பீட்ஸா

தேதி: October 29, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.9 (14 votes)

 

மைதா - 4 கப்
ஈஸ்ட் - 5 கிராம்
சர்க்கரை - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
ஆயில் - தேவைக்கு
டாப்பிங் செய்ய:
பீட்ஸா சாஸ் - தேவைக்கு
தக்காளி - ஒன்று
பெரிய வெங்காயம் - பாதி
காரட் - ஒன்று
குடை மிளகாய் - பாதி
பச்சை மிளகாய் - ஒன்று
துருவிய சீஸ் - தேவைக்கு


 

காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 200 ML தண்ணீரை சிறிது சூடாக்கி அதில் ஈஸ்ட், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கவும். பின் ஒரு கப் மைதாவை சேர்த்து நன்கு கலக்கிக் (பாயாசம் பதத்தில்) கொள்ளவும். அந்த கலவையை 10 நிமிடம் எடுத்து வைக்கவும்.
10 நிமிடம் கழித்து, 3 கப் மைதாவில் 4 தேக்கரண்டி ஆயில் ஊற்றி, கலக்கி வைத்த கலவையை சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பரோட்டாவுக்கு பிசையும் மாவை விட சற்று மிருதுவாக பிசைய வேண்டும்.
பின் பிசைந்த மாவினை ஒரு ஈரத் துணியை கொண்டு மூடி ஒரு மணி நேரம் நன்றாக ஈஸ்ட் ஃபார்ம் ஆகும்படி ஊற விடவும்.
ஒரு மணி நேரம் கழித்து மாவினை எடுத்து பார்க்கும் போது அது இருமடங்காக அதிகரித்து இருக்கும். மாவினை வெளியே எடுத்து மீண்டும் நன்றாக பிசையவும். கையில் ஒட்டினால் சிறிது உலர்ந்த மாவினை சேர்த்து பிசையலாம். இதனால் மாவில் இருக்கும் காற்று வெளியேறிவிடும். பின் மீண்டும் ஒரு 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். மாவை தேய்த்தால் தானாக அது சுருங்குமளவு பதத்தில் மிருதுவாக இருக்க வேண்டும்.
1/2 மணி நேரம் கழித்து, அவன் ட்ரேயில் மாவை போட்டு சமமாக கையிலேயே விரித்து விடவும். ஓரங்களில் விரலால் ஒரே மாதிரியாக அழுத்தி விடவும்.
பின் பீட்ஸா சாஸை தேவையான அளவு ஸ்பூனால் தடவவும்.
பின் காய்கறிகளை ஒன்றின் பின் ஒன்றாக தூவவும்.
துருவிய சீஸை தேவையான அளவு பரப்பி விடவும். பின் சிறிது ஆயிலை சீஸ் மேல் ஆங்காங்கே சேர்க்கவும். பின் பீட்ஸாவின் ஓரங்களிலும் ஆயிலை தடவி விடவும் இதனால் வேகும் போது கிறிஸ்பியாக ஆகும்.
பின் ட்ரேவை எலக்ட்ரிக் அடுப்பின் மேல் ஸிம்மில் வைத்து சூடாக்கவும். ஃப்ளேம் கொண்ட அடுப்பு எனில் ஃபுல் ஃப்ளேமில் தோசை கல்லை வைத்து அதன் மேல் ட்ரேவை வைக்கவும். ட்ரே நன்கு சூடானதும் எடுத்து விடவும். இதனால் பீட்ஸாவின் அடிபாகம் சரியான முறையில் வேகும்.
பின் அவனில் 475க்கு முற்சூடு செய்து பீட்ஸா ட்ரேவை 10 நிமிடம் உள்ளே வைக்கவும்.
பீட்ஸாவின் ஓரங்கள் பொன்னிறத்தில் மாறி, சீஸ் காய்கறிகளுடன் நன்கு கலந்திருக்கும் போது வெளியே எடுக்கவும்.
க்ரிஸ்பி மற்றும் சாஃப்டான பீட்ஸா ரெடி. 10 நிமிடம் கழித்து, வெட்டி பரிமாறவும்.

டாப்பிங் நம் விருப்பத்திற்கேற்ப செய்யலாம். அசைவமும் சேர்க்கலாம். பீட்ஸா சாஸ் செய்ய 5 தக்காளியை கீறி வேக வைத்து எடுத்து தோலுரித்துக் கொள்ளவும். மூன்றை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். மற்ற இரண்டு தக்காளி, ஒரு குடை மிளகாய், 7 பூண்டுகளை நன்கு பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் பேனில் எண்ணெய் ஊற்றி குடை மிளகாய் மற்றும் பூண்டை சேர்த்து நன்கு வதக்கி பின் அரைத்த, நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு பச்சை வாசம் போக வதக்கவும். பின் தேவையான உப்பும், ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் சேர்த்து கிளறி இறக்கினால் சாஸ் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரம்யாக்கா சூப்பர். பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு. நல்ல குறிப்பு. வாழ்த்துக்கள்.

