அரிசிமாவு ரொட்டி-2

தேதி: October 19, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (10 votes)

 

பச்சரிசிமாவு - 3 கப்
தேங்காய் - அரை மூடி(துருவியது)
சாம்பார் வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
மல்லி இலை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு


 

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
அடுப்பில் சட்டியை வைத்து மாவை போட்டு மிதமான சூட்டில் வறுக்கவும்.(மாவு சிவக்க கூடாது)
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை லேசாக வதக்கவும்.
மாவுடன் வதக்கிய வெங்காயம், துருவிய தேங்காய், உப்பு, மல்லி இலை, கறிவேப்பிலை, மிளகாய் சேர்க்கவும்.
தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். (கொஞ்சம் இளக்கமாக)
பிளாஸ்டிக் கவரில் லேசாக எண்ணெய் தடவி மாவை சப்பாத்தி உருண்டையை விட கொஞ்சம் பெரிதாக எடுத்து தட்டவும்.
அடுப்பில் தவாவை வைத்து ரொட்டியை போட்டு எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் இருபக்கமும் திருப்பிப் போட்டு சுடவும். (ரொட்டியின் நடுவில் தோசைதிருப்பியால் லேசாக கீறவும் சீக்கிரம் வேகும்)
அரிசி மாவு ரொட்டி ரெடி. இதனுடன் மீன் குழம்பு, கறி குழம்பு வைத்து சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்தியாசமான குறிப்பு வாழ்த்துக்கள் அக்கா by Elaya.G

பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கு...... very nice and easy to make..........

பார்த்தாலே அழகா கலரா இருக்கு கண்டிப்பா ட்ரை பண்றேன் ஈஸியான குறிப்பு வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சுலபமான நல்ல குறிப்பு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மிக்க நன்றி

வாழ்த்துக்கு மிக்க நன்றி

மிக்க நன்றி

பாத்திமா வித்யாசமான ரொட்டி நல்லாருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அம்மா

நான் சுடுநீர் ஊற்றி பினைவேன். இம்முறையில் செய்து பார்க்கிறேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக்க நன்றி

வலைக்கும் சலாம்.......செய்துட்டு சொல்லுடா மிக்க நன்றி

இந்த அரிசி மாவு ரொட்டி எனக்கு ரொம்ப பிடிக்கும்,ஆனால் சில மாற்றங்கள்,மாவை வருக்க மாட்டோம்,எண்ணெய்க்கு பதிலாக வெங்காயத்தை நெய்யில் பொரிப்போம்,சப்பாத்தி மாவு போல் இல்லாமல் கொஞ்சம் தண்ணீர் விட்டு ஆப்பச்சட்டியில் கொஞ்சம் மொத்தமாக ஊற்றி மூடி போட்டு வேகவிட்டு திருப்பி போடுவோம்,இதனுடன் கறி குழம்பு மட்டும்தான் பெஸ்ட்,அப்புறம் இதை அடை என்று சொல்லுவோம்,மன்னிக்கவும்,எங்கள் ஊர் பக்கம் செய்வதைதான் சொன்னேன்,உங்கள் குறிப்பும் வித்தியாசமா இருக்கு,ஆனால் டேஸ்ட் ஒன்னாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

Eat healthy

ஃபாத்திமா அம்மா,
அரிசிமாவில் ரொட்டி புதுசா இருக்கு.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

சுலபமான சூப்பர் குறிப்பு
வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

செய்துட்டு சொல்லுங்கள் மிக்க நன்றி

சாரிடா லேட்டா பதில் குடுத்ததுக்கு பேத்தி வந்து இருக்கா அவகூடவே பொழுது போய்டுது உன் முறையில் செய்து பார்க்கிறேன் மன்னிப்பு எதுக்கு?????????வருகைக்கு மிக்க நன்றி

வாழ்த்துக்கு நன்றி