வேர்கடலை மிட்டாய்

தேதி: October 20, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (2 votes)

 

1. வேர்கடலை - 1 கப்
2. சர்க்கரை - 3/4 கப்
3. நெய் - 1 மேஜைக்கரண்டி


 

வேர்கடலையை வறுத்து தோல் நீக்கி மிக்ஸியில் பொடித்து எடுக்கவும்.
ஒரு தட்டு, சப்பாத்தி திரட்டி, கத்தி இவற்றை நெய் தடவி தயாராக வைக்கவும்.
பாத்திரத்தில் சர்க்கரை கொட்டி நீர் சிறிதும் சேர்க்காமல் அடுப்பில் வைத்து கிளறவும்.
கரைந்ததும் பொடியை கொட்டி கட்டி இல்லாமல் வேகமாக கிளரவும்.
உடனே எடுத்து நெய் தடவிய தட்டில் கொட்டி உடனே சப்பாத்தி திரட்டியால் திரட்டி, கத்தியால் கோடு போட்டு விடவும்.
5 - 10 நிமிடத்தில் ஆறியதும் எடுத்து விடலாம்.


சுவையான மிட்டாய் இது. வேகமாக செய்ய வேண்டும், எல்லாம் முதலிலேயே தயாராக எடுத்து வைக்க வேண்டும், சிறிது தாமதமானாலும் தீய்ந்து போகும். வெட்ட தாமதமானால் சரியான ஷேப்பில் வெட்ட இயலாது. இதே போல் முந்திரி பருப்பை வெறும் கடாயில் வறுத்து பொடித்தும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நாளைக்கே செய்து பாக்றேன் வனி.எனக்கு பிடிச்ச ஸ்வீட் ஆச்சே இது.

மிக்க நன்றி. அவசியம் ட்ரை பண்ணுங்க, எங்க வீட்டில் குட்டீஸ்க்கு ரொம்ப இஷ்டம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா