உருளைக்கிழங்கு குருமா

தேதி: October 19, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (34 votes)

 

உருளைக்கிழங்கு - 3
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - 5 பல்
தக்காளி - ஒன்று
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
அரைக்க :
தேங்காய் - ஒரு கப்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கசகசா - கால் தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 6
சின்னவெங்காயம் - 6
பூண்டு - 6 பல்
மல்லிதழை - கொஞ்சம்
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
தாளிக்க :
பட்டை - 3 துண்டு
கிராம்பு - 3
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - தேவைக்கு


 

பூண்டு, வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை சிறு துண்டாகவும், உருளையை தோல் சீவி சிறு துண்டாகவும் நறுக்கி வைக்கவும்.
வாணலியில் அரைக்க கொடுத்த பொருட்களை சேர்த்து 5 நிமிடம் வதக்கி அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களை போட்டு தாளித்து, அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதில் நறுக்கின உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுது, மஞ்சள்தூள், உப்பு, 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் வைக்கவும்.
மல்லித்தழை தூவி பரிமாற குருமா ரெடி. இந்த குருமா தக்காளிசாதம், சப்பாத்தி, பூரிக்கு பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

செம சூப்பர் குருமா அக்கா. பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு எனக்கு குருமான ரொம்ப பிடிக்கும் இதையும் ட்ரை பண்ணிட்டு சொல்லுறேன் by Elaya.G

ஸ்வர்ணா வித்யாசமான குறிப்பு :-) எனக்கு குருமா ரொம்ப பிடிக்கும். இன்னைக்கு ட்ரை பண்றேன். விருப்பபட்டியல்ல சேர்த்தாச்சு :-)

KEEP SMILING ALWAYS :-)

பார்க்கவே அழகு... நல்ல குறிப்பு சுவர்ணா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு நன்றிகள்..

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இளையா மிக்க நன்றிப்பா,ட்ரை பன்னிட்டு கண்டிப்பா சொல்லனும் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி நாகா,கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி வனி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ஸ்வர்!!!

குருமா சூப்பராயிருக்கு ஸ்வர்,போட்டோஸ் வழக்கம் போல

அழகாயிருக்கு.தெளிவான விளக்கம்,அழகான படங்களோட எப்பவும் போல

கலக்கறீங்க.தங்கப்பெண்ணிற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

அன்புடன்
நித்திலா

ஹாய் ஸ்வர்!!!

குருமா சூப்பராயிருக்கு ஸ்வர்,போட்டோஸ் வழக்கம் போல

அழகாயிருக்கு.தெளிவான விளக்கம்,அழகான படங்களோட எப்பவும் போல

கலக்கறீங்க.தங்கப்பெண்ணிற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

அன்புடன்
நித்திலா

குருமா போட்டோஸ் அழகா இருக்கு செய்முறையும் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நல்ல குறிப்பு சீக்கிரமே செய்றேன் வாழ்த்துக்கள்

Ah ama Elaya,nanum try panlamnu irken,in sha allah

சூப்பர் குறிப்பு! குருமா செய்முறை படங்கள் பார்க்கவே அழகா இருக்கு! அதிலும் க‌டைசிப்ப‌ட‌ம்‍, ல‌வ்லி! :) வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

ஸ்வர்ணா,
குர்மா பார்க்கவே சூப்பரா இருக்கு.அழகா செய்து இருக்கீங்க.வாழ்த்துக்கள்.

ஆஹா நித்தி மிக்க நன்றிப்பா,அறுசுவையில் உன் பதிவுகளை பார்த்து எத்தனை நாட்கள் ஆகுது ரொம்ப சந்தோசம் பா :)))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ரேனு மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி பாத்திமா செய்துட்டு சொல்லுங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

faiza நீங்க என்ன சொல்லுறீங்க குருமா ட்ரை பண்னலாம்னு இருக்கேன்னுதானே :) சந்தோசம்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுஸ்ரீ மிக்க நன்றிப்பா :))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு வாழ்த்துக்கு மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பர் குருமா.. நான் தேங்காய் , சோம்பு, பொட்டுகடலை வைத்து அரைப்பேன்.
இந்த முறையில் செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்ஸ் மிக்க நன்றிடா,கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா....இன்று உங்கள் குருமா செய்தேன்...சூப்பர் என்று என் வீட்டாரிடம் பாராட்டு கிடைத்தது...நன்றி......நீங்கள் இருப்பது குடந்தையா?

மிக்க நன்றி ராதா,ஆமாம் நான் கும்பகோணம் பக்கம் இருக்கேன் ராதா.ஏற்கனவே சொல்லிருக்கேனே மறந்துடீங்களா?

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஓ...சுந்தரப் பெருமாள் கோவில்??

Superb ... I like this , its very nice with sapatti

ரொம்ப பிடிக்கும் உருளைக்கிழங்கு குருமா

சப்பாத்திக்கு குருமா சூப்பர்!!!
நேற்று சப்பாத்திக்கு உங்க குருமா செய்தேன். மிக அருமையா இருந்துச்சு. நன்றி

அன்புடன்
ரேகா சுரேஷ்

Indru sappathi ku urulaikilangu kuruma seithen migavum arumaiyana suvayana kuruma. enkanavar super kuruma enru sollikonde saptaar mikka nanryum vaalthukkalum ungalin kuripirkum arumayana Alagana padangalukum!!!!!

இன்று இரவு பூரிக்கு உருளைகிழங்கு குருமா செய்தேன் சூப்பரா இருந்துச்சி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இன்று உங்கள் உருளைக்கிழங்கு குருமா செய்தேன். சுவையாக இருந்தது.

இதுவும் கடந்து போகும்

ஹாய் ஸ்வர்ணா,
நேற்று இரவு சப்பாத்திக்கு உங்க உருளைக்கிழங்கு குருமா செய்தேன்...நல்ல மேட்ச் :)....நானும் இப்படிதான் செய்வேன்..ஆனால் கசகசா சேர்த்ததில்லை.....நன்றி.....

நேற்று சப்பாத்திக்கு உருளை குருமா செய்தேன். நன்றாக இருந்தது. மிகவும் பிடித்திருந்தது. நன்றி தோழி

Dreams Come True..

hi Swarna.... Ennaikku Kurma seithen... romba nalla tasty ah erunthathu... Thank you so much for ur recipie...

இந்த உருளை குருமா நன்றாக இருந்தது . பாராட்டு கிடைத்தது.மிக்க நன்றி.

Good fine thnks

Very superb thanks swarna