ஸ்பெஷல் தோசை சந்தேகம் !!!! தோழிகளின் ஆலோசனை தேவை........................

நான் எப்போதும் தோசை மாவு தீரும் சமயத்தில், முளை கட்டிய பச்சை பயறு, பச்சை மிளகாய், ஜீரகம், உப்பு சேர்த்து மிக்ஸ்யில் அடித்து தோசை மாவுடன் சேர்த்து கலந்து தோசை செய்வது வழக்கம். நேற்று அவ்வாறு செய்யும் போது, நேற்று காலை உணவுக்காக வேக வைத்த பார்லி மீதம் இருந்தது அதை கலந்து தோசை செய்தால் தோசையில் முத்து, முத்தாக பார்லி தெரியும், பார்க்கவும் அழகாக இருக்கும் என்று நினைத்தேன். அதன்படி தோசை செய்ய ஆரம்பிக்கும் போது முன்பு சொல்லியது போல பச்சை பயறு, பச்சை மிளகாய், ஜீரகம், உப்பு சேர்த்து அதனுடன் சிறிது பார்லி கலந்து அரைத்து விட்டு (தவறு இங்கு தான் நடந்தது) மிதம் உள்ள பார்லியை முழுதாக தோசை மாவில் கலந்தேன்.
பின்னர் தோசை செய்ய முயலும் போது தோசை வார்க்க வராமல் கஞ்சி மாதிரி வருகின்றது. இவ்வளவு விஷயங்களையும் சேர்த்து அரைத்த சத்தான தோசை மாவை வீணாக்க விரும்பவில்லை.
தோழிகளின் ஆலோசனை தேவை......................
நன்றி !!!

paniyaram seithu parungal friend!!!

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கொஞ்சம் மாவு எடுத்து அதனுடன் மைதா அல்லது கோதுமை மாவு சேர்த்து தோசை ஊற்றி பாருங்கள். சரியா வந்தா மீதமுள்ள மாவையும் இதேமாதிரி செய்யலாம். சும்மா ஒரு ஐடியாதான் கொடுத்தேன் சரியா வருமானு தெரியல.தோழிங்க வருவாங்க.

ரவை கொஞ்சம் கலந்து பாருங்க... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பார்லி அரைச்சா அப்பிடித்தான் வரும். ;) இனி சரியாக்க ரவை தான் பெஸ்ட்.

இல்லாட்டா... ப்ரெட் க்ரம்ஸ் சேர்த்தாலும் சரிவரும். தோசை வார்க்கிறப்ப சேருங்க. முன்னால கலந்து வைக்க வேணாம். டெக்க்ஷர் எப்பிடி வரும் என்று சொல்லத் தெரியல. அது ஏற்கனவே நீங்க கலந்து வச்சிருக்கிற மிக்க்ஷரைப் பொறுத்தது.

திருப்பிப் போட வரலைன்னா... ஒரு முட்டை அடிச்சு கலந்துருங்க. கொஞ்சம் ஆலிவ் ஆயில் சேர்க்கலாம். இப்ப இருக்கிறதுக்கு மேல தண்ணி சேர்க்க வேணாம்.

முதல்ல கொஞ்சமா ட்ரை பண்ணுங்க.

எதுவும் சரிவரலைன்னா... ம்;;;;;;; (கண்ணை மூடி இமாஜின் பண்ணிப் பார்க்கிறேன்.) ;) ம். இன்னும் கொஞ்சம் தண்ணி + உப்பு சேர்த்து கஞ்சியாவே காய்ச்சி, பச்சைமிளகாய் கடிச்சுட்டு / ஊறுகாய் தொட்டுட்டு சூ...டா குடிச்சா நல்லா இருக்கும் என்று தோணுது.

//துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!// துணிஞ்சு ட்ரை பண்ணுங்க. வாழ்த்துக்கள். ;)

எது பண்ணினாலும், என்ன பண்ணீங்க, எப்பிடி வந்துதுன்னு மறக்காம வந்து சொல்லணும். ;)

‍- இமா க்றிஸ்

கொஞ்சம் கடலை பருப்பை கொர கொரப்பாக அரைத்து சேர்த்து பாருங்கல்.

