வெல்ல அதிரசம்

தேதி: October 28, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

1. பச்சரிசி - 4 ஆழாக்கு
2. வெல்லம் - 1/2 கி
3. ஏலக்காய் - 2
4. சுக்கு தூள் - சிறிது
5. எண்ணெய் - பொரிப்பதற்கு


 

பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.பின்பு தண்ணீரை வடித்து,மிக்சியில் போட்டு மாவாக அரைத்து,சலித்து வைக்கவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தை தூளாக்கி போட்டு,சிறிது தண்ணீர் சேர்த்து,பாகு காய்ச்சவும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து,அதில் ஒரு சொட்டு வெல்லப் பாகை விட்டால்,கையில் உருட்ட வர வேண்டும்.இது தான் பதம்.
இப்போது பாகை அடுப்பில் இருந்து இறக்கி வைத்துவிட்டு,ஈர பச்சரிசி மாவை சிறிது,சிறிதாக கொட்டி கிளறவும்.
இந்த கலவை சிறிது ஆறியதும்,சிறு சிறு உருண்டைகளாக எடுத்து,எண்ணெய் தடவியுள்ள வாழையிலை அல்லது பாலீத்தீன் பேப்பரில் தட்டி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும், தட்டி வைத்துள்ள மாவை போட்டு பொரித்தெடுக்கவும்.
பொரித்த அதிரசத்தை இரு சல்லி கரண்டிகள் நடுவே வைத்து அழுத்தி,எண்ணெயை பிழிந்து கொள்ளவும்.
சுவையான வெல்ல அதிரசம் தயார்.


இது எங்கள் வீட்டில் செய்யும் முறை.இம்முறையில் அதிரச மாவை உடனே சுட்டு கொள்ளலாம்.பொரித்த அதிரசங்களில் உள்ள எண்ணெயை பிழிய அதற்கென்ற ஒரு ’அமுக்கி’

இருக்கும்.முக்காலியுடன் கூடிய அந்த அமுக்கி அரச இலை அல்லது வெற்றிலை வடிவில் இருக்கும்.கூரான முனையின் கீழ் ஒரு கிண்ணத்தை வைத்து,வெளிவரும் எண்ணெயை அதில்

பிடித்துக் கொள்ளலாம்.இது பலருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு, இன்று வெல்ல அதிரசம் செய்தேன் பா (பொறுமையாக ;)) முதல் நாள் சரியாக வரலை. நான் பாகு எடுத்த விதத்தில் ஏதோ மிஸ்டேக் போல. பொறுத்திருந்து மறுநாள் வைத்து சுட்டேன். சூப்பராக வந்தது. எதையோ பெருசா அச்சீவ் பண்ண பீலிங் தான் போங்க ;) பின்னே அதிரசம் சரியா சுடுறது எவ்ளோ பெரிய விஷயம். அதை நான் 2வது முறைல சரியா செய்திருக்கேன். அதுவும் உங்க குறிப்பபை பார்த்து. அதற்கே உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும். தேங்க்ஸ் அன்பு.. வாழ்த்துக்கள்

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.