www.arusuvai.com
சோயா பேல்
தேவையானப் பொருட்கள்
- சோயா பீன்ஸ் - 1/2 கப்
- மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
- தக்காளி - 1/4 கப் (நன்கு அரிந்தது)
- வெங்காய தழை - 1/4 கப் (பச்சை நன்கு அரிந்தது)
- வெங்காய தழை - 1/4 கப் (வெள்ளை நன்கு அரிந்தது)
- முட்டை கோஸ் - 1/4 கப் (நன்கு அரிந்தது)
- எலுமிச்சம் சாறு - 1/2 டீஸ்பூன்
- மிளகாய் பொடி - 1/4 டீஸ்பூன்
- உப்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை
- சோயா பீன்ஸை 2 - 4 மணி நேரம் ஊற் வைக்கவும்.
- தண்ணீரை வடிகட்டி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து சோயாபீன்ஸை ப்ரிட்ஜில் 6 - 8 மணி நேரம் வைக்கவும்.
- பின்பு சோயா பீன்ஸை வாணலியில் போட்டு வறுக்கவும்.
- நன்றாக மொறு-மொறுவென்று ஆகும் வரை வதக்கவும்.
- பின்பு மீதமுள்ள பொருட்களை சேர்த்து உடனே பரிமாறவும்.
-
-
-
-