தக்காளி புளி ரசம் சமையல் குறிப்பு - 20785 | அறுசுவை


தக்காளி புளி ரசம்

food image
வழங்கியவர் : ஆசியா உமர்
தேதி : வியாழன், 20/10/2011 - 17:36
ஆயத்த நேரம் : 10 நிமிடம்
சமைக்கும் நேரம் : 10 நிமிடம்
பரிமாறும் அளவு : நான்கு நபர்

 

  • தக்காளி – 1 பெரியது
  • புளி – நெல்லியளவு
  • மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
  • பெருங்காயதூள் – கால் டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 1
  • மல்லி இலை – சிறிது
  • உப்பு – தேவைக்கு.
  • வறுத்து பொடிக்க :
  • மிளகு – அரைடீஸ்பூன்
  • சீரகம் – அரைடீஸ்பூன்
  • பூண்டு – நான்கு பல்
  • தாளிக்க :
  • எண்ணெய் – 1டேபிள்ஸ்பூன்
  • கடுகு – அரை டீஸ்பூன்
  • வெந்தயம் – கால் டீஸ்பூன்
  • மிளகாய் வற்றல் - 1
  • கருவேப்பிலை – இரண்டு இணுக்கு

 

  • தக்காளியை நறுக்கி ஒரு கப் தண்ணீரில் நன்கு பிசைந்து வைக்கவும், புளியும் சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
  • மிளகு,சீரகம்,பூண்டை தட்டி வைக்கவும்.
  • தக்காளி கரைசலோடு மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதி வரவும் புளிக்கரைசல் சேர்க்கவும்.வறுத்து பொடித்ததை சேர்க்கவும். கீரிய பச்சை மிளகாய் நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைக்கவும்.புளிப்பு பார்த்து தண்ணீர் தேவைக்கு சேர்க்கலாம்.நுரை கூடி வரும்.
  • தாளிப்பு கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு,வெந்தயம்,மிளகாய் வற்றல், கருவேப்பிலை தாளித்து நுரை கூடி வரும் ரசத்தில் விடவும்.உப்பு சரி பார்க்கவும்.அடுப்பை அணைத்து பாத்திரத்தை மூடி வைக்கவும்.
  • சுவையான தக்காளி புளி ரசம் ரெடி.



இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..