கத்திரிக்காய் காரக்குழம்பு

தேதி: October 20, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (11 votes)

 

கத்திரிக்காய் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 1
பெரிய தக்காளி – 1
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
சாம்பார் பொடி – 2டேபிள்ஸ்பூன்
புளி – சிறிய எலுமிச்சை அளவு
கடுகு,உளுத்தம் பருப்பு – 1டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிது
அரைத்த தேங்காய் விழுது – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
உப்பு - தேவைக்கு
வறுத்து பொடிக்க :
மிளகு – கால் டீஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்


 

கத்திரிக்காய்,வெங்காயம்,தக்காளி மூன்றையும் நறுக்கி வைக்கவும்.மிளகு,சீரகம்,வெந்தயம் வறுத்து பொடித்து வைக்கவும்.புளி கரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காயவும், கடுகு உளுத்தம் பருப்பு போடவும் கருவேப்பிலை சேர்த்து வெடிக்கவும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து,சிறிது உப்பு சேர்த்து வதக்கி மூடி விடவும்.

கத்திரிக்காய் வதங்கி வரவும், தக்காளி சேர்த்து சிறிது வதக்கவும், சாம்பார் பொடி சேர்க்கவும்,நன்கு பிரட்டி விடவும்,புளித்தண்ணீர் சேர்க்கவும். நன்றாக கொதித்து புளி வாடை அடங்கியதும் வறுத்து பொடித்ததை தூவவும்.

விரும்பினால் அரைத்த தேங்காய் சேர்த்து கொதி வரவும்,உப்பு சரி பார்த்து சிறிது நேரம் சிம்மில் வைத்து இறக்கவும்.தேங்காய் சேர்க்காமலும் செய்தாலும் சூப்பராக இருக்கும்.

சுவையான கத்திரிக்காய் காரக்குழம்பு ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

ரொம்ப நாள் ஆச்சு உங்க குறிப்புகள் செய்து, இன்னைக்கு ஆசையாக இருந்தது செய்துட்டேன் :)

ரொம்ப சூப்பர் காரகுழம்பு. ஒரே மாதிரி கார குழம்பு வைத்து போரடிச்சது, இது வித்தியாசமான வாசத்துடன் நல்லா வந்தது. அவரும் சூப்பரா இருக்குன்னு சொன்னார். நல்ல குறிப்புக்கு நன்றி ஆசியா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி வனிதா. செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு.எனக்கு மிகவும் பிடித்த குழம்பு இது.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Naan samaithu parthen. migavum rusiyaga irunthathu. thangalukku nandri

super kolambu, nandraha irunthathu, superb!