சிக்கன் சமோசா

தேதி: October 25, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

 

கொத்திய சிக்கன் - 1/4கிலோ
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1கப்
வேக வைத்த பட்டாணி 1/4 கப்
பச்சை மிளகாய் - 4
கரம் மசாலா - 1டீஸ்பூன்
மல்லி இலை - 1/4கப்
உப்பு - சுவைக்கு

மைதா -3கப்
எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு


 

மைதாவை உப்பு,சிறிது எண்ணெய் சேர்த்து சப்பாத்திமாவு போல் பிசைந்து கொள்ளவும்.

நான் ஸ்டிக் பாத்திரத்தில் சிக்கனை வேக செய்து நீர் வற்றும் வரை வேக வைக்கவும்

சிக்கனை வேறு பாத்திரத்துக்கு எடுத்து விட்டு 2 டீஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை சிறிது வதக்கி கரம் மசாலா,உப்பு சேர்க்கவும்.பட்டாணி,சிக்கன் பச்சைமிளகாய்,மல்லி இலை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.

மாவை எலுமிச்சை அளவு உருட்டிக்கொள்ளவும்.சப்பாத்தி தேய்க்கும் பலகையில் சிறிது மைதா மாவு தூவி மாவை வட்டமாக பரத்தவும்.

கத்தியால் அதனை அரை வட்டமாக வெட்டி அதனை இன்னும் சிறிது மைதா மாவு தூவி நீள வாக்கில் ரிப்பன் போல் தேய்க்கவும்.

எல்லாமாவையும் இதே போல் செய்து ஒன்றுடன் மற்றொன்று ஒட்டாமல் வைத்துக்கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தேய்த்த மாவை வாட்டவும்.அதிகம் வாட்டி விடவேண்டாம்.நொடியில் எடுத்து விட வேண்டும்.இல்லாவிட்டால் மொரு மொருப்பாகி சுருட்ட வராது.

இந்த ரிப்பன் போல் தேய்த்த மாவின் ஆரம்பத்தை மடக்கி அதனுள் 1 டீஸ்பூன் அளவு கலவை வைத்து முக்கோண வடிவில் போல்ட் பண்ணவும். இறுதிப்பகுதியை மைதா பசையால் ஒட்டி விடவும்.அல்லது மடிப்பினுள் சொருகி விடவும்.
இப்படி செய்த சமோசாக்களை பிரீஸரில் வைத்து தேவைப்படும் பொழுது எண்ணெயில் பொன்னிறத்தில் பொரித்து சாஸுடன் பறிமாறவும்.


சிக்கனுக்கு பதில் மட்டன் கைமா வைக்கலாம்.அல்லது காய்கலவை வைக்கலாம்.மாவு தேய்ப்பது சிரமம் என்று நினைப்பவர்கள் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் புரோசனாக கிடைக்கும் சமோசா பட்டிகளை வாங்கியும் செய்யலாம்.ரெடி மேட் பட்டிகளுக்கும்,வீட்டில் செய்வதற்கும் நிறைய சுவையில் வித்தியாசம் உண்டு.

மேலும் சில குறிப்புகள்


Comments

வித்தியாசமா இருக்கு பா வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

super