PL HELP ME

வணக்கம் தோழிகளே
மனது குழப்பமாக உள்ளது , தீர்வு சொலுங்கள் , ப்ளீஸ் ,
எனக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது ,எனக்கு பெற்றோர்கள் கிடையாது , சகோதரிகள் உள்ளனர் அவர்கலும் திருமணம் ஆனவர்கள் . ஒரு சில காரணங்களால் என் கணவருக்கும் என் சகோதரிகள் குடும்பதிற்கும் இடையில் மனகசப்பு வந்துவிட்டது ,தவறு இருவர் மேலும் உள்ளது, நான் எவளவோ முயன்றும் என் கணவரை சமாதனம் படுத்த முடியவில்லை . இந்த பிரச்சனையால் என் கணவர் என் சகோதரிகள் குடும்பத்தை வீட்டிற்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார் , என்னையும் அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிப்பது இல்லை . நான் நிறைய முறை இதை பற்றி அவரிடம் கோபமாகவும் பொறுமையாகவும் பேசிவிட்டேன் அனால் பலன் இல்லை . நான் என் பிறந்த வீட்டின் மேல் நிறையை பாசம் வைத்துளேன் . அனால் அவர் மட்டும் அவர் பெற்றோகளை பார்பதற்கு அடிகடி செல்கிறார் , நானும் வர வேண்டும் என்று நினைக்கிறார் , அவர்க்கு அவர்கள் வீட்டின்மேல் உள்ள பாசம் தானே எனக்கு என் வீட்டின் மேல் இருக்கும் என்று நினைக்க மாடிகிறார் . இதனால் எனக்கும் அவருக்கும் அடிகடி பிரச்னை வருகிறது , இந்த பிரச்னை எபொழுது முடியும் என்று தெரியவில்லை , பெற்றோர்கள் இல்லாமல் தவிக்கும் எனக்கு சகோதரிகளின் அன்பும் கிடைக்காமல் செய்து விட்ட என் கணவர் மேல் எனக்கு அடிகடி கோபம் வருகிறது தோழிகளே , நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன் . நான் என செய்யவேண்டும் சொலுங்கள் தோழிகளே

தோழி,உங்களுக்கு எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள். உங்கள் சகோதரிகள் மீது நீங்கள் வைத்துள்ள பாசத்தை நன்கு உணரமுடிகிறது.ஆனால் நம்மை போன்ற பெண்களுக்கு பொருமை மிகவும் அவசியம்.முதலில் உங்கள் கனவரிடம் கோபப்படாமல் அன்பாக நடந்து கொல்லுங்கள். அவருடய குடும்பத்தினர் மீது மிகுந்த அக்கரையுடன் இருங்கள்.ஒரு வருடம் வரை உங்கள் சகோதரிகள் பற்றி எதுவும் பேசாதீர்கள். உங்கள் வீட்டிர்க்கு வரக்கூடாது என்று தானே சொல்லி இருக்கிறார்.தொலைபேசி மூலம் உங்கள் அன்பை பகிர்ந்து கொல்லுங்கள்.அவராகவே மனம் மாறுவார் என்று நம்புங்க்ள்.கடவுளை ப்ராத்தனை செய்யுங்கள்.இது போல் செய்வது கடினமாக இருக்கும். ஆனால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.Happy depavali and all the best.

இந்த விஷயத்துல உங்களுக்கு பொறுமை தா முக்கியம்.பொறுமையா இருந்தா எல்லாம் சரி ஆகும்.அடிக்கடி உன்னவரிடம் இத பத்தி பேசாதீங்க.இது என்னோட அனுபவத்துல சொல்றேன்.

அன்பு நதியா... இதுக்கு மனதை குழப்பிக்காம இருங்க. அது தான் முக்கியம்.. ஏன்னா நீங்க இதை எந்த அளவு அமைதியா பொறுமையா ஹேண்டில் பண்றீங்களோ, அந்த அளவு வேகமா சரி ஆகும். நீங்களே இருவர் மீதும் தப்புன்னு சொல்லிட்டீங்க... அதனால் கண்டிப்பா அவருக்கு கோவம் இருக்க தானே செய்யும்.

முதல்ல உங்க கணவரிடம் இந்த விஷயத்தை பற்றி பேசுவதை விட்டுடுங்க... மறக்க நினைக்கும் விஷயத்தை நாமே மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தினால் தேவையில்லாமல் பிரெச்சனை பெரிதாகும்.

இரண்டாவது உங்க வீட்டார் பற்றி பேசுவதையே முழுமையா விட்டுடுங்க. அவர் வீட்டை பற்றி பேசுவதையும் விட்டுடுங்க. (நீங்க பேசுபவராக இருந்தால் மட்டுமே...). நீங்க உங்க கணவர்ன்னு மட்டுமே இருங்க. அவர் அவர் வீட்டுக்கு அழைத்தால் போங்க, அங்கையும் அன்பாவே இருங்க... உங்க வருத்தம் கோவம் எல்லாம் அங்க காட்டாதீங்க.

மூன்றாவது உங்க சகோதரிகள் உங்களிடம் அன்பாக இருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் போனில் பேசுங்கள். அதுக்கு யாரும் தடை சொல்ல மாட்டாங்க. அப்படி சொன்னா அப்பறம் பார்த்துக்கலாம்.

அடுத்து உங்க சகோதரிகள் விட்டுக்கொடுக்க தயாராக இருந்தால் அவர்களையே முதலில் உங்க கணவரிடம் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள்... எத்தனை கல் மனமாக இருந்தாலும் நிச்சயம் மனம் மாறும். அவர்கள் அன்பாக வந்து பேசினால் இவர் விட்டு கொடுத்துடுவார்.

இது தான் எனக்கு தெரிஞ்ச வழி... முயற்சி செய்ஹ்டு பாருங்க. கவலை வேண்டாம்... இதில் உங்க பொறுமை தான் முக்கியம். இதுக்காக சண்டை போடாம இருந்தாலே இது தானா சரி ஆகும். நம்பிக்கை வைங்க... வாழ்க்கையை வாழ நம்பிக்கை தான் முதல்ல முக்கியம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் கேள்விக்கு என்னுடைய சகோதரிகள் போல் அக்கரை உடன் பதில் அளித்த தோழிகள் அனைவர்க்கும் என் நன்றிகள் , நிச்சயம் நீங்கள் அனைவரும் சொன்னதை போல் பொறுமையை கடை பிடிக்கிறேன் .

மேலும் சில பதிவுகள்