மைசூர் பாகு

தேதி: October 25, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (8 votes)

 

கடலை மாவு - ஒரு கப்
சர்க்கரை - 2 3/4 கப்
நெய் - 2 1/4 கப்


 

மைசூர் பாகு செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
நெய்யை ஒரு வாணலியில் சுட வைக்கவும். கடலை மாவை சலித்து அத்துடன் அரை கப் உருக்கிய நெய் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
சர்க்கரையை ஒரு வாணலியில் போட்டு ஒரு கப் நீர் சேர்க்கவும். நன்கு கொதித்து ஒரு கம்பிப் பதம் வர வேண்டும். (இரண்டு விரல்களுக்கிடையில் பாகைத் தொட்டுப் பார்த்தால் கம்பி போல் நீளமாக வர வேண்டும்)
பாகு கம்பி பதம் வந்ததும், நெய்யில் கலந்து வைத்துள்ள கடலை மாவைக் கொட்டிக் கிளறவும்.
மற்றொரு அடுப்பில் நெய்யை வைத்து சிம்மில் வைக்கவும். நெய் சூடு குறையாமல் இருக்க வேண்டும். கடலைமாவும், பாகும் சேர்ந்து சுருண்டு வரும் சமயம் நெய்யை சிறிது சிறிதாகக் கரண்டியால் விட்டுக் கொண்டே கை விடாமல் கிளற வேண்டும்.
கலவை கெட்டியாகி மேலே பூத்து வரும் போது இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி உடனேயே துண்டு போட வேண்டும்.
சூடு ஆறியதும் வில்லைகளை எடுத்து வைக்கவும். இறக்கியவுடன் துண்டு போடாவிட்டால், மைசூர்பாகு இறுகி துண்டாக வராது. சுவையான மைசூர்பாகு நாவில் போட்டால் கரையும்!

முழுவதும் நெய் சேர்ப்பதற்கு பதிலாக டால்டாவும் கலந்து செய்யலாம். மைசூர்பாகு கிளறும் போது நெய்யை சூட்டுடன் விட்டால் தான் நல்ல கலராக வரும். பூத்து வந்ததும் உடனே தட்டில் கொட்டிவிட வேண்டும். ஒரு நிமிடம் தாமதித்தாலும் தூளாகி விடும்.
ஹல்வா, கேக்குகளை மேலே சமமாகத் தட்டுவது போல் மைசூர்பாகை தட்டக் கூடாது. தட்டில் கொட்டியவுடன் தட்டின் இரு பக்கமும் பிடித்துக் கொண்டு குலுக்கி சமமாகப் பரவச் செய்ய வேண்டும். மேற்கண்ட முறைப்படி சற்று கவனமாகச் செய்தால் மைசூர்பாகு சாப்பிடுபவரை "சபாஷ்" போட வைக்கும்!


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் ஆன்ட்டி எங்க சித்தி செய்ற மாரி இருக்கு நமக்குலாம் அந்த பொறுமை இல்ல பரவால ட்ரை பண்ணிபாக்கறேன் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இந்த மாதிரியெல்லாம் ஆசை காட்டாதீங்க ராதா மேடம்,தீபாவளிக்கு எல்லாம் தயாரா?தீபாவளி வாழ்த்துக்கள் & மைசூர்பாகு சூப்பர்.

Eat healthy

ரொம்ப சூப்பரா செய்துகாட்டிருக்கிங்க... சுலபமா இருக்கு. வாழ்த்துக்கள். செய்துடறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மைசூர்பாகு சூப்பர்.வாழ்த்துக்கள் ராதா.

ரேணு, ரஸியா, வனிதா, சுந்தரி....பாராட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றி....

Very super akka...

நீங்கள் சொன்னது போலவே, சிறிது தாமதித்ததால் தூளாகிவிட்டது. ஆனால் ஒரு பாத்திரத்தில் போட்டு fridge-ல் வைத்து 12 hours-க்கு பிறகு எடுத்த போது கெட்டியாகி இருந்தது. துண்டுகளாக்கி குடியரசு தினத்தன்று வெளி நாட்டு நண்பர்களுக்கு கொடுத்தேன். எல்லோருக்கும் மிகவும் பிடித்திருந்தது. Home Minister வந்த பிறகு அவருக்கும் ஒரு நாள் செய்து கொடுக்க வேண்டும்