போல்டட் பூரி

தேதி: October 25, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் சமோசாவுக்குறிய அதே கலவை
(சிக்கனுக்கு பதில் மட்டன்)

மைதா - 3 கப்
எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு
உப்பு - சுவைக்கு


 

சிறிது எண்ணெய் உப்பு சேர்த்து மைதா மாவை கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.பிசைந்த மாவில் மேலும் ரெண்டு டீஸ்பூன் எண்ணெய் தடவி மூடி வைக்கவும்.

ஒரு மணி நேரம் கழித்து மாவை நெல்லிக்காய் சைஸில் உருட்டிக்கொள்ளவும்.

உருட்டிய மாவை சப்பாத்திக்கட்டையில் வட்டமாக தேய்க்கவும்.சிறிது எண்ணெய் தடவிக்கொண்டால் சுலபாமாக தேய்க்க வரும்.

வட்டமாக மெல்லியதாக தேய்த்து சப்பாத்தியின் நடுவில் தயாரித்து வைத்த கறிக்கலவையை வைத்து அரை வட்டமாக மடக்கவும்.பிரியாமல் இருக்க நகத்தால் கிள்ளி பூ போன்று சுற்றிலும் செய்யவும்.அல்லது சோமாசி தயாரிக்கும் பிளாஸ்டிக் உபகரணத்தில் வைத்தும் சுலபமாக செய்யலாம்.

மிதமான தீயில் எண்ணெயில் மொறு மொறுப்பாக சுட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஸாதிகாக்கா, போல்ட்டட் பூரி-ன்னதும் ஏதோ நட்டு-போல்ட்டெல்லாம்(!!) போட்டு பூரியோன்னு ஆர்வமா எட்டிப் பார்த்தேன்...ஹிஹி !! :))))))))

இது folded பூரி-யா?? ஓகே,ஓகே! :)

அன்புடன்,
மகி

ஸாதிகாக்கா... நானும் //நட்டு-போல்ட்டெல்லாம்(!!) போட்டு பூரியோன்னு ஆர்வமா எட்டிப் பார்த்தேன்.// ஒண்ணும் புரியல. குழம்பிட்டே கமண்ட் பார்த்தேன். இதானா! ;))) தாங்ஸ் மகி. ;)

‍- இமா க்றிஸ்