எக்லெஸ் ப்ளைன் கேக்

தேதி: October 27, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (1 vote)

 

1. மைதா - 1 1/4 கப்
2. பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
3. பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
4. ஸ்வீட்டண்ட் கண்டென்ஸ்ட் மில்க் - 1/2 கேன் (7 அவுன்ஸ்)
5. பால் - 1/2 கப்
6. வென்னிலா எசன்ஸ் - 1 1/2 தேக்கரண்டி
7. வெஜிடபிள் ஆயில் - 1/2 கப்
8. வால் நட்ஸ் (அ) டூட்டி ஃப்ரூட்டி - சிறிதளவு


 

ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா சேர்த்து 2 அ 3 முறை சலித்துக் கொள்ளவும்.
அதன் நடுவே பள்ளம் செய்து,கண்டென்ஸ்ட் மில்க்,பால்,வென்னிலா எசன்ஸ் மற்றும் வெஜிடபிள் ஆயில் சேர்க்கவும்.
பிறகு இரண்டையும் கட்டியில்லாமல் கலக்கவும்.அதிகம் பீட் பண்ண வேண்டாம்.இந்த கலவை மிகவும் திக்காக தான் இருக்கும்.
இதனுடன் வால் நட்ஸை சிறு சிறு துண்டுகளாக உடைத்து சேர்த்துக் கொள்ளவும்.
வெண்ணெய் தடவி,மைதா மாவு பூசி தயாராக வைத்துள்ள பாத்திரம் அல்லது பேக்கிங் ட்ரேயில் இந்த கலவையை ஊற்றவும்.
350 டிகிரி ல் அவனை முற்சூடு செய்து,அதில் 25 முதல் 30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.கேக்கை மையப்பகுதியில் டூத் பிக் கொண்டு வெந்து விட்டதா என பார்த்துக் கொள்ளவும்.அதிகம் வெந்து விட்டால்,மேலே கடினமாகி விடும்.
சுவையான எக்லெஸ் ப்ளைன் கேக் தயார்.


பொதுவாக எக்லெஸ் கேக் உப்பாது.ஆனால் இந்த கேக் நன்கு உப்பி,மேலெழும்பும்.சாஃப்டாகவும் இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் ஹர்ஷா எப்படி இருகிகீங்க..?பேசியே நாளாச்சு.
எக்லெஸ் கேக் நானும் செய்திருக்கிறேன்.
செய்முறையில் ஒன்று மட்டும் வித்தியாசம்.
பட்டர் சேர்த்து செய்திருக்கின்றேன்.நீங்க வெஜிடபுள் ஆயில் சேர்த்து செய்திருக்கீங்க...
உடனே செய்து பார்க்கணும்னு தோணுது.எல்லா பொருட்களும் கையில் இருக்க ஓவன் இல்லையே...என்ன செய்ய...(இப்ப நான் ஊரில் செட்டில் ஆகி. இருப்பதால்...)
கேக்கை குக்கர்ல செய்திருப்பதாக சிலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்.
நல்ல குறிப்பை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா!
எப்படி இருக்கீங்க?உங்க பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி.இவ்வளவு தாமதமா பதில் போடுவதற்கு மன்னிக்கவும்.குழந்தைகள் நலமா?
ரொம்ப பிஸியா?அறுசுவைக்கு வாங்க.உங்களையும் உங்கள் குறிப்புகளையும் ரொம்ப மிஸ் பண்றோம்.குக்கர் கேக் செய்முறை அறுசுவையில் இருக்கே.இந்த லின்க் பாருங்க.
http://www.arusuvai.com/tamil/node/18575
http://www.arusuvai.com/tamil/node/20393

உங்க அன்பான பதிவுக்கு மிக்க நன்றி.