சோயா பேல்

தேதி: June 30, 2006

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சோயா பீன்ஸ் - 1/2 கப்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1/4 கப் (நன்கு அரிந்தது)
வெங்காயத்தழை - 1/4 கப் (பச்சை நன்கு அரிந்தது)
வெங்காயத்தழை - 1/4 கப் (வெள்ளை நன்கு அரிந்தது)
முட்டை கோஸ் - 1/4 கப் (நன்கு அரிந்தது)
எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்


 

சோயா பீன்ஸை 2 - 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
தண்ணீரை வடிகட்டி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து சோயாபீன்ஸை ஃப்ரிட்ஜில் 6 - 8 மணி நேரம் வைக்கவும்.
பின்பு சோயா பீன்ஸை வாணலியில் போட்டு வறுக்கவும்.
நன்றாக மொறு-மொறுவென்று ஆகும் வரை வதக்கவும்.
பின்பு மீதமுள்ள பொருட்களை சேர்த்து உடனே பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்