யம்மி யம்மி பிட்ஸா ரம்ஸ்... :) ரொம்ப சுலபமாவும் இருக்கு... நான் இதுவரைக்கும் செய்ததில்லை... கண்டிப்பா செய்து பார்க்கணும்-னு இருக்கு... வாழ்த்துக்கள்...

வித்யா பிரவீன்குமார்... :)

eppadi pa ungalamattum ebdi differenta tips thara mudiyathu aathathuranga pongaaaaaa....but oven than illa.... paa

பார்க்கவே அழகா இருக்கு வாழ்த்துகள் இதுவரை பிட்ஸா சாப்பிடணும் தோணல இப்ப உங்க முறையை பார்த்ததும் சாப்பிட தோணுது ட்ரை பண்ணி பாக்கறேன் வாழ்த்துகள் ரம்யா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரம்ஸ் செம சூப்பர்ப்பா,பீட்ஸா செம கலர்ஃபுல் :) நான் இதுவரை பேக்கரியில் பீட்ஸா பேஸ் வாங்கிதான் செய்துருக்கேன் இனி நானே செய்துட வேண்டியதுதான்..:) வாழ்த்துக்கள் ரம்ஸ்..

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Super & very nice

ஆஹா...,அருமையான பீட்ஸாவோட வந்திருக்கீங்க ரம்யா...
பார்க்கும் போதே சாப்பிட தோணும் அளவிற்க்கு கலர்ஃபுல்லா இருக்குங்க.
நானும் ஒரு முறை செய்துள்ளேன்.அதன் பேஸ் கொஞ்சம் திக்காக ஆயிடுச்சு.
ஆனால் சாஃப்ட்டா வந்தது.
இப்ப உங்க குறிப்பை பார்க்கவும் மறுபடியும் செய்து பார்க்க தோணுது.ஆனால் முடியாது இப்போது என் கைவசம் அவன் இல்லையே...
சூப்பரான பிட்ஸா செய்துகாட்டி எங்களிடம் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ரம்யா.

பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் பல.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சம சூப்பர்... அப்படியே கடை பீஸா போல... கலரும் அதுவும் சூப்பரா இருக்குங்க. பார்த்துட்டே இருக்கலாம்... விளக்கமும் ரொம்ப தெளிவா, புரியும்படி அட்டகாசமா இருக்கு பீஸா மொத்தத்தில். சூப்பர்... ரொம்ப சூப்பர். கலக்கிட்டீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ் ரம்ஸ் செம செம செமயான குறிப்பு;-)

இந்த வீக்கெண்டுக்கு வர குட்டீஸுக்கு உங்க பீட்சாவ செஞ்சு ரோஹித் அம்மாதான் பெஸ்ட்டுன்னு பேரு வாங்கப்போறேன் ;-) அட்டகாசமான சூப்பர் குறிப்புக்கு தேங்ஸ் ரம்ஸ்;-)

Don't Worry Be Happy.

ரம்ஸ்,
ஆஹா...சூப்பரான பீட்ஸா.கலர்ஃபுல்லா சாப்பிட கூப்பிடுது.;-)ரொம்ப அழகா செய்து இருக்கீங்க.பீட்ஸா வீட்டிலேயே செய்வது பெரிய விஷயம்தான்.அதற்காகவே பாராட்டணும்.அட்டகாசமான குறிப்பு.அருமையா செய்து காட்டியிருக்கீங்க.டிப்ஸ்களும் சூப்பர்.வாழ்த்துக்கள் ரம்ஸ்.

சூப்..பரா இருக்கு ரம்ஸ்.

‍- இமா க்றிஸ்

பீட்ஸா, சூப்பரோ சூப்பர் ரம்ஸ்! கலக்கிட்டிங்க! :)

எனக்கு 'அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே'ன்னு பாடனும்போல இருக்கு! :) கல்யாணம் ஆன புதிதில், இந்த மாதிரி ஸ்கிராட்சில் இருந்து பீட்ஸா, வீட்டிலே செய்து பார்த்திருக்கேன்!. இப்பெல்லாம் 'டேக் அவுட்' ஆகிப்போச்சு! படங்களும், உங்க பீட்ஸா போலவே, அருமையா வந்திருக்கு ரம்ஸ்! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

பிட்ஸா சூப்பர் ரம்யா.என் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.கடையில் தான் வாங்க முடியும் வீட்டில் செய்வது ரொம்ப கஷ்டம் என நினைத்திருந்தேன்.இப்ப அருமையன விளக்கத்துடனும் கலர்புல்லான படத்துடனும் செய்து காமிச்சிட்டீங்க.கட்டாயம் என் குட்டிஸ்க்கு செய்து காட்டி அசத்தப்போறேன்,வாழ்த்துக்கள் ரம்ஸ்.

