ப்ரோகோலி நூடுல்ஸ்

தேதி: October 17, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

0
No votes yet

 

ட்ரைடு நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்
ப்ரோகோலி - ஒன்று
கேரட் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பீஃப் கறி - ஒரு கோப்பை
பச்சை குடைமிளகாய் - பாதி
மஷ்ரூம் - சிறிது
ஆலிவ் ஆயில் - 3 தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு


 

ப்ரோகோலியை சிறு சிறுத் துண்டாக நறுக்கவும். வெங்காயம் மற்றும் மஷ்ரூமை நீளமாக நறுக்கவும். கேரட்டை வட்டமாகவும், மிளகாயை கட்டமாகவும் நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய ப்ரோகோலியில் கொதிநீரை ஊற்றி அப்படியே 10 நிமிடங்கள் வைக்கவும். இதனால் அதில் பூச்சிகள் இருந்தால் இறந்துவிடும்.
ஒரு அகலமான சட்டியில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நூடுல்ஸை போட்டு வேக வைத்து எடுக்கவும்.
வெந்த நூடுல்ஸை வடிகட்டி அதை கத்தரிகோலால் கொஞ்சம் வெட்டி விடவும். இல்லையென்றால் ரொம்ப நீளமாக இருக்கும்.
சுடுநீரில் போட்ட ப்ரோகோலியையும் வடிகட்டி வைக்கவும்.
ஒரு அகலமான கடாயில் பீஃபை போட்டு உப்பு, மிளகுதூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊறி வேக விடவும்.
பீஃப் வெந்ததும் அதில் கேரட், வெங்காயம், குடை மிளகாய், மஷ்ரூம், ப்ரோகோலி அனைத்தையும் போட்டு காய்களுக்கு தேவையான உப்பு, அஜினோமோட்டோ, மிளகு தூளும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
அனைத்தும் வெந்ததும் ஆலிவ் ஆயில் சேர்த்து பிரட்டவும்.
இறுதியாக வேக வைத்துள்ள நூடுல்ஸை போட்டு கிளறவும்.
சூடாக சாப்பிட நன்றாக இருக்கும். இது இரவு நேர டிஃபனுக்கு செய்யலாம். குழந்தைகளுக்கும் பிடிக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரசியா நூடுல்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு ஆனா பீஃப் தான் கொஞ்சம் இடிக்குது பரவால்ல அது இல்லாம செய்து பார்த்துடுறேன் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

//பீஃப் கறி - ஒரு கோப்பை// - ஹிஹிஹீ. நம்ம ஏரியா இல்லை ;) இருந்தாலும் குறிப்பு பார்க்க நல்லா இருக்கு. நல்லா செய்துகாட்டி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்வர்னா & வனிதா உங்க இருவருக்கும் என் நன்றிகள்!பீஃப் பிடிக்கலனா சிக்கன் சேர்த்துக்கோங்க!!!!!!!!!!சிக்கன் டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும்.

Eat healthy

nstead of beef can v add chicken

நல்ல சத்தான டிபன் அயிட்டம் ரசியா, நான் பீஃப் சாப்பிடமாட்டேன். சிக்கன் சேர்த்து செய்து பார்க்கலாம் , இதே போல நான் மட்டன் புரோக்கோலி பாஸ்தா செய்து இருக்கேன்.
அருமையாக இருக்கும்.

Jaleelakamal

அன்புள்ள ரசியா, எப்படி இருக்கீங்க? உங்க நூடுல்ஸ் அருமை. சிக்கன் சேர்த்து செய்து பார்க்கிறேன். என் குட்டீஸ்க்கு புடிக்கும்னு நினைக்கிறேன். குறிப்புக்கு நன்றி.

எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்!

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

ரசியா உங்களோட நூடுல்ஸ் காலையில் செய்தேன்பா. நல்ல டேஸ்டா இருந்தது. நாங்க பீஃப் சாப்பிடமாட்டோம். சிக்கன் போட்டு தான் செஞ்சேன் . சூப்பரா இருந்துச்சு. தாங்க்ஸ் ரசியா. & வாழ்த்துக்கள். அவங்களுக்கும் ரொம்ப புடிச்சிருச்சு.

ya sure aarthi!if u want u can add boneless chicken.

Eat healthy

நீங்க செஞ்சா எல்லாமே சூப்பராத்தான் இருக்கும்,நானும் ஊறில் இருக்கும்போது பீஃப் சாப்பிட மாட்டேன்,என்ன செய்வது வெளிநாட்டுக்கு வந்தா சில வகை உணவுகளை எற்கத்தானே வேண்டும்.

Eat healthy

அன்பு சசி,நான் நலம்,நீங்க எப்படி இருக்கீங்க?கண்டிப்பா நூடுல்ஸ்னா குழைந்தைகளுக்கு பிடிக்கும் ஐயிட்டம் தானே!சிக்கனிலும் செய்யலாம்,செய்து பாருங்க!

Eat healthy

உங்க பாராட்டுக்கு நன்றி நஜீம்! உங்க கணவரின் பாராட்டை பெற்றுவிட்டீங்க,மிக்க மகிழ்ச்சி!

Eat healthy