கல்கண்டு பாத்

தேதி: June 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - ஒரு கப்
தண்ணீர் - 3 1/2 கப்
கல்கண்டு - ஒரு கப்
பால் - சிறிதளவு
குங்குமப்பூ - சிறிதளவு
ஏலக்காய்ப்பொடி - 2 சிட்டிகை
உடைத்த முந்திரி - ஒரு மேசைக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி


 

அரிசியைக் கழுவி 3 1/2 கப் தண்ணீர் விட்டு குக்கரில் வேகவைக்கவும்.
கல்கண்டை பொடித்து சிறிது தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும்.
பாகு நன்கு உருண்டை பதம் வந்த பின் வேகவைத்த சாதம், பால், குங்குமப்பூ, ஏலக்காய்ப் பொடி, நெய், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து நன்றாக கிளறவும்.
சாதம் ஒட்டாத பதம் வந்த பின் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்