tks for ur pizza recipe ramya,i was waiting for this as my daughter is great fan of pizza.it was a very clear,neat discription

ஹாய்! உங்கள் பீட்சா ரொம்ப அருமையாக இருக்கிறது. வாழ்த்துகள்.
டோப்பிங்கிட்கு ஒலிவ் முஷ் ரூம் அன்னாசி என்பன
மேலதிகமாக சேர்த்து தான் நாங்கள் செய்கிறோம். மிக நன்றாக இருக்கும்

நன்றி
எனது குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி

நஸீம்
ரொம்ப நன்றி :)

விது
செய்து பார்த்து சொல்லுங்க டா ;)

சத்யா
பீஸாவை ஓவன் இல்லாம செய்ய முடியாது. பார்த்து சொல்கிறேன்.. நன்றி ;)

ரேணுதேவா
கண்டிப்பா செய்து பாருங்க. ரொம்ப சுலபம். வாழ்த்துக்கள் ;)

ஸ்வரு
கண்டிப்பா செய்து பாருங்க. பரோட்டா போல தான் ..ஈஸ்ட் மட்டும் கொஞ்சம் சேர்க்கனும். நன்றி ;)

கௌதமி
ரொம்ப நன்றி ;)

அப்சரா
ரொம்ப நன்றி ..எப்படி எல்லாருக்கும் இத்தனை பெரிய கமண்ட்ஸ் போட முடியுது உங்களால் மட்டும். முடியும் போது மீண்டும் செய்து பாருங்க.. நன்றி :)

வனி
ரொம்ப ரொம்ப நன்றி வனி. அடிக்கடி வீட்டில் செய்யப்படும் ஒரு டிஷ் தான். பீஸாகாரனை விட அதிகமா நான் தான் செய்கிறேன் என நினைக்கிறேன். ;)

ஜெய்
கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க ஜெய்..
நன்றி டா :)

ஹர்ஷு
ரொம்ப நன்றி டா.. மிகவும் சுலபம் தாண்டா.. நீங்க செய்யும் கேக்கைவிட ஈஸி தான் :).. செய்து பாருங்க. நன்றி :)

இமா
மிக்க நன்றி :)

சுஜா
ரொம்ப நன்றி டா.. நான் சும்மா இருக்கேன். அதான் ரைட் ஃப்ரம் தி ஸ்க்ராட்ச்.. செய்து பார்த்து சொல்லுங்கோ ;)

சுந்தரி
கண்டிப்பா செய்து பார்த்து பாப்பா என்ன சொன்னாங்கனும் சொலுங்க. நன்றி டா :)

ரமா
ரொம்ப நன்றி.. செய்து பார்த்து சொல்லுங்க ;)

ஈஸன்
ரொம்ப நன்றிங்க.. எனக்கு ஆலிவ் மற்றும் பனானா பெப்பர் பிடிக்காது..ஏதோ கெமிக்கல் மாதிரி ஒரு ஸ்மெல். ஆலிவ் சாப்பிட பழகுறேன். பைனாப்பிள் ஸ்வீட் என்பதால் சேர்க்கலை.. மேலும் மஷ்ரூம் இருந்தால் தாரள்ம் சேர்க்கலாம்.எனக்கும் பிடிக்கும் ;)..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பார்க்கவே கலர் புல்லா இருக்கு. வாழ்த்துகள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரொம்ப நல்லா இருக்கு பார்க்க... எனக்கு பீட்ஸா பிடிக்கும். ஆனா ஓவன் வேணும் செய்ய வாங்குனதும் செய்றேன்... இப்ப விருப்பப்பட்டியல்ல சேர்த்தாச்சு...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

your pizza looking yummy.

http://www.vahrehvah.com/popvideo.php?recipe_id=289

its also a nice video for making pizza.

நன்றீ

ரேவதி
ரொம்ப நன்றி ;)

மீனு
ரொம்ப நன்றிங்க. வாங்கி செய்து பாருங்க ;)

திவ்யா
ரொம்ப நன்றி.. பல குறிப்புகள் அங்கே இங்கே பார்த்தது, கேட்டது, தானா தோனுவதுனு இங்கே வெளியிடப்படுவது தான் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா...சூப்பர் பிஸ்ஸா..பார்க்கவே அருமையா இருக்கு....என்ன கலர்....என்ன அழகு...சாப்பிட்டு ஏப்பமே விட்டாச்சு!!வாழ்த்துக்கள்...

I tried this today....it came very nice....thank you for ur nice recipe and thanks to arusuvai....