வாழைக்காய் குழம்பு

தேதி: October 27, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (7 votes)

 

வாழைக்காய் - பாதி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - இரண்டு
பூண்டு - 2 அல்லது 3 பற்கள்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க


 

வாழைக்காயை தோல் சீவி, நான்காக நறுக்கி, மெல்லிய வில்லைகளாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டை தட்டி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். பூண்டு போட்டு வதக்கி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் வாழைக்காய் துண்டுகள் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி குழைந்ததும் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கிளறவும்.
தேவையான தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். உப்பு சரிப்பார்த்துக் கொள்ளவும்.
வாழைக்காய் வெந்து, குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான வாழைக்காய் பொரிச்ச குழம்பு தயார். இது சாதத்துடன் ரொம்ப நன்றாக இருக்கும்.

இரண்டு தக்காளி சேர்த்திருப்பதால், அதன் புளிப்பே போதுமானதாக இருக்கும். பொதுவாக இந்த குழம்புக்கு புளி சேர்ப்பதில்லை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழைக்காயில் குழம்பு??? புதுசா இருக்கு, பார்க்கவும் சூப்பரா இருக்கு... கண்டிப்பா செய்து பார்க்கிறேன். படங்கள் அட்டகாசமா வந்திருக்கு. கடைசி படத்தில் நடுவில் கறிவேப்பிலையும் மாதுளையுமா??? ரொம்ப கியூட்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்துகள் நானும் இப்டி தா செய்வேன் அதே மாறியே செஞ்சிருகீங்க பா கண்டிப்பா டேஸ்ட் நல்லாயிருக்கும் கடைசி படம் வனி சொன்ன மாதிரி அழகோ அழகு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

குழம்பு பார்க்கவே சாப்பிடணும் போல இருக்கு.... Decoration super..........

நாம வேறு முறையில் தான் வாழைக்காய் குழம்பு செய்வோம். இந்த முறை சூப்பரா இருக்கும்னு நெனக்கிறேன் ட்ரை பண்ணி பார்த்துடுவோமே.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

வனிதா,
முதலாவதாக வந்து பதிவு போட்டு இருக்கீங்க.மிக்க நன்றி.இந்த குறிப்பு புதுசு எல்லாம் இல்லைங்க.வீட்டில் அடிக்கடி செய்வதுதான்.செய்து பாருங்க.உங்களுக்கும் பிடிக்கும்.//ரொம்ப கியூட்.// நன்றி வனிதா.

ரேணு,
நீங்களும் இப்படிதான் செய்வீங்களா?எனக்கும் இந்த குழம்பு ரொம்ப பிடிக்கும்.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.

பிரியா,
கண்டிப்பா செய்து பாருங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

பூங்காற்று,
பூங்காற்று இந்த பக்கமும் வீசியதில் மகிழ்ச்சி.கண்டிப்பா செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுனு சொல்லுங்க.முடிந்தால் உங்க செய்முறையையும் எங்களுக்கு சொல்லுங்க.

வாவ்! இதுவரை காலமும் வாழைக்காயை வதக்குவேன் அல்லது
பொரித்துதான்
சாப்பிட்டு இருக்கேன். புது recipe . கட்டாயம் இவ்வாரம் செய்ய வேண்டும்.
வாழ்த்துகள்.

வாழைக்காய் குழம்பு செய்து சாப்பிட்டு,எப்படி இருந்ததுனு சொல்லுங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

வாழைக்காயை ஃபிரை மட்டும் தான் செய்வேன்.வெரைடியா குழம்பு செய்துகாட்டியிருகிங்க ஹர்ஷா,வாழ்த்துக்கள்.கட்டாயம் செய்துபார்க்கிறேன்.

வாழைக்காய் புளிக்குழம்பு செய்வோம். உங்க செய்முறை ரொம்ப ஈஸியா இருக்கு ஹர்ஷா செய்துட்டு சொல்லுறேன். வாழ்த்துக்கள்

அன்பு ஈசியான குழம்பு பார்க்கவே சாப்பிடனும்னு தோனுது கைவசம் வாழைக்காயும் ரெடியா இருக்கு செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்.

அன்பு வாழைக்காய் குழம்பு செய்து சாப்பிட்டாச்சு ரொம்ப அருமையா இருந்துச்சிப்பா,குறிப்புக்கு மிக்க நன்றி, நொடியில் ரெடின்னு சொல்லுவாங்களே அப்படித்தான் இருந்தது அத்தனை சுலபம் :))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய்!!!

எப்படி இருக்கீங்க அன்பு?குட்டீஸ் எப்படி இருக்காங்க?தீபாவளி எப்படி போச்சுடா?

அருமையான குறிப்புகள் கொடுத்து அசத்திட்டிருக்கீங்க,கலக்குங்க,வாழ்த்துக்கள்மா.

போட்டோஸ் பிரமாதமாயிருக்கு அன்பு,குழம்பு சூப்பராயிருக்கும்

போலிருக்கே,விருப்ப பட்டியல்ல சேர்த்திட்டேன்டா.அருமையான குறிப்புக்கு

நன்றிகளும்,வாழ்த்துக்களும் அன்பு.

அன்புடன்
நித்திலா

சுந்தரி,
கட்டாயம் செய்து பாருங்க.பதிவுக்கு மிக்க நன்றி.

வினோஜா,
வாழைக்காயில் புளிக்குழம்பா?புதுசா இருக்கே.நீங்களும் செய்முறையை அறுசுவைக்கு அனுப்பலாமே.நாங்களும் தெரிஞ்சுக்குவோம் இல்லையா?பதிவுக்கு மிக்க நன்றி.

ஸ்வர்ணா,
சீக்கிரமா செய்து பார்த்துட்டு சொல்லுங்க.பதிவுக்கு மிக்க நன்றி.

நித்திலா,
எப்படி இருக்கீங்க?உங்க பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி.குட்டீஸ் நலம்.அடிக்கடி அறுசுவைக்கு வாங்க.உங்க பதிவு பார்க்க உற்சாகமா இருக்கு.குழம்பு செய்து பார்த்துட்டு பதிவு போடுங்க.மிக்க நன்றி நித்து.

ஹர்ஷா,
சுலபமான சுவையான குறிப்பு! படங்கள் அத்தனையும் அருமையா வந்திருக்கு. அதிலும் கடைசிப்படம், மாதுளை முத்துக்களை கறிவேப்பிலையில் வைத்திருப்பது அழகு! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ,
கைவசம் வீட்டில் இருந்தவற்றை கொண்டு அலங்கரித்தேன். :-)
உங்க பதிவுக்கும்,வாழத்துக்களுக்கும் மிக்க நன்றி.

சூப்பர் குழம்புங்க... இன்னைக்கு மதியம் இது தான் எங்க வீட்டில். முன்பே ஒரு முறை செய்திருக்கேன் ஆனா அப்போ பதிவிட முடியல. இன்று மீண்டும் செய்ததும் சொல்லியே ஆகனும்னு வந்தேன் ;) இனியும் தொடர்ந்து அப்பப்ப செய்வேன். நல்லா இருந்தது சுவை... என் குட்டீஸ்கும் பிடிச்சுது. மிக்க நன்றி ஹர்ஷா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா