6 அல்லது 8
மல்லி இலை, கறிவேப்பிலை, புதினா - சிறிது
உப்பு - தேவைக்கு
பூண்டு - 3பல்
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி(விருப்பபட்டால்)
உளுந்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
தேங்காய்துண்டு - ஒன்று
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
நறுக்கிய சின்ன வெங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி


 

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
மிக்ஸியில் தேங்காய் துண்டை போட்டு ஒரு சுற்று சுற்றி வதக்கியதை அதனுடன் சேர்த்து உப்பு, பூண்டு சேர்த்து அரைக்கவும். கடைசியில் மல்லி இலை, கறிவேப்பிலை, புதினா சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றை சட்னியில் சேர்த்தால் சுவையான தக்காளி கார சட்னி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்தியாசமான சட்னி பாத்திமா அக்கா செய்து பார்கிறேன் வாழ்த்துக்கள் by Elaya.G

நல்ல சுவையான கார சட்னி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாத்திமா தக்காளி சட்னி கலரே மயக்குது:) வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எங்க அண்ணி செஞ்ச சட்னி போலவே இருக்குபா வாழ்த்துகள் நானும் செஞ்சி அண்ணா அண்ணியை அசத்துறேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

தக்காளி சட்னி சூப்பர்.வாழ்த்துக்கள்.

தக்காளி காரசட்னி ந‌ல்லா செய்திருக்கிங்க‌! சுவையான குறிப்பு!
வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

super colourful dish i will try

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மிக்க நன்றி

வாழ்த்துக்கு மிக்க நன்றி

அசத்திட்டு சீக்கிரமே சொல்லுங்கள் மிக்க நன்றி

வாழ்த்துக்கு மிக்க நன்றி

வாழ்த்துக்கு நன்றி

மிக்க நன்றி

Tried it yesterday. Came out very good. My husband and I loved it.

தக்காளி கார சட்னி ரொம்ப ந‌ல்லா செய்திருக்கிங்க‌!............................................................................................................,,..நானும் இதை செய்து பார்த்தேன்....மிக அருமை..... சுவையான குறிப்பு!

வாழ்த்துக்கள்!

தோழிகளே.......
உங்கள் வாழ்க்கை பாதையை மலர்களால் தூவ
முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் புன்னகையால்
தூவுங்கள்........so smile please...