பொரிச்ச கருவாடு

தேதி: October 21, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (5 votes)

 

நெய்மீன் கருவாடு - 2 துண்டு
சின்ன வெங்காயம் - கால் கிலோ
பச்சைமிளகாய் - 6 எண்ணிக்கை
எண்ணெய் - தேவைக்கு


 

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். மிளகாயை பொடியாக நறுக்கவும். கருவாட்டை கழுவி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவாட்டை சிவக்க பொரித்து எடுக்கவும்.
அதே எண்ணெயில் வெங்காயம், மிளகாயை போட்டு சிவக்க வதக்கவும்.
வதக்கியதில் ஒரு துண்டு கருவாட்டை போட்டு நன்றாக கொத்தி கிளறி விடவும்.
மீதமுள்ள கருவாட்டை வெங்காயத்தின் மேல் வைத்து பரிமாறவும்.

கருவாட்டில் உப்பு இருப்பதால் நான் சேர்க்கவில்லை தேவைப்பட்டால் சேர்க்கலாம். சாம்பார், ரசம் சாதம், பழைய கஞ்சிக்கு சூப்பர் காம்பினேஷன்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல குறிப்பு மா

நா தக்காளியும் சேர்ப்பேன் :-)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கருவாடு எனக்கு ரொம்ப பிடிக்கும் உப்பு காரம் போட்டு பொரிச்சு வெச்ச எவ்வளவு இருந்தாலும் காலி பண்ணிடுவேன் இது புதுசா இருக்கு ட்ரை பண்றேன் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சூப்பர், அருமை
நான் இந்த சமையல் முயற்சிக்கிறேன்.

நன்றி

Mrs.Anantharaman

பார்க்கவே அழகா இருக்கு ஆனால் நான் சாப்பிடமாட்டேனே :( வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கட்டி பருப்பு பிளெயின் சாதத்துடன் சூப்பரா இருக்கும்,
பொரித்த கருவாடு நல்ல இருக்கு தோழி

Jaleelakamal

பார்க்கவே சூப்பரா காரச்சாரமா இருக்கு ;)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

நானும் தக்காளி சேர்த்து செய்து பார்க்கிறேன் நன்றிடா

ட்ரை பண்ணிட்டு சொல்லுங்கள் வாழ்த்துக்கு நன்றி

வருகைக்கு மிக்க நன்றி

வாழ்த்துக்கு நன்றி

வருகைக்கு நன்றி தோழி

வாழ்த்துக்கு நன்றி