எக்லெஸ் ஆப்பிள் கேக்

தேதி: October 20, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

ஆப்பிள் - 2
மைதா - ஒரு கப்
சர்க்கரை - அரை கப் முதல் ஒரு கப் வரை
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
லேசாகப் புளித்த மோர் - 3/4 கப்
காய்ந்த திராட்சை - 15


 

கேக் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஆப்பிளை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். நறுக்கிய ஆப்பிள், திராட்சைகளை மைதா கலவையுடன் கலந்து, மோர் சேர்த்து மிருதுவாகக் கலக்கவும்.
கேக் செய்யும் பாத்திரத்தில் மைதாமாவு தடவி, அதில் இந்த கலவையை சீராகக் கொட்டவும்.
ஓவனை முன்னமே சூடு செய்து (ப்ரீ ஹீட்) வைத்து அதில் கேக் ட்ரையை வைத்து 180 டிகிரி சென்டிக்ரேடில் 30 முதல் 45 நிமிடங்கள் பேக் செய்யவும். வெளியே எடுத்து ஆறியதும் மேலே சர்க்கரைப் பொடியை தூவி விரும்பியபடி அலங்கரிக்கவும். ஐஸிங்கும் செய்யலாம். அவரவர் விருப்பம்.
செய்வதற்கு சுலபமான இந்த கேக் சுவையிலும் அருமையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப அருமையான கேக் இப்படி கமெண்ட் மட்டும் தான் குடுக்க தெரியும் செய்ய தெரியாது ஓவன் யூஸ் பண்ணவும் தெரியாது பட் சீக்கிரமே ட்ரை பண்ண பாக்குறேன் by Elaya.G

வர 22ம் தேதி என் பொண்ணுக்கு முதல் பிறந்தநாள் வருது. எக்லெஸ் கேக் அதுவும் ஆப்பிளோட :-) ம்ம்ம்... சூப்பர். அசத்திடறேன்.

KEEP SMILING ALWAYS :-)

சேம் பின்ச் இளையா நானும் அத தான் சொல்லணும் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க வாழ்த்துகள் ஆண்டி கலக்குங்க அரட்டை பக்கமும் வாங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சூப்பர் கேக்...பார்க்கவும் அழகு, குறிப்பும் அருமை!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறைந்த பொருட்களைக்கொண்டு ஒரு நிறைவான கேக்!! கேக்கில், புளித்த மோர் சேர்ப்பது டிஃபரண்ட்டா இருக்கு! விரைவில், ட்ரை பண்ணி பார்க்கிறேன்! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

வெளியிட்ட அட்மினுக்கும், பாராட்டிய தோழிகளுக்கும் நன்றி.

ஹாய் ஸுஸ்ரி (எழுதியது சரியா?) உங்களைப் போல நானும் மோர் சேர்த்து செய்தால் எப்படி இருக்குமோ என்று நினைத்தேன்...ஜெர்மனியில் இருக்கும் என் மருமகள் செய்து காட்டிய பின்பே இந்த ரெசிபியை எழுதி அனுப்பியுள்ளேன்...நீங்களும் செய்து பார்த்து சொல்லவும்..

ராதா,
ஆப்பிள் கேக் நல்லா இருக்கு.செய்முறையும் சுலபமா இருக்கு.கண்டிப்பா ட்ரை பண்ணி பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

வித்யாசமான கேக் ரொம்ப நல்லாருக்கு பார்க்கவே :) வாழ்த்துக்கள்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி...ஹர்ஷா, ஸ்வர்ணா....

மிகவும் சுலபமா செய்து காட்டி இருக்கிங்க.
பார்க்கவே அழகு ;) வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ராதா,
உங்களோட இந்த எக்லெஸ் ஆப்பிள் கேக் ரொம்ப நாளா செய்யனும்னு நினைச்சிட்டு இருந்தது, வெற்றிகரமா இன்று செய்திட்டேன்! :)
செய்வதற்கு ரொம்ப சிம்பிளா, சுவை அருமையா இருந்தது!. வித்தியாசமான நல்லதொரு குறிப்பு! நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

செய்து , ருசித்து பின்னூட்டம் அளித்ததற்கு மிக்க நன்றி சுஸ்ரீ...

Dear madam,

i hav a doubt, pls clear it. the oven u used is Microwave Oven or Electric Oven. Pls clear it.

thanks.

gshalini