சிம்பிள் மட்டன் பிரட்டல்

தேதி: October 31, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மட்டன் - கால் கிலோ
காய்ந்த மிளகாய் - நான்கு
பட்டை - ஒரு இன்ச் அளவு
ஏலக்காய் - இரண்டு
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப


 

இதற்க்கு அதிகம் எலும்பில்லாத மட்டனாக இருந்தால் நன்றாக இருக்கும்.
மட்டனை சிறு சிறு துண்டுகளாக்கி நன்கு சுத்தமாக கழுவிக்கொள்ளவும்.
ஒரு சிறிய குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை ஏலக்காய் போட்டு,காய்ந்த மிளகாயை சிறியதாக கிள்ளியும் சேர்த்து தாளித்து பின்பு மட்டனை அதில் சேர்த்து கிளறவும்.
பிறகு மஞ்சள்த்தூளையும் சேர்த்து பிரட்டவும்.
மட்டன் தண்ணீர் விடும்.தேவைக்கேற்ப உப்பையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு நிமிடம் கழித்து சிறிதளவே தண்ணீர் தெளித்து குக்கரை மூடி வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும் மிதமான தீயில் வைத்து பத்து நிமிடம் கழித்து இறக்கவும்.
ஸ்டீம் விட்டதும் குக்கரை திறந்து மட்டன் தண்ணீராக இல்லாமல் சுக்காவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.தண்ணீர் இருந்தால் அடுப்பில் வைத்து சுண்ட விடவும்.
இது தயிர் சாதம்,எலுமிச்சை சாதம்,சாம்பார்மற்றும் ரசம் சாதம் என்று எல்லாவற்றிற்க்கும் தொட்டுக்கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.


இந்த செய்முறையில் மண்சட்டியில் செய்துதான் ஃப்ரிட்ஜ் இல்லாத காலங்களில் மட்டனை ஸ்டோர் செய்து வைத்திருப்பார்கள்.அரை வேக்காடு முதலில் வேக வைத்திருப்பார்கள்.காலை மாலை என சூடு படுத்த சூடு படுத்த மட்டனும் நன்கு வெந்து இருக்கும்.டேஸ்ட்டும் சூப்பராக நல்ல மணமுடன் இருக்கும்.எங்களுடைய பக்ரீத் பண்டிகை காலங்களில் தான் இம்முறை அதிகம் எங்கள் வீடுகளில் கைய்யாளப்பட்டிருந்தது.இப்போது அதுவே ஒரு டிஷ்ஷாகதான் ஓடிக்கொண்டிருக்கின்றது.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஈஸியான குறிப்பு வாழ்த்துகள் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்