Beautician at your door step

தோழிகள் அனைவர்க்கும் வணக்கம் ,
என் தங்கை டிப்ளோம இன் beautician ௧ வருடம் படித்து அனுபவமமும் பெற்று இருக்கிறாள் . வீட்டில் இருந்த படியே beautician வேலை பார்க்கிறாள் . என் அம்மா வாயதனவள் என்பதால் வெளியில் வேளைக்கு செல்ல இயலவில்லை . உங்களுக்கு எல்லாவிதமான மேக்கப், eyebrow ,மற்றும் திருமண காரியங்களுக்கும் உதவுவாள் வீடருகே வந்து செய்து கொடுப்பாள் , நியமன விலை மட்டுமே . நீங்கள் யாரேனும் தனியாக இது மாதிரி செய்வது என்னன்றலும் அவளையும் அணுகலாம் . சென்னையில் நங்கநல்லூரில் இருக்கிறோம்.

Hi thozhi nan ippodhu dhan beautician course mudikka pogiren, epadi job amaithu kolvadhu, satru udhavungal thozhi

God is love

முதலில் நீங்கள் போய் ஒரு பார்லரில் வேலை பாக்கலாம் , பிறகு நீங்கள் ஒரு பார்லர் ஆரம்பிக்கலம்.

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

தனியாகத் தொழில் தொடங்க நினைக்கிறீர்களா?

ஃபாத்திமா சொன்னது போல சில மாதங்களாவது இன்னொருவரின் மேற்பார்வையில் வேலை செய்வது நல்லது. ஏற்கனவே தங்களுக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து வைத்துள்ள ஒரு பார்லரில் சேர்ந்துகொள்ளுங்கள். வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். உங்கள் கல்வி, தொழிலைத் தான் கற்றுக் கொடுத்திருக்கும். தொழிலில் பல விதமான குணாதிசயம் உள்ள மனிதர்களையும் நீங்கள் சந்திக்க நேரும். ஒவ்வொருவரையும் எப்படிக் கையாள்வது என்னும் முன்அனுபவம் கிடைக்கும்.

அதோடு தொழிலை ஆரம்பிப்பது பற்றி தன்னால் நிறைய விடயங்கள் தெரிய வரும்.

இப்போதைக்கு - உங்கள் வீட்டில் ஓர் இடத்தை பார்லர் போல் அமைத்துக் கொள்ளுங்கள். உறவினர் நண்பிகளுக்கு குறைந்த விலையில் அலங்காரம் செய்துவிடலாம். உங்கள் திறமையைக் காட்டுங்கள். அதனைப் பொறுத்து அவர்களே மற்றவர்களுக்கு உங்களைப் பரிந்துரைப்பார்கள்.

வாடிக்கையாளரது அனுமதி பெற்று ஃபோட்டோ எடுத்து ஆல்பத்தில் போட்டு வையுங்கள். (சிலர் ஃபேஸ்புக்கில் போடுவார்கள். அப்படிச் செய்வதானால் நிச்சயம் படத்தில் உள்ளவர் அனுமதி பெற்றாக வேண்டும்.) கையில் ஒரு ஆல்பம் இருந்தால் மற்றவர்களுக் காட்டலாம். பாக்கிரவுண்ட் சரியாக இருக்கிற மாதிரி கவனித்து புகைப்படம் எடுங்கள். சிலரது புகைப்படங்களில் பின்னால் முகம் துடைத்த துணி, கசங்கிய காகிதப் பை என்று பலதும் தெரியும். அவை உங்கள் தரத்தைக் குறைத்துக் காட்டும்.

முக்கியமான விடயம் ஒன்று ;-) நீங்கள் தான் உங்கள் முதல் விளம்பர மாடல். எப்பொழுதும் அழகாக உடுத்துங்கள், உங்கள் மேக்கப் மற்றவர்கள் மனதில் சட்டென்று பதிய வேண்டும். என் பெறாமகள் ஒருவர் இருக்கிறார். வீட்டிலும் கூட முகத்தை மலர்ச்சியாக வைத்திருப்பார். எப்பொழுதும் கூந்தல் எளிமையாக ஆனால் அழகாக வாரப்பட்டிருக்கும். எளிமையாக மேக்கப் போட்டிருப்பார். ட்ரெஸ்ஸிங் சென்ஸ் அருமையாக இருக்கும். அவரைப் பார்க்கும் போதே, 'இவரிடம் போக வேண்டும்,' என்று ஓர் விருப்பம் & ஒரு நம்பிக்கை வரும்.

இன்னொருவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பியூட்டிஷன் கூடவே நின்று படம் எடுத்துப் போடுவார். கஸ்டமர் அழகா இருப்பார்; பியூடிஷன் ட்ரெஸ்ஸிங் சென்ஸ் கொஞ்சம் என் ஆர்வத்தைக் குறைக்கும். இன்னொருவர் பார்லரில் எடுக்கும் படங்கள், பின்னணியில் கண்டபடி ப்ரஷ்கள், டவல், மாற்றக் கொணர்ந்த துணி அதன் பை என்று ஒழுங்கற்றுத் தெரியும். மலிவாக இருந்தாலும் கூட நான் இந்த மாதிரி இடங்களை அணுக மாட்டேன்.

அழகுணர்ச்சி ஒவ்வொரு சின்ன விடயத்திலும் காண்பிக்கப்பட வேண்டும். சுத்தமும் தரமும் முக்கியம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்