வேர்க்கடலை-பட்டாணி மசாலா

தேதி: July 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சை வேர்க்கடலை - 1 கப்
பட்டாணி - 1/2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 4
மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு - 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
பட்டை - 1
சீரகம் - 1/2 டீஸ்பூன்
நெய் - 4 டேபிள்ஸ்பூன்


 

வேர்க்கடலை, பட்டாணியை சிறிது உப்பு சேர்த்து வேக வையுங்கள்.
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.
எண்ணெயைக் காய வைத்து பட்டை, சீரகம், தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.
பின்னர் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு, தக்காளி சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கி வேர்க்கடலை, பட்டாணி சேர்த்து கிளறி இறக்குங்கள்.
சூடாகப் பரிமாறுங்கள்.


மேலும் சில குறிப்புகள்