ஸோமாசி

தேதி: October 25, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

பூரணத்திற்கு:
------------
பொட்டுக்கடலை - ஒரு கப்
சர்க்கரை - 1 1/2 கப்
கொப்பரைத்துருவல் - 3/4 கப்
கசகசா - 5 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - 3 தேக்கரண்டி
மேல் மாவிற்கு:
---------------
பொடி ரவை - 3 கப்
நெய் - 4 தேக்கரண்டி
உப்பு - 2 சிட்டிகை
ரீஃபைன்ட் எண்ணெய் - தேவைக்கு


 

பொட்டுக்கடலை மற்றும் கசகசாவை வெறும் வாணலியில் லேசாக வறுத்து மிக்சியில் பொடி செய்யவும். சர்க்கரையையும் நைசாக அரைக்கவும். இவற்றுடன் கொப்பரைத்துருவலும், ஏலப்பொடியும் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது உள்ளே வைக்கும் பூரணம் தயார்.
ரவையை மிக்சியில் நைசாக அரைக்கவும். அத்துடன் உப்பு, நெய் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து வைக்கவும். இந்த மாவு அரை மணி நேரம் ஊற வேண்டும்.
பிசைந்த ரவையை மேலும் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு அடித்துப் பிசைந்து மிருதுவாக்கவும். அதை சிறு உருண்டைகளாக்கி, உருண்டைகள் காயாமல் பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும். பின்னர் எடுத்து சப்பாத்திக் கல்லில் சிறு பூரிகளாக இடவும். அவற்றில் 1 1/2 தேக்கரண்டி பூரணம் வைக்கவும்.
ஒரு காது சுத்தம் செய்யும் இயர் பட்டை நீரில் நனைத்து பூரியின் ஓரங்களில் தடவவும். பூரியை அரை வட்டமாக மூடி ஓரத்தை ஸோமாசிக் கரண்டியால் கத்தரிக்கவும்.
இதேப் போல் மீதமிருக்கும் மாவிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.
எண்ணெயைக் காய வைத்து, அதில் ஸோமாசிகளைப் போட்டு, பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும். பூரணம் வைத்து மூடிய ஸோமாசிகளை காயவிடாமல் உடனுக்குடன் பொரிக்கவும்.
சுவையான ஸோமாசி ரெடி. செய்வது சற்று சிரமம் என்றாலும் இனிப்புகளில் இது ராணி. இந்த தீபாவளிக்கு இதை முயற்சித்துப் பாருங்கள் தோழிகளே.

இதில் ரவைக்கு பதிலாக மைதா சேர்த்து செய்யலாம். ஆனால் ரவையில் செய்வது போல அத்தனை மொறுமொறுப்பாக இருக்காது. பூரணத்துடன் சிறிதளவு இனிப்பில்லாத கோவா சேர்த்து செய்தால் சுவை கூடும். அரிசிமாவில் நெய்யை சேர்த்து பதிர் குழைத்துக் கொண்டு, ரவை மாவை சப்பாத்திகளாக இட்டு அவற்றின் இடையில் குழைத்த பதிரைத் தடவி, 3 சப்பாத்திகளை ஒன்றின் மேல் ஒன்றாகப் போட்டு, பாய் போல சுருட்டி, அவற்றை துண்டுகளாக வெட்டி, அதனை பூரியாக்கி, அதில் பூரணம் வைத்து செய்தால் நல்ல ருசியாக இருக்கும். இந்த முறையில் செய்வது வேலை அதிகம்!


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இத நாங்க சோமாஸ் சொல்வோம் அம்மா வீட்ல தீபாவளிக்கு இதான் ஸ்வீட் எனக்கும் பிடிக்கும் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நாங்களும் சோமாஸ்’னு தான் சொல்வோம். எனக்கும் பிடிச்ச ஸ்வீட். நல்லா செய்திருக்கீங்க. வாழ்த்துக்கள். தீபாவளிக்கு எல்லாம் செய்து முடிச்சுட்டீங்க போல. கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Nice..

பாராட்டியதற்கு நன்றி தோழிகளே...