ஜவ்வரிசி போண்டா

தேதி: June 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஜவ்வரிசி - 1 கப்
புளித்த தயிர் - 1 கப்
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 1/4 கப்
உப்பு - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்
துருவிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 கப்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை


 

ஜவ்வரிசியுடன் உப்பு மற்றும் தயிர் சேர்த்து 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் அதனுடன் பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், சேர்த்து கெட்டியாக கலக்கவும்.
இட்லி மாவை விட கெட்டியாக இருக்க வேண்டும்.
எண்ணெயைக் காய வைத்து இந்த ஜவ்வரிசி மாவை சிறு சிறு போண்டாக்களாக போட்டு, போண்டாக்கள் சிவந்தவுடன் எடுத்து பரிமாற வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்