Jaleelakamal

gomathimani82 - பணியாரம் நல்ல ஐடியா.

Priyasenthilthil - உங்க ஐடியா நல்ல இருக்கு, ஆனா எனக்கும், அவருக்கும் கோதுமை, மைதா தோசை பிடிக்காதே !!

Vanitha Vilvaar - உங்கள் ஐடியா எனக்கு ஒத்துவரும் முயற்சி செய்கிறேன்.

imma - நீங்களும் Vanitha Vilvaar சொன்னமாதிரி ரவை பற்றி சொல்லி இருக்கீங்க. இது எனக்கு ஒத்து வரும் என்று நினைக்கிறேன். முட்டை சரியான combination. நீங்க சொன்ன கஞ்சி செம்ம மேட்டர். முதல்ல இந்த தோசை சொதப்பிணப்ப அந்த பிஞ்சிபோன தோசையை சாப்பிட்டு பார்த்தேன், அது நம்ம ஊருல வடகம் போட ஒரு கூழ் செய்வாங்களே அது மாதிரி taste இருந்தது. அப்ப நான், கஞ்சி கரைச்சு சாப்பிடலாமா என்று நினைத்தேன். நீங்களும் அதேதான் சொல்கின்றீர்கள், பார்க்கலாம் முடிவு என்னனு. அது எப்படி, அந்த மாவோட கடைசி முடிவு என்னனு நம்ம அறுசுவை எக்ஸ்பெர்ட் மக்கள்கிட்ட சொல்லாமா.

Jaleela Banu - இன்று அடை மாவு அரைத்து விட்டு வந்திருகின்றேன், இன்று இரவு அதை இதனுடன் கொஞ்சம் கலந்து தோசை ஊற்றி பார்க்கிறேன்.

இதுவும் கடந்து போகும் !

//மாவோட கடைசி முடிவு என்னனு நம்ம அறுசுவை எக்ஸ்பெர்ட் மக்கள்கிட்ட சொல்லாமா.// ;) கட்டாயம் சொல்லணும். வேலை மினக்கெட்டு வந்து ஐடியா சொல்லி இருக்கோம்ல! ;)

நானும் ஜலீ சொன்ன கடலைப் பருப்பு ஐடியா நினைச்சேன். ஆனால் 'ட்ரையல்' என்கிறதால இன்னும் உங்க வேலையைக் கூட்ட வேணாம் என்று விட்டுட்டேன்.

‍- இமா க்றிஸ்

உங்கள் தலைப்பு ரொம்ப பிடிச்சிருக்கு.... //ஒரு தோசையின் முடிவு//

//மாவோட கடைசி முடிவு என்னனு நம்ம அறுசுவை எக்ஸ்பெர்ட் மக்கள்கிட்ட சொல்லாமா.//
அது "சொல்லாமா" இல்லை, டைப்பிங் மிஸ்டேக், "சொல்லாமலா" என்று திருத்தி படிக்கவும்.

இதுவும் கடந்து போகும் !

நான் தலைப்பை பார்த்து முடிவு தெரிஞ்சுடுச்சுன்னு ஓடோடி வந்தேன்... அநியாயமா இந்த சின்ன பொண்ணை ஏமாத்திட்டீங்களே... ;(

மகி... சீக்கிரம் சுட்டுட்டு வாங்க... :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதலில் கொஞ்சம் பார்லி கலந்த மாவு எடுத்து அதனுடன் ,இன்று அரைத்த அடை மாவு சேர்த்து தோசையும், அதற்கு தொட்டுக்கொள்ள அவியலும் செய்தேன். தோசை சக்சஸ் !!! எந்த விதமான வித்தியாசமும் இல்லாமல் மசாலா தோசை மாதிரி இருந்தது.
நாளை imma சொன்ன மாதிரி ரவை கலந்து மீதம் உள்ள மாவை ட்ரை பண்ணபோகின்றேன். மீண்டும் நாளை சந்திப்போமா...!!!

இதுவும் கடந்து போகும் !

மேலும் சில பதிவுகள்